Just In
- 29 min ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- 1 hr ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 1 hr ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 2 hrs ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
Don't Miss!
- News ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Movies Actor Vikram: விக்ரம் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. அறிவித்த படக்குழு!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இமாலய எண்ணிக்கையில் குவிந்த புக்கிங்... எவ்வளவு தெரியுமா?
எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இமாலய எண்ணிக்கையில் புக்கிங் குவிந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது காரான இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி வரலாறு காணாத வகையில் முன்பதிவுகளை குவித்துள்ளது. இந்த கார் இன்னும் விற்பனைக்கே அறிமுகம் செய்யப்படவில்லை. விலையும் கூட இன்னும் அறிவிக்கப்படவில்லை. அப்படி இருக்கையிலேயே முன்பதிவுகளில் வரலாறு படைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம், ஹெக்டர் எஸ்யூவி காரை அறிமுகம் செய்ததன் மூலமாக கடந்த ஜூன் மாதம் இந்திய மார்க்கெட்டில் காலடி எடுத்து வைத்தது. சவாலான விலை நிர்ணயம் மற்றும் அட்டகாசமான வசதிகள் உள்பட பல்வேறு காரணங்களால், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர்.
எம்ஜி மோட்டார் நிறுவனம் தற்போது இந்திய மார்க்கெட்டில் தனது 2வது தயாரிப்பான இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் வரும் ஜனவரி 23ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. முதலில் வரும் ஜனவரி 27ம் தேதிதான் இந்த காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் எம்ஜி மோட்டார் நிறுவனம் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை முன்கூட்டியே விற்பனைக்கு அறிமுகம் செய்வது என முடிவெடுத்துள்ளது. எனவே முன்பு திட்டமிட்டிருந்தை காட்டிலும் 4 நாட்களுக்கு முன்னதாகவே எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வரவுள்ளது. முன்னதாக எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கான புக்கிங் கடந்த டிசம்பர் 21ம் தேதி தொடங்கியது.
டெல்லி, மும்பை, அகமதாபாத், பெங்களூர் மற்றும் ஐதராபாத் ஆகிய 5 நகரங்களில் மட்டும் 50 ஆயிரம் ரூபாய் முன்பணத்துடன் புக்கிங் ஏற்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நேற்றுடன் (ஜனவரி 17) முதற்கட்ட முன்பதிவு முடிவடைந்தது. எனவே இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கான முன்பதிவு எண்ணிக்கைளை எம்ஜி மோட்டார் வெளியிட்டுள்ளது.
இதன்படி 2,100க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி வாரி குவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவில் தற்போதுதான் எலெக்ட்ரிக் கார்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலம் அடைந்து வருகின்றன. அப்படி இருக்கையில் இந்த முன்பதிவு எண்ணிக்கை உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம்தான்.
அதுவும் விலை என்னவென்றே தெரியாத சூழலிலேயே இவ்வளவு பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விலை மட்டும் சரியாக நிர்ணயம் செய்யப்பட்டால், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி நிச்சயமாக புதிய வரலாறு படைக்கும். எம்ஜி நிறுவனத்தின் முதல் காரான ஹெக்டரை போலவே, இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரும் விற்பனையில் புதிய சாதனைகளை படைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
மிகவும் கடுமையான பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலை உயர்ந்து வருகிறது. அதே சமயத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அரசு மானியங்களையும், பல்வேறு சலுகைகளையும் கொடுக்கிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனம் திரும்பி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில் வரவுள்ள எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு விலை நிர்ணயம் மட்டும் சரியாக செய்யப்பட்டால், விற்பனையில் கண்டிப்பாக புதிய சாதனைகளை படைக்கும். அதே நேரத்தில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் 20 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் விலை அறிவிக்கப்படும். முன்னதாக இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரை வெளியிட்டபோது, எம்ஜி நிறுவனம் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. முதலில் முன்பதிவு செய்யும் 1,000 வாடிக்கையாளர்களுக்கு இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுக சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் என அப்போது எம்ஜி நிறுவனம் அறிவித்திருந்தது.
இதன்படி அந்த வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமான அறிமுக சலுகையில் விலையில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கிடைக்கவுள்ளது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவுடன், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி மட்டுமே நேரடி போட்டியாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அதே சமயம் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரும், எம்ஜி இஸட்எஸ் காருக்கு போட்டியாக இருக்கலாம். எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 44.5kWh லித்தியம்-அயான் பேட்டரி வழங்கப்படுகிறது. இதன் மின் மோட்டார் அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.
எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 340 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். இது நல்ல ரேஞ்ச்தான். அதே சமயம் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி 8.5 வினாடிகளில் எட்டி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!