போலீஸாரை மிரட்ட ஹூட்டரை பயன்படுத்திய இளைஞர்கள்... அசராமல் ஆப்பு அடித்த போலீஸ்..!

தடைசெய்யப்பட்ட கருவிகளால் போலீஸாரை அச்சுறுத்திய எம்பி-யின் காருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக போலீஸார் தரமான சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தடைசெய்யப்பட்ட கருவிகளால் போலீஸாரை அச்சுறுத்திய எம்பி-யின் கார்... அசராமல் ஆப்பு அடித்த போலீஸ்..!

வாகனங்களை மாடிஃபை செய்து இயக்குவது அல்லது அங்கீகரிக்கப்படாத ஆஃப்டர் மார்க்கெட் உபகரணங்களை வாகனங்களில் பயன்படுத்துவது இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும்.

இதேபோன்று, விஐபி, அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்டோரின் வாகனங்களில் பயன்படுத்தும் ஹூட்டர் எனப்படும் ஹாரன்கள் மற்றும் பிளாஷ் மின் விளக்குகள் உள்ளிட்டவற்றிற்கும் தடைவிதிக்கப்பட்டது. ஆனால், அவசரகால வாகனங்களுக்கு மட்டும் இதில் விலக்களிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட கருவிகளால் போலீஸாரை அச்சுறுத்திய எம்பி-யின் கார்... அசராமல் ஆப்பு அடித்த போலீஸ்..!

ஆகையால் ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனம் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போன்றவற்றில் மட்டுமே இதுபோன்ற உபகரணங்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏன், நம் நாட்டின் பிரதமர் மற்றும் முக்கியமான அரசியல் கட்சி தலைவர்களின் வாகனங்களில் கூட இதுபோன்ற உபகரணங்களைப் பயன்படுத்த தடைச் செய்யப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட கருவிகளால் போலீஸாரை அச்சுறுத்திய எம்பி-யின் கார்... அசராமல் ஆப்பு அடித்த போலீஸ்..!

இருப்பினும் ஒரு சில அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இதனை கடைபிடிப்பதே இல்லை. மாறாக, அவற்றை மறைமுகப் பயன்படுத்தி எளியோர்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

இந்தவகையிலான ஓர் சம்பவம் தற்போது உத்தரபிரதேசம் மாநிலம், மொரடபாத் மாவட்டத்தில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விதிமீறலில் ஈடுபட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ காருக்கு ரூ. 2 ஆயிரத்திற்கான ஸ்பாட் செல்லாண் வழங்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட கருவிகளால் போலீஸாரை அச்சுறுத்திய எம்பி-யின் கார்... அசராமல் ஆப்பு அடித்த போலீஸ்..!

விதிமீறலில் ஈடுபட்ட வாகனம் பாராளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமானது என்று கூறப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அந்த வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. ஆனால், அது யாருடையது என்ற முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

தடைசெய்யப்பட்ட கருவிகளால் போலீஸாரை அச்சுறுத்திய எம்பி-யின் கார்... அசராமல் ஆப்பு அடித்த போலீஸ்..!

பாராளுமன்ற உறுப்பினர் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த அந்த காரில் நடுத்தர வயதைக் கொண்ட ஒரு சில இளைஞர்கள் பயணித்துள்ளனர். அவர்கள் பயணித்த பாதையில் போலீஸார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அவர்களை மிரட்டும் ஹூட்டர் (ஒலிப்பெருக்கி) மூலம் அதிக சத்தத்துடன் அச்சுறுத்தியுள்ளனர்.

தடைசெய்யப்பட்ட கருவிகளால் போலீஸாரை அச்சுறுத்திய எம்பி-யின் கார்... அசராமல் ஆப்பு அடித்த போலீஸ்..!

இதைக் கண்டு அதிர்ந்துபோன் போலீஸார் உடனடியாக வாகனத்தின் அருகில் சென்று, ஆவணங்களைக் காண்பிக்குமாறு கூறியுள்ளனர். இந்த விசாரணையில், யுபி 21 பிஎச் 0101 என்ற பதிவெண்ணைக் கொண்ட அந்த கார் கம்பீர் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அதேசமயம், வாகனத்தின்மீதோ எம்பி என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

தடைசெய்யப்பட்ட கருவிகளால் போலீஸாரை அச்சுறுத்திய எம்பி-யின் கார்... அசராமல் ஆப்பு அடித்த போலீஸ்..!

ஆகையால், எம்பிகுறித்து போலீஸார் விசாரிக்க தொடங்கினர். ஆனால், அந்த இளைஞர்களோ மழுப்பலான பதிலைக் கூறினர். தொடர்ந்து, சமாதானம் பேசி நழுவவும் முயன்றனர். அது எடுபடவில்லை என்பதனால் ஒரு சில முக்கிய புள்ளிகளுக்கு போன் போட்டு போலீஸாரிடம் பேசக் கொடுத்தனர். இருப்பினும், முழுவதுமாக மறுப்பு தெரிவித்த போலீஸார் விதிமீறலுக்கான ரூ. 2000 அபராதத்திற்கான செல்லாணை வழங்கினர். இது ஸ்பாட் ஃபைன என கூறப்படுகின்றது.

தடைசெய்யப்பட்ட கருவிகளால் போலீஸாரை அச்சுறுத்திய எம்பி-யின் கார்... அசராமல் ஆப்பு அடித்த போலீஸ்..!

இதுமட்டுமின்றி, சம்பவ இடத்தில் இருந்த அப்பகுதி எஸ்எஸ்பி அமித் பதாக், பத்திரிக்கை நிரூபர்களை அழைத்து, வாகனத்தின் விதிமீறல்குறித்த விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.

தடைசெய்யப்பட்ட கருவிகளால் போலீஸாரை அச்சுறுத்திய எம்பி-யின் கார்... அசராமல் ஆப்பு அடித்த போலீஸ்..!

இதில், நாம் ஒரு விஷயத்தை உற்று நோக்க வேண்டும். நாம் ஏற்கனவே கூறியதைப் போன்று இந்தியாவில் இதுபோன்று அதிக ஒலியை ஏற்படுத்தும் ஹூட்டர்கள் மற்றும் கண் பார்வையை பாதிக்கும் ஃபிளாஷர் மின் விளக்குகளைப் பயன்படுத்துவது மோட்டார் வாகனம் சட்டப்படி குற்றமாகும்.

தடைசெய்யப்பட்ட கருவிகளால் போலீஸாரை அச்சுறுத்திய எம்பி-யின் கார்... அசராமல் ஆப்பு அடித்த போலீஸ்..!

இதன்காரணமாகவே, போலீஸார் இதுபோன்று தடைச்செய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, அத்தகைய உபகரணங்கள் வாகனங்களை சாலையில் பார்த்தால் அவற்றை உடனடியாக மறித்து, அனைத்து தடைச் செய்யப்பட்ட உபகரணங்களையும் நீக்கிவிடுகின்றனர்.

தடைசெய்யப்பட்ட கருவிகளால் போலீஸாரை அச்சுறுத்திய எம்பி-யின் கார்... அசராமல் ஆப்பு அடித்த போலீஸ்..!

அதேசமயம், உபகரணங்கள் மட்டுமின்றி தங்களின் நிலையைக் குறிக்கும் (காவலர், பிரஸ், அட்வகேட், எம்பி, எம்எல்ஏ) ஸ்டிக்கர்களுக்கும் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. அதிகாரத்தின் நிலை மட்டுமின்றி குடம்பப் பெயர், மதம் மற்றும் கருத்துகள் போன்றவற்றின் ஸ்டிக்கர்களை ஒட்டவும் இந்திய மோட்டார் வாகன சட்டம் அனுமதிக்கவில்லை.

கருப்பு நிற ஜன்னல் காரில் கெத்தாக வலம் வந்த எம்எல்ஏ-வுக்கு அபராதம்... என்னங்க இப்புடி பண்ணீட்டீங்க!!

சைரன் மற்றும் ஃபிளாஷரைப் போன்றே கருப்பு நிற ஜன்னல் கண்ணாடிகளைக் கொண்ட காரில் கெத்தாக வந்த எம்எல்ஏ-வுக்கும் அண்மையில் போலீஸார் அபராத செல்லாணை வழங்கியினர். இதுகுறித்த கூடுதல் தகவலை கீழே காணலாம்.

கருப்பு நிற ஜன்னல் காரில் கெத்தாக வலம் வந்த எம்எல்ஏ-வுக்கு அபராதம்... என்னங்க இப்புடி பண்ணீட்டீங்க!!

புதிய மோட்டார் வாகன சட்டம் 2019, நாடு முழுவதும் அமலுக்கு கொண்டுவரப்பட்டு நேற்றுடன் (திங்கள்கிழமை) ஒரு மாதங்கள் நிறைவடைந்துவிட்டது. இருப்பினும், இதன் தாக்கம் இந்தியர்கள் மத்தியில் குறைந்தபாடில்லை.

கருப்பு நிற ஜன்னல் காரில் கெத்தாக வலம் வந்த எம்எல்ஏ-வுக்கு அபராதம்... என்னங்க இப்புடி பண்ணீட்டீங்க!!

இதற்கு முன்பாக அரங்கேற்றப்பட்ட பல்வேறு விஷயங்களை கடந்து செல்ல முடிந்த மக்களால், இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தை அவ்வளவு எளிதில் ஜீரணிக்க முடியவில்லை என்ற தகவல் பரவலாக பேசப்படும் சூழல் காணப்படுகின்றது.

கருப்பு நிற ஜன்னல் காரில் கெத்தாக வலம் வந்த எம்எல்ஏ-வுக்கு அபராதம்... என்னங்க இப்புடி பண்ணீட்டீங்க!!

அதேசமயம், இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தில் குடிமகன்கள் மட்டுமே சிக்கிக் கொள்வதில்லை. அவவ்வப்போது, அரசு அதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் சிக்கி வருகின்றனர். ஏன், ஒடிசா மாநிலத்தில் மாவட்ட நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட்டும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக போலீஸாரிடம் சிக்கியதாக தகவல் வெளியாகியது.

கருப்பு நிற ஜன்னல் காரில் கெத்தாக வலம் வந்த எம்எல்ஏ-வுக்கு அபராதம்... என்னங்க இப்புடி பண்ணீட்டீங்க!!

இந்நிலையில், பீகார் மாநிலம், பாட்னா பகுதியில் ஓர் சட்டமன்ற உறுப்பினர் (எம்எல்ஏ) விதிமீறலில் ஈடுபட்டதாக போலீஸாரிடம் சிக்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.

பாட்னா பகுதியைச் சேர்ந்த போலீஸார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சன் ஃபிலிம் எனப்படும் சூரிய வெளிச்சம் உட்புக முடியாத அடர்ந்த கருப்பு நிறத்தினாலான ஜன்னல் கண்ணாடிகளைக் கொண்ட டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி ரக கார் வந்தது.

கருப்பு நிற ஜன்னல் காரில் கெத்தாக வலம் வந்த எம்எல்ஏ-வுக்கு அபராதம்... என்னங்க இப்புடி பண்ணீட்டீங்க!!

அதனை மடக்கியப் போலீஸார், அந்த கார்குறித்த ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது, அந்த கார் பாட்னா பகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ பிரதீப் சிங்-கிற்கு சொந்தமானது என தெரியவந்தது. அவரும் அந்த காரில் இடம்பெற்றிருந்தார். இருப்பினும், ஆவணங்களை சரிபார்த்த போலீஸார், காரின் ஜன்னல்களில் கருப்பு நிற கண்ணாடி பொருத்தியிருந்ததற்கான அபராதச் செல்லாணை வழங்கினர்.

கருப்பு நிற ஜன்னல் காரில் கெத்தாக வலம் வந்த எம்எல்ஏ-வுக்கு அபராதம்... என்னங்க இப்புடி பண்ணீட்டீங்க!!

தொடர்ந்து, காரின் மேற்பகுதியில் சைரன் மற்றும் பிளாஷர்கள் எனப்படும் மின் விளக்குகளும் பொருத்தியிருந்தன. இதுவும் சட்ட விரோதமானதாகும். இத்தைகய சைரன்களை நாட்டின் பிரதமர் உட்பட இந்தியாவின் அனைத்து அரசியல்வாதிகளும் பயனப்படுத்த முடியாதாக மாற்றப்பட்டுள்ளது. இதனை அவசரகால வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கருப்பு நிற ஜன்னல் காரில் கெத்தாக வலம் வந்த எம்எல்ஏ-வுக்கு அபராதம்... என்னங்க இப்புடி பண்ணீட்டீங்க!!

இதற்காக ஒரு சில அரசியல்வாதிகள் பல முறை அபராதம் பெற்ற சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. இருப்பினும், பிரதீப் சிங் போன்ற சில அரசியல்வாதிகள் அதனை பயன்படுத்துவதை தவிர்ப்பதில்லை.

கருப்பு நிற ஜன்னல் காரில் கெத்தாக வலம் வந்த எம்எல்ஏ-வுக்கு அபராதம்... என்னங்க இப்புடி பண்ணீட்டீங்க!!

மேலும், பிரதீப் சிங்கிற்கு பாட்னா போலீஸார் இந்த முறைகேட்டிற்காக அபராதம் விதிக்கவில்லை. அதேபோன்று, காரில் அமர்ந்திருந்த ஓட்டுநர் சீட் பெல்டை அணிந்திருப்பதை நம்மால் காண முடிகின்றது. ஆகையால், எம்எல்ஏ-வின் காருக்கு கருப்பு ஜன்னல்களுக்காக மட்டும் அபராதம் வழங்கப்பட்டது.

கருப்பு நிற ஜன்னல் காரில் கெத்தாக வலம் வந்த எம்எல்ஏ-வுக்கு அபராதம்... என்னங்க இப்புடி பண்ணீட்டீங்க!!

இந்தியாவில் அதிகம் மீறப்படும் விதிகளில் ஒன்றாக இது இருக்கின்றது. பெரும்பாலும், தலைநகர் டெல்லி, பெங்களூர் மற்றும் மும்பை உள்ளிட்ட பெருநகரங்களின் போலீஸார் இந்த விவகாரத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கின்றனர். இருப்பினும், வாகன ஓட்டிகள் தங்களை சூரியனில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இதனை பயன்படுத்துகின்றனர்.

கருப்பு நிற ஜன்னல் காரில் கெத்தாக வலம் வந்த எம்எல்ஏ-வுக்கு அபராதம்... என்னங்க இப்புடி பண்ணீட்டீங்க!!

வாகனங்களில் சந்தைக்குப்பிறகாக செய்யப்படும் எந்த மாற்றத்தையும் அரசு அனுமதிப்பதில்லை. அதில், இதுவும் ஒன்றாகும். இதனை நிரூபிக்கும் வகையில், பாட்னா போலீஸார், எம்எல்ஏ-வின் காருக்கு அபராதத்தை வழங்கியுள்ளனர்.

கருப்பு நிற ஜன்னல் காரில் கெத்தாக வலம் வந்த எம்எல்ஏ-வுக்கு அபராதம்... என்னங்க இப்புடி பண்ணீட்டீங்க!!

கருப்பு நிற ஜன்னல்கள்மீது அரசு இத்தகைய தீவிரத்தை காண்பிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

கருப்பு நிற ஜன்னல் காரில் கெத்தாக வலம் வந்த எம்எல்ஏ-வுக்கு அபராதம்... என்னங்க இப்புடி பண்ணீட்டீங்க!!

அதில், மிக முக்கியமானதாக, வாகனத்திற்குள் நடக்கும் குற்றங்களை வெளியில் இருந்து காண்பதற்கு கடினம் என்பதாலும், சக வாகன ஓட்டிகள் அடுத்தடுத்து உள்ள வாகனங்களை காண்பதில் சிரமம் ஏற்படுத்துவதன் காரணத்தாலும் இத்தகைய கெடுபிடி காட்டப்படுகின்றது.

குறிப்பு: ஒரு சில புகைப்படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
MP Stickered Mahindra Scorpio Busted By Cops Here Is Why. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X