இந்த விலையுயர்ந்த கார்களை பணக்காரர்கள் எதற்காக பயன்படுத்துகிறார்கள் என தெரியுமா? மிரள வைக்கும் தகவல்

இந்திய பணக்காரர்கள் ஒரு சிலர் நம்மை மிரள வைக்கின்ற வகையில் விலையுயர்ந்த காரை குறிப்பிட்ட பயன்பாட்டிற்காக மட்டுமே உபயோகப்படுத்தி வருகின்றனர். வாருங்கள் இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் நாம் காணலாம்.

இந்த விலையுயர்ந்த கார்களை பணக்காரர்கள் எதற்காக பயன்படுத்துகிறார்கள் என தெரியுமா..? மிரள வைக்கும் தகவல்!

பணக்காரர்கள் விலையுயர்ந்த கார்களைப் பயன்படுத்துவது நம்மில் பலருக்கும் தெரியும். இது நமக்கு புதிய விஷயமும் அல்ல. ஆனால், அவர்கள் கன்வாயிலும் விலையுயர்ந்த கார்களை பயன்படுத்துகின்றனர் என்பது நம்ப முடியாத தகவலாக உள்ளது. ஆம், அந்த கார்கள் ஒவ்வொன்றும் பல கோடி விலைக் கொண்டதாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

இந்த விலையுயர்ந்த கார்களை பணக்காரர்கள் எதற்காக பயன்படுத்துகிறார்கள் என தெரியுமா..? மிரள வைக்கும் தகவல்!

உலக பணக்காரர்கள் மட்டுமின்றி இந்தியா செல்வந்தர்கள் பலரும் இத்தகைய மனநிலையைக் கொண்டவர்களாகதான் இருக்கின்றனர். அவர்கள், அவர்களின் பயண வாகனத்தை மட்டுமின்றி பாதுகாப்பிற்காக கான்வாயில் பயன்படுத்தும் வாகனங்களையும் பல கோடிகளைக் கொண்டதாக நிலை நிறுத்துகின்றனர். அந்தவகையில், இந்தியாவில் கான்வாயில் பயன்படுத்தப்படும் விலையுயர்ந்த கார்களின் பட்டியலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

இந்த விலையுயர்ந்த கார்களை பணக்காரர்கள் எதற்காக பயன்படுத்துகிறார்கள் என தெரியுமா..? மிரள வைக்கும் தகவல்!

பிஎம்டபிள்யூ எக்ஸ் எம் ஹமான் டைகூன்

விலை : ரூ. 3.4 கோடிக்கும் அதிகம்

மேலே இருக்கும் விலையைப் பார்த்த உடனே நம்மில் பலர் உறைந்திருப்பீர்கள். நாம் பார்க்கும் இந்த பட்டியலிலேயே மிக அதிக விலையைக் கொண்ட பாதுகாப்பிற்காக பயன்படுத்தும் கார் இதுவாகும். இந்த அதீத விலையைக் கொண்ட காரை இந்திய பணக்காரர்களில் ஒருவரான பூனவல்லாஸ் தனது கான்வாயில் பயன்படுத்தி வருகின்றார். பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் இந்த கார் அதித திறனை வெளிப்படுத்தும் கார்களில் ஒன்றாகும். இது வெறும் 4.2 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ வேகத்தை எட்டும்.

இந்த விலையுயர்ந்த கார்களை பணக்காரர்கள் எதற்காக பயன்படுத்துகிறார்கள் என தெரியுமா..? மிரள வைக்கும் தகவல்!

அதுமட்டுமின்றி மணிக்கு உச்சபட்சமாக 250 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதற்கேற்ப அக்காரில் 670 பிஎஸ் மற்றும் 780 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இந்த கார் லேசான மாடிஃபிகேஷனைப் பெற்ற காராகும். அதாவது, 2010 இ71 பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எம் வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விலையுயர்ந்த கார்களை பணக்காரர்கள் எதற்காக பயன்படுத்துகிறார்கள் என தெரியுமா..? மிரள வைக்கும் தகவல்!

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி

விலை ரூ. 2 கோடி

இரண்டு கோடி ரூபாய் கார் எல்லாம் என் வாழ்நாள் கனவுங்க. இப்படி நம்மில் பலர் கூறலாம். ஆனால், இந்த உச்சபட்ச விலையைக் கொண்ட காரைதான் கர்நாடகாவைச் சேர்ந்த ஓர் தொழிலதிபர் அவரது கான்வாயில் பயன்படுத்தி வருகின்றார். லம்போர்கினி ஹூராகேன் போன்ற சூப்பர் காரை முதலாளி பயன்படுத்தும்போது மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி போன்ற அதி நவீன காரை கான்வாயில் பயன்படுத்துவதுதான் மிகச் சிறந்த செயல் ஆகும்.

ஏனென்றால், லம்போர்கினி கார் அதி வேகத்தில் பறக்கும்போது அதற்கு இணையாக அதன்கூடவே செல்ல இதுபோன்ற கார்கள் மட்டுமே ஒத்துழைக்கும். மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரில் 4.0 லிட்டர் வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 577 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இது ஓர் ஸ்போர்ட்ஸ் காரைப் போன்று செயல்பட உதவும்.

இந்த விலையுயர்ந்த கார்களை பணக்காரர்கள் எதற்காக பயன்படுத்துகிறார்கள் என தெரியுமா..? மிரள வைக்கும் தகவல்!

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் ப்ரேடோ

விலை: ரூ. 1 கோடிக்கும் அதிகம்

புல்லட் ப்ரூஃப் திறனுடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களில் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் ப்ரேடோ ஒன்றாக இருக்கின்றது. இந்த கார், தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், அவரின் பாதுகாப்பான பயணத்திற்காக கான்வாயில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது, 2015ம் ஆண்டில் இருந்து அவரது கான்வாயில் இருந்து வருகின்றது.

பிஎம்டபிள்யூ 7 செரீஸ்

விலை: ரூ. 1 கோடி

பலர் தொழிலதிபர்களின் பிரதான பயண காராக இருக்கும் பிஎம்டபிள்யூ 7 செரீஸ், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் தொழிலதிபர் கான்வாயில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஓர் பழைய தலைமுறை காராகும். இந்த காரும் லம்போர்கினியின் ஹூராகேன் காரில் பயணிக்கும் அதன் எஜமானருக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக கான்வாயில் இணைந்து பயணித்து வருகின்றது.

இந்த விலையுயர்ந்த கார்களை பணக்காரர்கள் எதற்காக பயன்படுத்துகிறார்கள் என தெரியுமா..? மிரள வைக்கும் தகவல்!

பிஎம்டபிள்யூ எக்ஸ்5

விலை: ரூ. 85 லட்சங்கள்

இந்தியாவில் அதிகளவு விலையுயர்ந்த கார்களை பயன்படுத்தும் தொழிலதிபர்களில் ஒருவராக அம்பானி குடும்பத்தினர் இருக்கின்றனர். இவர்களின் கான்வாயில்தான் விலையுயர்ந்த காரான பிஎம்டபிள்யூ எக்ஸ்5 பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முன்னதாக மஹிந்திரா ஸ்கார்பியோ பயன்படுத்தப்பட்டு வந்தன. இதனை வெளியேற்றியே பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அக்கார்களை சிஐஎஸ்எஃப் வீரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

லேண்ட் ரோவர் டிஸ்கவரி

விலை ரூ. 60 லட்சங்கள்

முகேஷ் அம்பானி குடும்பத்தினர் பயன்படுத்தும் விலையுயர்ந்த கார்களில் லேண்ட் ரோவர் டிஸ்கவரி மாடல்களும் ஒன்றாகும். இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இதன் இரண்டிற்கும் மேற்பட்ட யூனிட்டுகள் கான்வாயில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை பாதுகாப்பு பணியாளர்கள் பயணிக்க பயன்படுத்தப்படுகின்றன.

இந்த விலையுயர்ந்த கார்களை பணக்காரர்கள் எதற்காக பயன்படுத்துகிறார்கள் என தெரியுமா..? மிரள வைக்கும் தகவல்!

லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட்

விலை: ரூ 90 லட்சங்கள்

அம்பானி குடும்பத்தினர் கான்வாய்க்காக பயன்படுத்தும் கார்களில் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி ரக கார்களும் ஒன்று. இந்த கார் இந்தியாவில் உள்ள பல திரை நட்சத்திரங்களின் மிகவும் விருப்பமான காராகும். இதைதான் அம்பானி குடும்பத்தினர் அவர்களின் கான்வாய்க்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்த கார்களுக்கு மத்தியில் பென்ட்லீ பேன்டேகா, ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன், லம்போர்கினி உருஸ் போன்ற விலையுயர்ந்த கார்களில் அவர்கள் பயணித்து வருகின்றனர்.

ஒவ்வொரு மனிதனுக்கும் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கின்றது. குறிப்பாக, தொழிலதிபர்களுக்கு பிசினஸ் போட்டியின் காரணமாக அச்சுறுத்தல் மற்றும் விரோதிகள் அதிகமாகவே காணப்படுகின்றனர். இதனால்தான் அவர்கள் வசிக்கும் வீடு முதல் பயணிக்கும் வாகனங்கள் வரை அனைத்திலும் அதிக பாதுகாப்பானதாக தேர்வு செய்கின்றனர்.

இந்த விலையுயர்ந்த கார்களை பணக்காரர்கள் எதற்காக பயன்படுத்துகிறார்கள் என தெரியுமா..? மிரள வைக்கும் தகவல்!

இதனடிப்படையில், விலையுயர்ந்த கார்களை தங்களது பயன்பாட்டிற்கு மட்டுமின்றி கான்வாயில் பயணிக்கும் பாதுகாப்பு பணியாளர்களின் பயன்பாட்டிற்கும் களமிறக்கின்றனர். இது, அவர்களின் பயணத்தை கூடுதல் பாதுகாப்பானதாக மாற்ற உதவும். எனவேதான், எதையும் பொருட்படுத்தாமல் பல கோடிகளை கன்வாய் வாகனங்களுக்காக அவர் வாரி இறைக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 16, 2020, 17:30 [IST]
English summary
Most Expensive Cars In Convoy: Here Is The List. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+