ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்த ஹீரோயின்.. விபத்தில் சிக்கி காயம்! இது உங்களுக்கு தேவைதானா மேடம்

பிரபல நடிகை ஒருவர் ஊரடங்கு உத்தரவை மீறி ஜாலி ரைடு சென்றபோது விபத்தில் சிக்கி பலத்த காயமைடந்துள்ளார். இந்த விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக போலீஸிடம் புது தந்திரத்தையும் அவர் கையாண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

விபத்தை செய்துவிட்டு வேறொருவரை கோர்த்துவிட்ட பிரபல நடிகை... ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்தபோது விபரீதம்!

கொரோனா அச்சம் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் இயக்கமற்ற நிலையில் காணப்படுகின்றன. வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களைக் காப்பதற்காக உலக நாடுகள் பல ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகின்றன. இதே நடவடிக்கையைதான் இந்திய அரசும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலுக்குக் கொண்டுவந்தது. இது வரும் 14ம் தேதி வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

விபத்தை செய்துவிட்டு வேறொருவரை கோர்த்துவிட்ட பிரபல நடிகை... ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்தபோது விபரீதம்!

ஆகையால், அதுவரை மக்கள் யாரும் வெளியில் நடமாடக் கூடாது என மத்திய மற்றும் மாநில அரசுகள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டன. மேலும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது. ஆனால், அரசின் இந்த நோக்கத்தை சீர் குலைக்கும் விதமாக சிலர் வெளியில் ஜாலியாக சுற்றித் திரிந்த வண்ணம் இருக்கின்றனர்.

விபத்தை செய்துவிட்டு வேறொருவரை கோர்த்துவிட்ட பிரபல நடிகை... ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்தபோது விபரீதம்!

மேலும், தங்களுக்காகவே சாலைகள் அனைத்தையும் காலி செய்து கொடுத்திருப்பதாக எண்ணி அவர்கள் ஜாலி ரைடிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தனது ஆண் நண்பர் ஒருவருடன் ஜாலி ரைடு சென்ற பிரபல நடிகை விபத்தில் சிக்கி காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தை செய்துவிட்டு வேறொருவரை கோர்த்துவிட்ட பிரபல நடிகை... ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்தபோது விபரீதம்!

மேலும், அந்த விபத்தை அவர் செய்யவில்லை என்றுகூறி தப்பிப்பதற்காக சில யுக்திகளைக் கையாண்டிருப்பதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை டெக்கன் ஹெரால்ட் என்ற ஆங்கில செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

விபத்தை செய்துவிட்டு வேறொருவரை கோர்த்துவிட்ட பிரபல நடிகை... ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்தபோது விபரீதம்!

விபத்தை ஏற்படுத்திய அந்த நடிகை யார் என்று கேட்கிறீர்களா..? பிரபல கன்னட மொழி திரைப்பட நடிகையான ஷர்மீலா மாண்ட்ரே-தான் அவர். இவர் தமிழில் மிரட்டல் திரைபடத்தின்மூலம் அறிமுகமானவர். இந்த படத்தில் வினே ராய்-க்கு ஜோடியாக அவர் நடித்திருப்பார். மேலும், இப்படத்தில் காமெடி ஆக்டர் சந்தானம், கஞ்சா கருப்பு, பிரபு மற்றும் மன்சூரலிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.

விபத்தை செய்துவிட்டு வேறொருவரை கோர்த்துவிட்ட பிரபல நடிகை... ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்தபோது விபரீதம்!

இவர் அதிகம் கன்னடா திரைப்படங்களில் மட்டும் நடித்திருப்பதால் தமிழில் அந்தளவிற்கு பேமஸாகவில்லை. அதேசமயம், தெலுங்கு திரையுலகிலும் ஒரு படத்தின் மூலம் கால் தடம் பதித்துள்ளார். இந்த நடிகைதான், தற்போது அரசின் தேசிய ஊரடங்கு உத்தரவை மீறி சென்று விபத்தில் சிக்கியுள்ளார். இன்று (சனிக்கிழமை) அதிகாலை நடைபெற்ற இந்த சம்பவத்தில் அவரது முகத்தில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

விபத்தை செய்துவிட்டு வேறொருவரை கோர்த்துவிட்ட பிரபல நடிகை... ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்தபோது விபரீதம்!

மேலும், அவரது ஆண் நண்பர் லோகேஷ் வசந்திற்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால், உடனடியாக கன்னிங்ஹாம் சாலையில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைப் பெற்றுள்ளனர். தற்போது வீடு திரும்பியுள்ள அவர்கள், குடும்ப மருத்துவரின் கண்கானிப்பில் இருந்து வருகின்றனர்.

விபத்தை செய்துவிட்டு வேறொருவரை கோர்த்துவிட்ட பிரபல நடிகை... ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்தபோது விபரீதம்!

இந்த விபத்து சம்பவம், சிபிடி வசந்த் நகரின் அண்டர்பிரிட்ஜில் ஏற்பட்டுள்ளது. இதில் ரயல்வேத்துறைக்கு சொந்தமான பாலத்தின் தூண் கடுமையாக சேதமடைந்திருப்பதாக போலீஸார் தகவல் தெரிவித்தனர்.

விடியற்காலை சுமார் 4 மணியளவில் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே போலீஸார் இதனைக் கண்டறிந்துள்ளனர். அப்போது, தானாகவே முன் வந்து விபத்தை ஏற்படுத்தியதாக ஓர் நபர் கூறியுள்ளார். ஆனால், அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

விபத்தை செய்துவிட்டு வேறொருவரை கோர்த்துவிட்ட பிரபல நடிகை... ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்தபோது விபரீதம்!

அதுகுறித்த தீவிரமாக விசாரித்தபோது மழுப்பலான பதிலை அளித்துள்ளார். மேலும், இந்த வழக்கை அப்படியே விட்டுவிடுங்கள் என போலீஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், பொதுச் சொத்துக்கள் பல சேதமடைந்திருப்பதால் போலீஸார் விடப்பிடியாக கேள்விகளால் துருவியெடுத்துள்ளனர். மேலும், விபத்தை ஏற்படுத்தியது நடிகை ஷர்மிலாவாகதான் இருக்கும் என சந்தேகமடைந்தனர்.

விபத்தை செய்துவிட்டு வேறொருவரை கோர்த்துவிட்ட பிரபல நடிகை... ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்தபோது விபரீதம்!

அதற்கேற்ப அவரை விசாரிக்கை செல்கையில் பலத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளார். ஆனால், அவர் விபத்து செய்ததை ஒப்புகொள்ளவில்லை. மேலும் வேறொரு பகுதியில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தின்காரணமாகவே இந்த காயங்கள் ஏற்பட்டதாகவும் காரணம் தெரிவித்துள்ளார்.

விபத்தை செய்துவிட்டு வேறொருவரை கோர்த்துவிட்ட பிரபல நடிகை... ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்தபோது விபரீதம்!

விபத்தை தான்தான் ஏற்படுத்தியதாக அறிமுகமானவரும் உண்மையான தகவலை கூற மறுத்துள்ளார். இருப்பினும், போலீஸார் இதனை அப்படியே விட்டுவிட முடியாது, இது கடுமையான குற்றம் என அவருக்கு விளக்கி தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து, நடிகை ஷர்மிளாவை விசாரிக்கை தற்போது மருத்துவரின் அனுமதி கோரியுள்ளனர். இந்த விவகாரத்தில் அனைவரும் வழக்கை திசை திருப்பும் வகையிலேயே செயல்படுவதாக போலீஸார் குற்றம் சாட்டுகின்றனர்.

Source: Deccan Herald

Most Read Articles
 
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
https://www.deccanherald.com/city/actress-sharmeila-mandre-injured-in-accident-in-bengaluru-821199.html
Story first published: Saturday, April 4, 2020, 21:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X