எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முதல்கட்ட முன்பதிவு நாளை முடிகிறது

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முதல்கட்ட முன்பதிவு நாளை முடிவடைகிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முதல்கட்ட முன்பதிவு நாளை முடிகிறது

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் ஹெக்டர் காருடன் இந்தியாவில் பிரபலமான கார் பிராண்டாக மாறி இருக்கிறது. இரண்டாவது கார் மாடலாக இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முதல்கட்ட முன்பதிவு நாளை முடிகிறது

இந்த புதிய எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு கடந்த மாதம் 21ந் தேதி துவங்கப்பட்டது. ரூ.50,000 முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முதல்கட்ட முன்பதிவு நாளை முடிகிறது

முதலில் முன்பதிவு செய்யும் முதல் 1,000 வாடிக்கையாளர்களுக்கு அறிமுகச் சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் எம்ஜி மோட்டார்ஸ் அறிவித்தது. டெல்லி, மும்பை, ஆமதாபாத், பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய 5 நகரங்களில் மட்டுமே முதல்கட்டமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முதல்கட்ட முன்பதிவு நாளை முடிகிறது

இந்தநிலையில், எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முதல்கட்ட முன்பதிவு நாளை முடிவடைய உள்ளது. இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளபடி, டெலிவிரி கொடுக்கப்படும்.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முதல்கட்ட முன்பதிவு நாளை முடிகிறது

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் வசதிகளை பொறுத்து எக்ஸ்சைட் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் என இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முதல்கட்ட முன்பதிவு நாளை முடிகிறது

இந்த காரில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், க்ரூஸ் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், நவீன காற்று சுத்திகரிப்பு வசதியை வழங்கும் பிஎம் 2.5 ஃபில்டர் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முதல்கட்ட முன்பதிவு நாளை முடிகிறது

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரில் 44.5kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு இருக்கிறது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 340 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முதல்கட்ட முன்பதிவு நாளை முடிகிறது

இந்த காரில் இருக்கும் பேட்டரி மற்றும் மின் மோட்டார் இணைந்து அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 8.5 வினாடிகளில் எட்டிவிடும்.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முதல்கட்ட முன்பதிவு நாளை முடிகிறது

இந்த காரின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான 5 விதமான வழிமுறைகளை எம்ஜி மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. குறிப்பாக, 50kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக சார்ஜ் செய்தால் 50 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும்.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முதல்கட்ட முன்பதிவு நாளை முடிகிறது

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் ரூ.22 லட்சம் முதல் ரூ.25 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
MG ZS electric car pre bookings and introductory price offer will be closed on 17th January 2020.
Story first published: Thursday, January 16, 2020, 9:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X