புதிய மினி கூப்பர் எலக்ட்ரிக் காரின் டீசர் முதல்முறையாக வெளியீடு!! ரேஸ் ட்ராக்கில் சோதனை...

மினி கூப்பர் ஜே.சி.டபிள்யூ எலக்ட்ரிக் காரின் முதல் டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய மினி கூப்பர் எலக்ட்ரிக் காரின் டீசர் முதல்முறையாக வெளியீடு!! ரேஸ் ட்ராக்கில் சோதனை...

உலகளவில் ஆட்டோமொபைல் துறை வேகமாக எலக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் சாய்ந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டுவரவே முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

புதிய மினி கூப்பர் எலக்ட்ரிக் காரின் டீசர் முதல்முறையாக வெளியீடு!! ரேஸ் ட்ராக்கில் சோதனை...

இந்த வகையில் மினி நிறுவனம் அதன் ஜே.சி.டபிள்யூ எலக்ட்ரிக் காரின் முதல் டீசர் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் காட்சித்தரும் கார் ரேஸ்ட்ராக்கில் இயங்குவதுபோல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய மினி கூப்பர் எலக்ட்ரிக் காரின் டீசர் முதல்முறையாக வெளியீடு!! ரேஸ் ட்ராக்கில் சோதனை...

இதில் இருந்து இந்த மினி எலக்ட்ரிக் கார் ட்ராக்கிற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு வருவது நமக்கு தெரிய வருகிறது. இந்த டீசர் வீடியோ ‘ஜான் கூப்பர் வொர்க்ஸ்' என்ற பெயரில் வெளியிடப்பட்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

புதிய மினி கூப்பர் எலக்ட்ரிக் காரின் டீசர் முதல்முறையாக வெளியீடு!! ரேஸ் ட்ராக்கில் சோதனை...

கார் முழுவதும் மறைக்கப்பட்டு இருப்பினும் காரின் தோற்றம் நம் கண்களுக்கு புலப்படுகிறது. காரின் முன்பக்க பம்பர் இரு முனையிலும் காற்று துளைகளுடன் அகலமான பிரிப்பான் மற்றும் காற்று டேம்-ஐ கொண்டுள்ளது. எரிபொருள் கார்களை போன்று இந்த எலக்ட்ரிக் காரின் க்ரில்லும் மூடப்பட்டுள்ளது.

புதிய மினி கூப்பர் எலக்ட்ரிக் காரின் டீசர் முதல்முறையாக வெளியீடு!! ரேஸ் ட்ராக்கில் சோதனை...

பின்புறத்தில் சில காற்றியக்கவியலுக்கான பாகங்களை பார்க்க முடிகிறது. மேற்கூரையில் உள்ள பெரிய ஸ்பாய்லர் மொத்த காருக்கும் ஸ்போர்டியான தோற்றத்தை வழங்குகிறது. பின் பம்பரில் வழக்கமாக வழங்கப்படும் எந்தவொரு எக்ஸாஸ்ட் குழாயும் இல்லை.

புதிய மினி கூப்பர் எலக்ட்ரிக் காரின் டீசர் முதல்முறையாக வெளியீடு!! ரேஸ் ட்ராக்கில் சோதனை...

மினி கூப்பர் கார்களுக்கு எப்போதும் வழங்கப்படும் யூனியன் ஜாக் டெயில்லைட்களை இந்த காரிலும் பார்க்க முடிகிறது. இந்த எலக்ட்ரிக் காரில் ப்ரேக் காலிபர்கள் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. இந்த டீசர் வீடியோவில் காரின் உட்பகுதியையும் ஓரளவுக்கு பார்க்க முடிகிறது.

புதிய மினி கூப்பர் எலக்ட்ரிக் காரின் டீசர் முதல்முறையாக வெளியீடு!! ரேஸ் ட்ராக்கில் சோதனை...

மினி நிறுவனமோ அல்லது அதன் தாய் நிறுவனமான பிஎம்டபிள்யூவோ ஜே.சி.டபிள்யூ இவி காரின் எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பு குறித்த எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. இணையத்தில் வெளியாகி வரும் தகவல்களில் இந்த காரில் அனைத்து-சக்கர-ட்ரைவ் வடிவத்தில் முன்புறத்தில் ஒன்று, பின்புறத்தில் ஒன்று என இரட்டை-மோட்டார் அமைப்பு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய மினி கூப்பர் எலக்ட்ரிக் காரின் டீசர் முதல்முறையாக வெளியீடு!! ரேஸ் ட்ராக்கில் சோதனை...

வழக்கமான மினி இவி கார் அதிகப்பட்சமாக 184 பிஎச்பி மற்றும் 270 என்எம் டார்க் திறனில் இயங்குகிறது. ஜே.சி.டபிள்யூவில் இதனை காட்டிலும் அதிக இயக்க ஆற்றலை எதிர்பார்க்கலாம். மினி ஜே.சி.டபிள்யூ எலக்ட்ரிக் காரின் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடந்த சில மாதங்களாக இணையத்தில் செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் தற்போது இதன் டீசர் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #மினி #mini
English summary
Upcoming Mini Cooper JCW Electric First Teaser Released
Story first published: Thursday, December 3, 2020, 15:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X