மினி க்ளப்மேன் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

மினி க்ளப்மேன் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மினி க்ளப்மேன் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் மினி நிறுவனத்தின் கார்கள் தனித்துவமான தேர்வாக இருந்து வருகின்றன. இந்தநிலையில், இந்தியர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும் வகையில், மினி க்ளப்மேன் காரின் சிறப்பு பதிப்பு மாடல் கொண்டு வரப்பட்டுள்ளது. மினி க்ளப்மேன் இந்தியன் சம்மர் ரெட் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் வந்துள்ளது.

மினி க்ளப்மேன் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

மொத்தமாகவே 15 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கின்றன. வரும் 15ந் தேதி அமேஸான் மூலமாக ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

மினி க்ளப்மேன் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

மினி க்ளப்மேன் இந்தியன் சம்மர் ரெட் எடிசன் மாடலானது விசேஷமான வண்ணத் தேர்வில் பியானோ பிளாக் என்ற பளபளப்பான கருப்பு வண்ண பாகங்களுடன் அலங்காரமாக வந்துள்ளது.

மினி க்ளப்மேன் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

இந்த காரில் புதிய முகப்பு க்ரில் அமைப்பு, வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லைட்டுகள், பனி விளக்குகள், புதிய சைடு மிரர்கள், எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

மினி க்ளப்மேன் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

இந்த காரில் எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் மற்றும் மெமரி வசதியுடன் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், மல்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், பனோரமிக் சன்ரூஃப், 6.5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

மினி க்ளப்மேன் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

இந்த காரின் எக்ஸைட்மென்ட் பேக்கில் கூடுதலாக எல்இடி இன்டீரியர் விளக்குகள், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், மினி லோகோவை தரையில் காட்டும் வகையிலான படுல் லைட்டுகள் ஆகியவையும் சிறப்பு சேர்க்கின்றன.

மினி க்ளப்மேன் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

புதிய மினி க்ளப்மேன் காரில் 2.0 லிட்டர் ட்வின்டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

மினி க்ளப்மேன் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

இந்த எஞ்சின் 0 - 100 கிமீ வேகத்தை 7.2 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 228 கிமீ வேகம் வரை செல்லும் திறன் பெற்றஇருக்கிறது. இந்த காரில் பல டிரைவிங் மோடுகளும் உள்ளன.

மினி க்ளப்மேன் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

மினி க்ளப்மேன் இந்தியன் சம்மர் ரெட் எடிசன் மாடலில் பல ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட், த்ரி பாயிண்ட் சீட்பெல்ட்டுகள், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், ரன் ஃப்ளாட் இண்டிகேட்டர், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் கேமரா ஆகியவை உள்ளன.

மினி க்ளப்மேன் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் அறிமுகம்!

புதிய மினி க்ளப்மேன் இந்தியன் சம்மர் ரெட் எடிசன் மாடலுக்கு ரூ.44.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் தனித்துவமான தேர்வாக அமையும்.

More from DriveSpark

Article Published On: Friday, February 14, 2020, 13:23 [IST]
English summary
MINI has launched Clubman Indian Summer Edition in India with prices starting at ₹ 44.90 lakh (ex-showroom).
மேலும்... #மினி #mini
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+