சுற்றுலாவை விரும்பும் குடும்பங்களுக்கான கார்கள் இவைதான்.. இந்தியாவின் விலை குறைந்த 7 சீட்டர் கார்கள்

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த விலை 7 சீட்டர் எம்பிவி ரக கார்களின் பட்டியலை தொகுத்து வழங்கியுள்ளோம். இதில், சிறந்தது எது என்பதை கீழே உள்ள தகவலை படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

சுற்றுலாவை விரும்பும் குடும்பங்களுக்கான கார் இவைதான்... இந்தியாவின் மலிவு விலை 7 சீட்டர் எம்பிவி கார்கள் பட்டியல்..!

நிச்சயம் சுற்றுலாவை விரும்பாத மக்கள் இந்நாட்டில் இருக்க மாட்டார்கள். ஏன் இந்நாட்டில், இந்த உலகிலேயே இருப்பது மிகவும் கடினம்தான். என்ன இதற்கு பெரும் இடையூறாக இருப்பதே அவற்றினால் ஏற்படும் அதிக செலவுகள்தான். இதன்காரணமாகவே, பெரும்பாலானோர் சுற்றுலா மீது அளவுகடந்த விருப்பம் இருந்தாலும் அதனை தவிர்க்கின்றனர். அதிலும், குடும்பத்துடன் சுற்றுலா செல்வது என்பது எக்கசக்க செலவை ஏற்படுத்திவிடும்.

சுற்றுலாவை விரும்பும் குடும்பங்களுக்கான கார் இவைதான்... இந்தியாவின் மலிவு விலை 7 சீட்டர் எம்பிவி கார்கள் பட்டியல்..!

குறிப்பாக பயணத்திற்கான வாகன செலவு சில நேரங்களில் நாம் எதிர்பாராத அளவில் பல மடங்கு உயர்ந்து விடும். பணம் ஒரு புறமிருக்க மற்றொரு பக்கம் பயணத்திற்கான வாகனம் மிகப்பெரிய பற்றாக்குறையாக இருக்கின்றது.

குறிப்பாக, விரும்பிய இடத்தை நின்று ரசிக்க பொது வாகனங்கள் அனுமதிப்பதில்லை. அப்படி விருப்பப்பட்ட இடத்தை ரசிக்க வேண்டுமானால் வாடகை வாகனங்களைத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது.

சுற்றுலாவை விரும்பும் குடும்பங்களுக்கான கார் இவைதான்... இந்தியாவின் மலிவு விலை 7 சீட்டர் எம்பிவி கார்கள் பட்டியல்..!

ஆனால், அவற்றின் நாள் வாடகை மற்றும் டிரைவர் பேட்டா உள்ளிட்டவை நம்மை எங்கோ கொண்டு போய் விட்டுவிடுகின்றது. இத்தகையோருக்காக அறிமுகம் செய்யப்பட்ட வாகனமாக எம்பிவி ரக கார்கள் காட்சியளிக்கின்றன.

இவை, ஆரம்பத்தில் மிக அதிக விலைக் கொண்டவையாக இருந்த காரணத்தால் பட்ஜெட் ரக வாகன விரும்பிகளின் எட்டாக் கனியாக இருந்தன.

சுற்றுலாவை விரும்பும் குடும்பங்களுக்கான கார் இவைதான்... இந்தியாவின் மலிவு விலை 7 சீட்டர் எம்பிவி கார்கள் பட்டியல்..!

குறிப்பாக டொயோட்டா இன்னோவா போன்ற எம்பிவி ரக கார்கள் அதிக விலையைக் கொண்டிருந்ததால் சந்தையில் எம்பிவி ரக கார்களுக்கான எதிர்பார்ப்பு மிக மிக குறைவாகவே இருந்து வந்தது. இதனை முறியடிக்கும் வகையில் மாருதி சுஸூகி எர்டிகா கார் அறிமுகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, ரெனால்ட் ட்ரைபர், டட்சன் கோ ப்ளஸ் உள்ளிட்ட பல்வேறு மலிவு விலை எம்பிவி ரக கார்களும் சந்தையில் களமிறங்கின.

சுற்றுலாவை விரும்பும் குடும்பங்களுக்கான கார் இவைதான்... இந்தியாவின் மலிவு விலை 7 சீட்டர் எம்பிவி கார்கள் பட்டியல்..!

இவை அறிமுகமான நேரம், மக்களின் பார்வையை எம்பிவி ரக வாகனங்கள் பக்கம் திரும்பச் செய்துள்ளது. குறிப்பாக, பட்ஜெட் விலை எம்பிவி ரக கார்களான ட்ரைபர் உள்ளிட்டவற்றின் படையெடுப்பால் அண்மைக் காலங்களாக இந்த கார்களுக்கான வரவேற்பு அதீதமாக உயர்ந்துள்ளது.

அந்தவகையில், தற்போது இந்தியாவில் விற்பனையாகும் ஐந்து குறைந்த விலை எம்பிவ ரக கார்களை இந்த பட்டியிலில் பார்க்கலாம்...

சுற்றுலாவை விரும்பும் குடும்பங்களுக்கான கார் இவைதான்... இந்தியாவின் மலிவு விலை 7 சீட்டர் எம்பிவி கார்கள் பட்டியல்..!

ரெனால்ட் ட்ரைபர்:

ரெனால்ட் நிறுவனத்தின் புதிய வருகையாக ட்ரைபர் எம்பிவி ரக கார் இருக்கின்றது. இதில் 7 பேர் வரை அமர்ந்து செல்ல முடியும். இந்த கார் ரூ. 4.95 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக 6.63 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆரம்பத்தில், ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருந்த க்விட் ஹேட்ச்பேக் ரக காரை இந்த ட்ரைபர் வீழ்த்தியது குறிப்பிடத்தகுந்தது.

சுற்றுலாவை விரும்பும் குடும்பங்களுக்கான கார் இவைதான்... இந்தியாவின் மலிவு விலை 7 சீட்டர் எம்பிவி கார்கள் பட்டியல்..!

அதுமட்டுமின்றி, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி ரக கார்களிலும் இந்த கார் தற்போது முன்னணி இடத்தைப் பிடித்திருக்கின்றது.

இந்த காரை ரெனால்ட் நிறுவனம் அதன் சிஎம்எஃப்-ஏ+ பிளாட்பாரத்தில் வைத்து தயாரித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் விலை மலிவானதாக காட்சியளித்தாலும், அதில் காணப்படும் வசதிகள் ஏராளமானதாக காட்சியளிக்கின்றது. இந்த காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வை வழங்கும் பணியில் தற்போது ரெனால்ட் ஈடுபட்டு வருகின்றது.

சுற்றுலாவை விரும்பும் குடும்பங்களுக்கான கார் இவைதான்... இந்தியாவின் மலிவு விலை 7 சீட்டர் எம்பிவி கார்கள் பட்டியல்..!

டட்சன் கோ பிளஸ்

ரெனால்ட் ட்ரைபர் அறிமுகப்படுத்தப்படும் வரை நாட்டில் விற்பனைக்கு கிடைத்த ஒரே பி-பிரிவு எம்பிவி ரக காராக டட்சன் கோ பிளஸ் இருந்தது. இது, டட்சன் கோ ஹோட்ச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்பட்ட மாடலாகும். இந்த காரில் ட்ரைபரைக் காட்டிலும் பெரியளவிலான 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுமட்டுமின்றி, அண்மையில்தான் இந்த கார் புதிப்பிக்கப்பட்டது. அப்போது, இதன் ஸ்டைல் மற்றும் குறிப்பிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் அப்கிரேட் செய்யப்பட்டது.

சுற்றுலாவை விரும்பும் குடும்பங்களுக்கான கார் இவைதான்... இந்தியாவின் மலிவு விலை 7 சீட்டர் எம்பிவி கார்கள் பட்டியல்..!

அந்தவகையில், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் கூடுதலாக இணைக்கப்பட்டது. ஏழு இருக்கைகளைக் கொண்ட இந்த கார் பெரிய குடும்பங்களுக்கு உகந்த காராக காட்சியளிக்கின்றது. இதன் விலை ரூ. 4.12 லட்சம் என்பதில் இருந்து ஆரம்பிக்கின்றது. மேலும், டாப் எண்ட் மாடலின் விலை 6.8 லட்சம் ரூபாய் ஆக உள்ளது.

சுற்றுலாவை விரும்பும் குடும்பங்களுக்கான கார் இவைதான்... இந்தியாவின் மலிவு விலை 7 சீட்டர் எம்பிவி கார்கள் பட்டியல்..!

ஹோண்டா பிஆர்-வி

ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டாவிற்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட சிறிய ரக கார்தான் ஹோண்டா பிஆர்-வி. இது பார்ப்பதற்கு சிறிய எஸ்யூவி ரக காரைப் போன்று காட்சியளித்தாலும் 7 பேர் வரை அமர்ந்து செல்வதற்கான வசதி அதில் காணப்படுகின்றது.

சுற்றுலாவை விரும்பும் குடும்பங்களுக்கான கார் இவைதான்... இந்தியாவின் மலிவு விலை 7 சீட்டர் எம்பிவி கார்கள் பட்டியல்..!

இந்த காரில் இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின்கள் ஹோண்டா சிட்டியில் இருந்து பெறப்பட்டவை. இது, குறைந்த எரிபொருள் பயன்பாட்டில் அதிக பலனை அளிக்கும். மேலும், சிறந்த திறனையும் வெளிப்படுத்தும். ஹோண்டாவின் இந்த பிஆர்-வி கார் இந்தியாவில் ரூ. 9.63-13.95 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

சுற்றுலாவை விரும்பும் குடும்பங்களுக்கான கார் இவைதான்... இந்தியாவின் மலிவு விலை 7 சீட்டர் எம்பிவி கார்கள் பட்டியல்..!

மாருதி சுஸூகி எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6

இந்தியாவில் மாருதி சுஸூகி எர்டிகாவின் இரண்டாம் தலைமுறை கார் தற்போது விற்பனையில் இருக்கின்றது. இந்த காருக்கு கிடைத்த அதீத வரவேற்பை அடுத்து இந்த காரின் மற்றுமொரு காப்பியாக எக்ஸ்எல்-6 கார் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதில், எர்டிகா 7 பேர் வரை அமர்ந்து செல்லும் ரகத்திலும், எக்ஸ்எல்-6 கார் ஆறு பேர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாவை விரும்பும் குடும்பங்களுக்கான கார் இவைதான்... இந்தியாவின் மலிவு விலை 7 சீட்டர் எம்பிவி கார்கள் பட்டியல்..!

மாருதி நிறுவனம் எர்டிகாவிற்கு ரூ. 7.59 லட்சம் முதல் ரூ. 11.2 லட்சம் வரை விலை நிர்ணயித்துள்ளது. அதேசமயம், இதன் எக்ஸ்எல்-6 மாடலின் விலையைப் பார்த்தோமேயானால் சற்றே கூடுதலான விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

எக்ஸ்எல்-6 ரூ. 9.86 லட்சத்தில் இருந்து ரூ. 11.54 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்று. இந்த அதிக விலைக்கு அதில் காணப்படும் அதிகளவு பிரிமியம் வசதிகளே முக்கிய காரணமாக இருக்கின்றது.

சுற்றுலாவை விரும்பும் குடும்பங்களுக்கான கார் இவைதான்... இந்தியாவின் மலிவு விலை 7 சீட்டர் எம்பிவி கார்கள் பட்டியல்..!

மஹிந்திரா மராஸ்ஸோ

எம்பிவி ரக கார்களிலேயே அதிக விலைக் கொண்ட காராக மஹிந்திரா மராஸ்ஸோ கார் காட்சியளிக்கின்றது. இந்த கார் ரூ. 9.99 லட்சத்தில் இருந்து ரூ. 14.76 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார் மாடர்ன் ஸ்டைலில் பிரிமியம் வசதியை உள்ளடக்கியிருப்பதால் இந்த அதிகபட்ச விலை நிலவுகின்றது.

Most Read Articles

English summary
Most Affordable MPVs In India. Read In Tamil.
Story first published: Monday, January 6, 2020, 19:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X