"ஸ்பீடு கன்ட்ரோல் பண்ண முடியலை".. சாலையோரம் நின்ற கார்களை வந்த வேகத்தில் அடித்து தூக்கிய பிரபலம்...

அதி-திறன் வாய்ந்த காரின் ஸ்பீடை கன்ட்ரோல் பண்ண முடியாமல் சாலையோரத்தில் இருந்த கார் மற்றும் பாதசாரிகளை உலகறிந்த பிரபலம் ஒருவர் காரினால் அடித்து தூக்கியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலக புகழ்வாய்ந்த கார் தயாரிக்கும் நிறுவனங்களில் போர்ஷேவும் ஒன்று. இது சொகுசு மற்றும் திறன் மிகுந்த கார்களை தயாரிப்பதில் பெயர்போன நிறுவனமாக உள்ளது. இதனாலேயே இந்நிறுவனத்தின் கார்களுக்கு உலக பணக்காரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. அதிலும், இந்நிறுவனத்தின் சூப்பர் கார்களுக்கு ஏகபோகமான வரவேற்பு உலகம் முழுவதிலும் காணப்படுகின்றது.

அந்தவகையில், அதிக வரவேற்பைப் பெற்ற மாடலாகவும், அதி-திறன் வாய்ந்த மாடலாகவும் ஃபோர்ஷே கர்ரேரா ஜிடி இருக்கின்றது.

இந்த காரை ஓர் முக்கிய புள்ளி அதிக வேகத்தில் இயக்கி, கட்டுப்படுத்த முடியாமல் விபத்தை ஏற்படுத்தியிருக்கின்றார். இதனால் பல கோடி மதிப்புள்ள அந்த கார் அப்பளம்போல் நொறுங்கியிருக்கின்றது.

MOST READ: காரையே வீடாக மாற்றிய கொரோனா போராளி.. நிச்சயம் வரவேற்கதக்க முன்னுதாரணம்! முதலமைச்சரை கவர்ந்த சம்பவம்!

அவர் வேறு யாரும் அல்ல, கோல்ட்ரஷ் ரேலி நிறுவனர் பெஞ்சமின் பென் சென்தான். இவர் செய்த அதி பயங்கர விபத்தின் காரணமாக அவரடைய கார் மட்டுமின்றி ஏறக்குறைய 12 கார்கள் மற்றும் 1 பாதசாரி கடுமையாக பாதிப்படைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துகுறித்து வெளியாகியிருக்கும் புகைப்படத்தை பார்க்கும்போதே தெரிகின்றது, இந்த சம்பவம் எந்தளவிற்கு கோரமானாதாக இருந்திருக்கும் என.

பெஞ்சமின் விபத்தை ஏற்படுத்தியபோது மது போதையில் இருந்ததாக கூறப்படுகின்றது. போலீஸாரும் இதையே உறுதி செய்துள்ளனர்.

ஏற்கனவே அதி சக்தி வாய்ந்த காராக இருக்கும் போர்ஷே கர்ரேரா ஜிடி காரை, கம்பேல்லா கார் ட்யூனிங் மூலம் கூடுதல் சக்தி வாய்ந்த மாடலாக பெஞ்ஜமின் மாற்றியிருக்கின்றார்.

MOST READ: சும்மாவா சொன்னாங்க தாயை சிறந்ததொரு கோவில் இல்லைனு! மகனுக்காக தனியொரு ஆளாக 1,400 கிமீ பயணித்த பெண்..

இதனால், முன்பிருந்ததைக் காட்டிலும் தற்போது பல மடங்கு அதிக சக்தியை வெளிப்படுத்தும் ஓர் மாடலாக அது உருவாகியிருக்கின்றது. இதுவே விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. இவர் இதைவிட அதிக திறனுடைய கார்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். இருப்பினும், இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் அன்றைய தினம் (ஏப்ரல் 7ம் தேதி) பொது சாலையில் பெஞ்ஜமின் அதிவேகத்தில் பறந்துள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந்த காரணத்தால், காரின் அதிக திறனை கன்ட்ரோல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகவே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது கர்ரேரா ஜிடி, கண் மூடித்தனமாக மோதி விபத்துக்குள்ளானது.

MOST READ: சொகுசு கார் விலையில் வாட்ச்... தயவுசெய்து விலையை மட்டும் கேட்காதீங்க ப்ரோ.. சொன்னா ஷாக் ஆயிடுவீங்க!

இந்த விபத்துகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. இவருக்கு சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்கள் ஏராளம் என்பதால், அவரின் ரசிகர்கள்கூட விபத்து சம்பவம் காரணமாக அவரைத் திட்டி தீர்க்க ஆரம்பித்திருக்கின்றனர்.

33 வயதான பென்ஜமின், பல அதி வேக கார்களுக்கு சொந்தக்காரராக இருந்து வருகின்றார். இவரிடத்தில் மிராஜ் ஜிடி போன்று பல்வேறு மிக மிக அதிக விலையுடைய மற்றும் திறன் கொண்ட கார்கள் இருக்கின்றன. அதில் ஒன்றான போர்ஷே கர்ரேராதான் தற்போது விபத்தில் உருக்குலைந்து நிற்கின்றது. இந்த விபத்தினால், போர்ஷே கர்ரேரா கார்தானா என்ற கேள்வியை எழுப்புமளவிற்கு அந்த கார் சேதமடைந்திருக்கின்றது.

MOST READ: 1,500 கோடி நிதி உதவியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்!

கார்கள்மீது அதிகம் ஆர்வம் கொண்டிருப்பதன் காரணத்தினாலயே இவரிடத்தில் ஏரளமான கார்கள் இருக்கின்றன. அதுமட்டுமின்றி அவரிடத்தில் இருக்கும் பல கார்கள் அதன் உண்மை திறனைக் காட்டிலும் கூடுதல் திறன் வழங்கும் வகையில் ட்யூன்-அப் செய்யப்பட்டவையாக இருக்கின்றன.

View this post on Instagram

Is he trying to leave? 🤔 wtf

A post shared by TURNPIKE RACING LEAGUE®️ (@trlrace) on

இதனாலயே அவை பொது சாலையில் இயக்குவது சற்று கடினமான ஒன்றாக இருக்கின்றன. ஆனால் பெஞ்ஜமின் ரேலி போன்ற அதிவேக கார் போட்டியில் பங்கேற்றவர் என்பதால் இதுபோன்ற அதி வேக திறனுடைய கார்களை அவர் மிகவும் அசால்டாக கையாளுவார். இருப்பினும் மதுபோதையில் இருந்த காரணத்தினால் விபத்தை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார்.

Source: indianauto

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Modified Porsche Carrera GT Causes Serious Accident. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more