விற்பனையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை போட்டுத் தாக்கும் எம்ஜி இசட்எஸ் கார்!

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை விற்பனையில் பெரிய அளவிலான வித்தியாசத்தில் விஞ்சியுள்ளது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார். கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விற்பனையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை விஞ்சிய எம்ஜி இசட்எஸ் கார்!

கடந்த ஆண்டு ஹெக்டர் எஸ்யூவியுடன் இந்தியாவில் கால் பதித்த எம்ஜி மோட்டார் நிறுவனம் இரண்டாவது மாடலாக இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு கொண்டு வந்தது. ஹெக்டர் எஸ்யூவிக்கு கிடைத்த அதே அளவு வரவேற்பை எலெக்ட்ரிக் கார் சந்தையில் பெற்றிருக்கிறது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்.

விற்பனையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை விஞ்சிய எம்ஜி இசட்எஸ் கார்!

அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து 3,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்று அசத்தியது. அத்துடன், கடந்த மாதத்தில் மட்டும் 158 இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விற்பனையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை விஞ்சிய எம்ஜி இசட்எஸ் கார்!

கடந்த ஆண்டு ஜூலையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை விற்பனையில் விஞ்சி உள்ளது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்.

விற்பனையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை விஞ்சிய எம்ஜி இசட்எஸ் கார்!

கடந்த மாதம் 32 ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையான நிலையில், அதைவிட 5 மடங்கு கூடுதல் எண்ணிக்கையில் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனையாகி இருக்கிறது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுவதே விற்பனை குறைவாக இருப்பதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

விற்பனையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை விஞ்சிய எம்ஜி இசட்எஸ் கார்!

இருப்பினும், எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான வரவேற்பு மிக சிறப்பாக அமைந்துள்ளது. மேலும், எலெக்ட்ரிக் கார்களின் பக்கம் இந்தியர்களின் கவனம் வெகுவாக திரும்பி இருப்பதை இந்த விற்பனை எண்ணிக்கை காட்டுவதாக அமைந்துள்ளது.

விற்பனையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை விஞ்சிய எம்ஜி இசட்எஸ் கார்!

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சிறப்பாக இருப்பதற்கு, சிறப்பான டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகள், சிறப்பான ரேஞ்ச் ஆகியவை குறிப்பிட்டு கூறலாம். அதேபோன்று, ஹூண்டாய் கோனோ எலெக்ட்ரிக் காரைவிட விலை குறைவாக கிடைக்கிறது.

விற்பனையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை விஞ்சிய எம்ஜி இசட்எஸ் கார்!

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரில் 44.5kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் மின் மோட்டார் 143 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டிரைவிங் மோடுகளும் உள்ளன.

விற்பனையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை விஞ்சிய எம்ஜி இசட்எஸ் கார்!

பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 340 கிமீ தூரம் வரை பயணிக்கும். 0 - 100 கிமீ வேகத்தை 8.5 வினாடிகளில் எட்டிவிடும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 6 முதல் 8 மணிநேரம் பிடிக்கும்.

விற்பனையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை விஞ்சிய எம்ஜி இசட்எஸ் கார்!

இந்த காருக்கு 50kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் கூட வழங்கப்படுகிறது. இந்த சார்ஜர் மூலமாக பேட்டரியை 50 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும்.

விற்பனையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை விஞ்சிய எம்ஜி இசட்எஸ் கார்!

இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், 17 அங்குல மெஷின் கட் அலாய் வீல்கள், 20.32 செமீ தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இன்டர்நெட் வசதி, 8.9 செமீ அளவுடைய மல்டி இன்ஃபர்மேஷன் திரை, இரட்டை சன்ரூஃப் அமைப்பு, ஏர் பியூரிஃபயர் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.

விற்பனையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை விஞ்சிய எம்ஜி இசட்எஸ் கார்!

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு ரூ.20.88 லட்சம் முதல் ரூ.23.58 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த காருக்கு சிறப்பான வாரண்டி காலம், சாலை அவசர உதவி திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, March 9, 2020, 11:17 [IST]
English summary
British car maker, MG has dispatched 158 units of ZS EV in Feb, 2020.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+