வாழ நினைத்தால் வாழலாம்... கொரோனா நெருக்கடியை வென்ற கார் ஓட்டுநரின் சமயோஜித சிந்தனை!

பல லட்சம் மதிப்புள்ள கார் ஒன்று கரும்பு ஜூஸ் கடையாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

கரும்பு ஜூஸ் கடையாக மாறிய பல லட்சம் மதிப்புள்ள கார்... உயிர்வாழ ஓட்டுநரின் சிறிய சிந்தனை...

ஒற்றை உயிர் கொல்லி வைரஸ் கொரோனாவால் இந்த ஒட்டுமொத்த உலகமே ஸ்தம்பித்து நிற்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் வழக்கமான இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் உலக நாடுகள் பல திணறி வருகின்றன. முக்கியமாக மக்கள் இதனால் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஒவ்வொருவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கரும்பு ஜூஸ் கடையாக மாறிய பல லட்சம் மதிப்புள்ள கார்... உயிர்வாழ ஓட்டுநரின் சிறிய சிந்தனை...

இதனால், வருமானமின்றி வறுமையின் விளிம்பிற்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, கூலித் தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமானதாக மாறியுள்ளது. கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே பொதுபோக்குவரத்து வாகனங்கள் முடக்கப்பட்டுவிட்டன.

கரும்பு ஜூஸ் கடையாக மாறிய பல லட்சம் மதிப்புள்ள கார்... உயிர்வாழ ஓட்டுநரின் சிறிய சிந்தனை...

இதில் விமானம், ரயில் மற்றும் அரசின் பொதுபோக்குவரத்து வாகனங்கள் மட்டுமின்றி தனியார் வாடகை வாகனங்களான ஆட்டோ மற்றும் கால் டாக்சி சேவையும் அடங்கும். இதனால், தனியார் நிறுவனங்களில் ஓட்டுநர்களாக பணி புரிந்தவர்கள் மற்றும் வங்கியில் லோன் எடுத்து கால் டாக்சி சேவையில் கார்களை இயங்குவந்தவர்கள் என அனைவரும் பெருத்த அடியை வாங்கினர்.

கரும்பு ஜூஸ் கடையாக மாறிய பல லட்சம் மதிப்புள்ள கார்... உயிர்வாழ ஓட்டுநரின் சிறிய சிந்தனை...

அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் மக்கள் வரத்து குறைந்து வருமானம் அதளபாதாளத்திற்கு தள்ளப்பட்டது. இதனால், ஓட்டுநர்களின் நிலை கேள்விக் குறியாகவே மாறியது. இவர்களில் பலர் அன்றாட வருமானத்தை நம்பியே பிழைப்பை நடத்தி வந்தவர்கள் என்பது நாம் மறுக்க முடியாத ஓர் உண்மை ஆகும்.

கரும்பு ஜூஸ் கடையாக மாறிய பல லட்சம் மதிப்புள்ள கார்... உயிர்வாழ ஓட்டுநரின் சிறிய சிந்தனை...

எனவே, காருக்கான லோனைக் கட்டுவது முதல் வீட்டு வாடகை செலுத்துவது வரை அனைத்து தரப்பிலும் அவர்களுக்கு அழுத்தமே நிலவ ஆரம்பித்துள்ளது. இம்மாதிரியான சூழ்நிலையில்தான் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓர் காப் டிரைவர் சம்பாதிப்பதற்காக புதிய வழி ஒன்றை தேர்வு செய்துள்ளார். இதுகுறித்து ஈடி ஆட்டோ தளம் வெளியிட்டுள்ள தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

கரும்பு ஜூஸ் கடையாக மாறிய பல லட்சம் மதிப்புள்ள கார்... உயிர்வாழ ஓட்டுநரின் சிறிய சிந்தனை...

ஹைதராபாத்தின் நரபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மஹேஸ்வரம் பிரபாகர். சுமார் 40 வயது மதிக்கத்தக்க இவர், கடந்த 13 வருடங்களுக்கும் மேலாக ஐடி கம்பெனி ஒன்றில் டிரைவராக பணி புரிந்து வந்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து ஊழியர்கள் ஒர்க் ஃப்ரம் ஹோம் திட்டத்தின் அடிப்படையில் அவரவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டனர்.

கரும்பு ஜூஸ் கடையாக மாறிய பல லட்சம் மதிப்புள்ள கார்... உயிர்வாழ ஓட்டுநரின் சிறிய சிந்தனை...

இதனால், தற்போது அலுவலகம் இயங்காத நிலையேக் காணப்படுகின்றது. இதனால், அந்த நிறுவனத்திடம் காரை ஓட்டி வந்த அனைத்து டிரைவர்களின் வருமானமும் கேள்விக் குறியாக மாறியது. அதில் ஒருவரே இந்த மஹேஸ்வரம் பிரபாகர்.

கரும்பு ஜூஸ் கடையாக மாறிய பல லட்சம் மதிப்புள்ள கார்... உயிர்வாழ ஓட்டுநரின் சிறிய சிந்தனை...

தன்னுடைய வருமானம் கேள்விக் குறியானதை அடுத்து, அவர் பல நாட்கள் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அவர் வைத்திருக்கும் இன்னோவா க்ரிஸ்டா எம்பிவி காருக்கு மாதம் ரூ. 16,500 வரை இஎம்ஐ செலுத்தியாக வேண்டும். இத்துடன் குடும்ப செலவும் சேரும்.

கரும்பு ஜூஸ் கடையாக மாறிய பல லட்சம் மதிப்புள்ள கார்... உயிர்வாழ ஓட்டுநரின் சிறிய சிந்தனை...

இவ்வாறு அனைத்து தரப்பிலும் சிக்கிக் கொண்ட மஹேஸ்வரம் பிரபாகர்தன், மாற்று சிந்தனையாக தனது காரையே கரும்பு ஜூஸ் கடையாக மாற்றி இரண்டாவது வருமானத்தை நோக்கி நகர்ந்துள்ளார். இவரின் இந்த முயற்சி தற்போது வேலையில்லாமல் வறுமையில் தவித்து வரும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

கரும்பு ஜூஸ் கடையாக மாறிய பல லட்சம் மதிப்புள்ள கார்... உயிர்வாழ ஓட்டுநரின் சிறிய சிந்தனை...

இவர், தற்போது நரபள்ளி அருகே உள்ளஅவுட்டர் ரிங் ரோடு சாலைக்கு வெளியே இந்த கடையை நடத்தி வருகின்றார். தேவைப்படும்போது, அதாவது சவாரி வரும்போது காரின் பின் பக்க கதவை மூடிவிட்டு பயணிக்க தொடங்கிவிடுகின்றார் மஹேஸ்வரம்.

கரும்பு ஜூஸ் கடையாக மாறிய பல லட்சம் மதிப்புள்ள கார்... உயிர்வாழ ஓட்டுநரின் சிறிய சிந்தனை...

இதுகுறித்து மஹேஸ்வரம் பிராபகர் கூறியதாவது, "கடந்த மூன்று மாதங்களாக, எனது நிதி நிலை மிக மோசமானதாக மாறிவிட்டது. மாற்று வாழ்வாதாரதத்தைத் தேடுவதைத் தவிர வேறு வழியில்லை. எனக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களுக்காகவாது நான் சம்பாதித்தே ஆக வேண்டும்" என சோகத்துடன் தெரிவித்தார்.

கரும்பு ஜூஸ் கடையாக மாறிய பல லட்சம் மதிப்புள்ள கார்... உயிர்வாழ ஓட்டுநரின் சிறிய சிந்தனை...

தொடர்ந்து, "எனது வண்டியின் கடன் தவணைகள், சாலை வரி, எரிபொருள் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு செலவுகள் இருக்கின்றன. எனவேதான் உயிர் வாழ இந்த ஜூஸ் கடையைத் தொடங்கியுள்ளேன். இதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை" என உருக்கமான கதையை பகிர்ந்துகொண்டார்.

கரும்பு ஜூஸ் கடையாக மாறிய பல லட்சம் மதிப்புள்ள கார்... உயிர்வாழ ஓட்டுநரின் சிறிய சிந்தனை...

தற்போது மஹேஸ்வரம் பிராபகரைப் போலவே ஒரு சிலர் தங்களது வாகனங்களை மாற்றம் செய்து இரண்டாம் தொழிலுக்கான வழியை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், பழக்கடை ஆரம்பிப்பது முதல் மாஸ்க் விற்பனை வரை வித்தியாசமான தொழில்கள் பலவற்றை காரைக் கொண்டு கார் டிரைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
MPV Car Converted As Sugarcane Juice Shop In Hyderabad. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X