மினி கன்வெர்ட்டிபிள் சைடுவாக் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மினி கன்வெர்ட்டிபிள் காரின் லிமிடேட் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் தனித்துவமான அம்சங்கள் மற்றும் விலை விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மினி கன்வெர்ட்டிபிள் சைடுவாக் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்திய வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான தேர்வை வழங்கும் விதத்தில் தொடர்ந்து ஸ்பெஷல் எடிசன் மாடல்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது மினி கார் நிறுவனம். அந்த வகையில், தற்போது மினி கன்வெர்ட்டிபிள் காரின் லிமிடேட் எடிசன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மினி கன்வெர்ட்டிபிள் சைடுவாக் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மினி கன்வெர்ட்டிபிள் சைடுவாக் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் வந்துள்ளது. மொத்தமாக 15 யூனிட்டுகள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த மாடலை மினி கார் நிறுவனத்தின் இணையதளத்தின் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மினி கன்வெர்ட்டிபிள் சைடுவாக் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மினி கன்வெர்ட்டிபிள் சைடுவாக் எடிசன் மாடலில் கவர்ச்சிகரமான தோற்றத்தை வழங்கும் வகையில் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் அலங்கார விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கார் டீப் லகுனா மெட்டாலிக் என்ற விசேஷ வண்ணத் தேர்வில் வந்துள்ளது.

மினி கன்வெர்ட்டிபிள் சைடுவாக் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் சாஃப்ட் எலெக்ட்ரிக் ரூஃப் இடம்பெற்றுள்ளது. இந்த கூரையானது 20 வினாடிகளில் திறந்துவிடும். மேலும், 17 அங்குல சிசர் ஸ்போக் அலாய் வீல்கள், பக்கவாட்டில் முன்புற வீல் ஆர்ச்சுக்கு பின்புறத்தில் சைடுவாக் ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மினி கன்வெர்ட்டிபிள் சைடுவாக் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

சைடுவாக் எடிசன் பேட்ஜ் கொண்டதாக உருவாக்கப்பட்டு இருக்கும் பிரஷ்டு அலுமினியத்தாலான ஸ்கஃப் ப்ளேட் பொருத்தப்பட்டுள்ளது. பானட்டில் விசேஷ கருப்பு வண்ணத்திலான வரிக்கோடுகள், க்ரில் அைப்பில் எஸ் எழுத்துடன் கூடிய ஸ்பெஷல் பேட்ஜ், க்ரில் அமைப்பு மற்றும் ஹெட்லைட்டை சுற்றிலும் க்ரோம் வளையம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மினி கன்வெர்ட்டிபிள் சைடுவாக் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

உட்புறத்தில் சைடுவாக் பேட்ஜ் கொண்ட இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. கருப்பு வண்ண இன்டீரியரில் மஞ்சள் வண்ண அலங்கார வேலைப்பாடுகள் வசீகரிக்கின்றன. ஸ்டீயரிங் வீலில் லெதர் உறை கொடுக்கப்பட்டுள்ளது.

மினி கன்வெர்ட்டிபிள் சைடுவாக் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மினி கன்வெர்ட்டிபிள் சைடுவாக் எடிசன் மாடலில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 191 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பேடில் ஷிஃப்ட் வசதியும் உள்ளது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 7.1 வினாடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு 230 கிமீ வேகத்தை தொடும் வல்லமை கொண்டது.

மினி கன்வெர்ட்டிபிள் சைடுவாக் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் எம்ஐடி, ஸ்போர்ட் மற்றும் க்ரீன் என பல டிரைவிங் மோடுகள் இடம்பெற்றுள்ளன. செயல்திறன், சொகுசு அம்சங்கள், மைலேஜ் ஆகியவற்றை பொறுத்து ஓட்டுனர் விருப்பம்போல் தேர்வு செய்யலாம்.

மினி கன்வெர்ட்டிபிள் சைடுவாக் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மினி கன்வெர்ட்டிபிள் சைடுவாக் எடிசன் மாடலில் ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், கிராஷ் சென்சார், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், ரன் ஃப்ளாட் டயர் இண்டிகேட்டர் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

மினி கன்வெர்ட்டிபிள் சைடுவாக் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மினி கன்வெர்ட்டிபிள் சைடுவாக் எடிசன் மாடலுக்கு ரூ.44.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். இது வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான தேர்வாக அமையும்.

Most Read Articles

மேலும்... #மினி #mini
English summary
MINI has launched a new limited edition variant called the Sidewalk Edition of its Convertible model in the Indian market. The Convertible Sidewalk Edition is priced at Rs 44.90 lakh (ex-showroom, India).
Story first published: Thursday, October 1, 2020, 14:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X