மாருதி ஜிப்ஸி-ஐ இதைவிட யாராலும் முரட்டுத்தனமான தோற்றத்திற்கு மாற்ற முடியாது...!

இந்திய சந்தையில் ஒரு காலத்தில் வலுவான ஆதிக்கத்தை செலுத்தி வந்த மாருதி நிறுவனத்தின் ஜிப்ஸி மாடல் ஷட்டர் என்ற பெயரில் மாடிஃபைடு பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைஸ்ட் கார் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதி ஜிப்ஸி-ஐ இதைவிட யாராலும் முரட்டுத்தனமான தோற்றத்திற்கு மாற்ற முடியாது...!

பெங்களூரை சேர்ந்த மோட்டார்மைண்ட் ஆட்டோமோட்டிவ் டிசைன்ஸ் என்ற பிரபலமான மாடிஃபைடு நிறுவனம் தான் மாருதி ஜிப்ஸி மாடலை படத்தில் உள்ளவாறு முரட்டுத்தனமான தோற்றத்திற்கு மாற்றியுள்ளது.

மாருதி ஜிப்ஸி-ஐ இதைவிட யாராலும் முரட்டுத்தனமான தோற்றத்திற்கு மாற்ற முடியாது...!

இந்த கஸ்டமைஸ்ட் ஜிப்ஸிக்கு ஷட்டர் என பெயர் வைத்துள்ள மோட்டார்மைண்ட் நிறுவனம் மாடிஃபைடு பணியில் தன்னிடம் உள்ள முழு திறமையையும் இதன் காரில் காட்டியுள்ளது. அதன்படி இந்த ஜிப்ஸி மாடலின் முன்புறத்தில் பகல்நேரத்திலும் ஒளிரக்கூடிய நான்கு ஹெட்லேம்ப்களுடன் புதிய க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாருதி ஜிப்ஸி-ஐ இதைவிட யாராலும் முரட்டுத்தனமான தோற்றத்திற்கு மாற்ற முடியாது...!

இந்த ஷட்டர் காரில் வழங்கப்பட்டுள்ள லைட்டிங் பாகங்களை பற்றி கூறியே ஆக வேண்டும். ஏனெனில் மேற்கூரை கூட கனோபிக்கு உட்புறத்தில் இரு எல்இடி விளக்குகளை பெற்றுள்ளது. முன்புற பம்பர் ஸ்டாக் மாடலில் உள்ளதை காட்டிலும் நேர்த்தியானதாக காட்சியளிக்கிறது.

மாருதி ஜிப்ஸி-ஐ இதைவிட யாராலும் முரட்டுத்தனமான தோற்றத்திற்கு மாற்ற முடியாது...!

இவற்றுடன் U-வடிவிலான எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள், முரட்டுத்தனமான தோற்றத்திற்காக பேஷ் தட்டுகள் மற்றும் முன்பக்க பம்பரின் பக்கவாட்டுகளில் சில ஸ்டைலிங் பிட்கள் உள்ளிட்டவையும் இந்த மாடிஃபைடு எஸ்யூவி காரில் உள்ளன.

மாருதி ஜிப்ஸி-ஐ இதைவிட யாராலும் முரட்டுத்தனமான தோற்றத்திற்கு மாற்ற முடியாது...!

மோட்டார்மைண்ட் இவ்வாறு மாற்றியமைத்திருப்பது மாருதி ஜிப்ஸி மாடலின் சாஃப்ட்-டாப் வேரியண்ட்டாகும். இதில் வழக்கமாக வழங்கப்படும் மேற்கூரையானது சிறிய ஜன்னல் கண்ணாடியை கொண்ட கனோபி மூலமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மாருதி ஜிப்ஸி-ஐ இதைவிட யாராலும் முரட்டுத்தனமான தோற்றத்திற்கு மாற்ற முடியாது...!

அதேபோல் ஜிப்ஸி மாடலில் பின்புறத்தில் இருக்கும் இருக்கைகளையும் நீக்கிவிட்டு பொருட்களை ஏற்றி செல்வதற்கு தகுந்த வாகனமாக மோட்டார்மைண்ட் கஸ்டமைஸ்ட் நிறுவனம் மாற்றியுள்ளது. இதனால் இந்த ஷட்டர் மாடலில் ஓட்டுனர் இருக்கை உள்பட வெறும் இரு இருக்கைகள் மட்டுமே உள்ளன.

மாருதி ஜிப்ஸி-ஐ இதைவிட யாராலும் முரட்டுத்தனமான தோற்றத்திற்கு மாற்ற முடியாது...!

பக்கவாட்டில் இந்த மாடிஃபைடு கார் பெரிய சக்கர ஆர்ச்கள், சந்தைக்கு பிறகான படிக்கட்டு மற்றும் தடிமனான ரப்பர் உடன் புதிய சக்கரங்களின் ஷோட் போன்றவற்றை ஏற்றுள்ளது. பின்புறத்தில் பேஷ் தட்டு மற்றும் பின் கதவில் பெரிய அளவிலான உதிரி சக்கரம் முதலியவை உள்ளன.

மாருதி ஜிப்ஸி-ஐ இதைவிட யாராலும் முரட்டுத்தனமான தோற்றத்திற்கு மாற்ற முடியாது...!

டயர்களை கவனித்தால், ஆஃப்-ரோடு ஏற்றதான மேக்சிஸ் பிகார்ன் டயர்களை இந்த ஜிப்ஸி மாடலில் கஸ்டமைஸ்ட் நிறுவனம் பொருத்தியுள்ளது. உட்புறத்தில் ஜிடி-ஆர் ப்ராண்டில் ஸ்போர்ட் பக்கெட் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றப்படி என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை.

மாருதி ஜிப்ஸி-ஐ இதைவிட யாராலும் முரட்டுத்தனமான தோற்றத்திற்கு மாற்ற முடியாது...!

இதனால் அதே ஜி-சீரிஸ் 1298சிசி, 4-சிலிண்டர், பெட்ரோல் என்ஜினை தான் இந்த கஸ்டமைட் ஷட்டர் மாடலும் கொண்டுள்ளது. அதிகப்பட்சமாக 80 பிஎச்பி பவரையும், 103 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Modified Maruti Gypsy ‘Shudder’ Looks Totally Badass
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X