எம்ஜி இசட்எஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

எம்ஜி இசட்எஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிட்சைஸ் எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக வர இருக்கும் இந்த புதிய மாடல் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

எம்ஜி இசட்எஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் அறிமுகம்!

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய கார் சந்தையில் பல புதிய மாடல்களை அறிமுகம் செய்து வலுவான வர்த்தகத்தை பெற முனைந்து வருகிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹெக்டர் எஸ்யூவியும், அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கும் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

எம்ஜி இசட்எஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் அறிமுகம்!

இந்த சூழலில், இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை தொடர்ந்து, அதன் பெட்ரோல் மாடலையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது. அதன்படி, இசட்எஸ் பெட்ரோல் எஸ்யூவியை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி உள்ளது எம்ஜி மோட்டார்.

எம்ஜி இசட்எஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் அறிமுகம்!

ஆட்டோ எக்ஸ்போ வரும் பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த இசட்எஸ் பெட்ரோல் மாடலுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கிறது என்பதை பார்த்து முடிவு செய்வதற்கு எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது. எனினும், மிட்சைஸ் எஸ்யூவி சந்தையை குறிவைத்து ஒரு மாடலை நிலைநிறுத்தும் விதமாக இந்த மாடலை எம்ஜி கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி இசட்எஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் அறிமுகம்!

வெளிநாடுகளில் எம்ஜி இசட்எஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் இரண்டு எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த காரில் 1.5 லிட்டர் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் உள்ளன. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

எம்ஜி இசட்எஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் அறிமுகம்!

இதன் மற்றொரு 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 161 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும். இந்தியாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும் என தெரிகிறது.

எம்ஜி இசட்எஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் அறிமுகம்!

அண்மையில் வந்த எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் இருப்பது போன்றே, ஸ்கை ரூஃப் என்ற பெரிய அளவிலான கண்ணாடி கூரை, 10.1 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல், கீ லெஸ் என்ட்ரி, ஸ்மார்ட் கீ வசதி, ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டம் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.

எம்ஜி இசட்எஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் அறிமுகம்!

அதேபோன்று, ஆறு ஏர்பேக்குகளுடன் கூடிய பாதுகாப்பு, இபிடியுடன் ஏபிஎஸ் பிரேக்கங் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் வசதிகளையும் பெற்றிருக்கிறது.

எம்ஜி இசட்எஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் அறிமுகம்!

அடுத்த ஆண்டு எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 6, 2020, 11:49 [IST]
English summary
British car maker, MG Motor has showcased ZS Petrol Model at the ongoing auto expo in Greater Noida.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+