எர்டிகா, இன்னோவா க்ரிஸ்ட்டா, எக்ஸ்எல்6, மராஸ்ஸோ... அதிகம் விற்பனையாகும் எம்பிவி எதுன்னு தெரியுமா?

கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எம்பிவி/எம்யூவி கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எர்டிகா, இன்னோவா க்ரிஸ்ட்டா, எக்ஸ்எல்6, மராஸ்ஸோ... அதிகம் விற்பனையாகும் எம்பிவி எதுன்னு தெரியுமா?

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எம்பிவி/எம்யூவி கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், 8 சதவீத விற்பனை வளர்ச்சியுடன் மாருதி சுஸுகி எர்டிகா முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7,197 எர்டிகா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 7,748 ஆக உயர்ந்துள்ளது.

எர்டிகா, இன்னோவா க்ரிஸ்ட்டா, எக்ஸ்எல்6, மராஸ்ஸோ... அதிகம் விற்பனையாகும் எம்பிவி எதுன்னு தெரியுமா?

இரண்டாவது இடத்தை மஹிந்திரா பொலிரோ பிடித்துள்ளது. நடப்பாண்டு அக்டோபர் மாதம் 7,624 பொலிரோ கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 5,884 ஆக மட்டுமே இருந்தது. இது 30 சதவீத வளர்ச்சியாகும். மூன்றாவது இடத்தை ரெனால்ட் ட்ரைபர் பிடித்துள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

எர்டிகா, இன்னோவா க்ரிஸ்ட்டா, எக்ஸ்எல்6, மராஸ்ஸோ... அதிகம் விற்பனையாகும் எம்பிவி எதுன்னு தெரியுமா?

நடப்பாண்டு அக்டோபர் மாதம் ரெனால்ட் நிறுவனம் 5,272 ட்ரைபர் கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை 5,240 ஆக இருந்தது. இது 1 சதவீத வளர்ச்சியாகும். நான்காவது இடத்தை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிடித்துள்ளது. நடப்பாண்டு அக்டோபரில் டொயோட்டா நிறுவனம் 4,477 இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களை விற்பனை செய்துள்ளது.

எர்டிகா, இன்னோவா க்ரிஸ்ட்டா, எக்ஸ்எல்6, மராஸ்ஸோ... அதிகம் விற்பனையாகும் எம்பிவி எதுன்னு தெரியுமா?

ஆனால் கடந்தாண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை 5,062 ஆக இருந்தது. இது 12 சதவீத வீழ்ச்சியாகும். 5வது இடத்தை மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 பிடித்துள்ளது. கடந்தாண்டு அக்டோபரில் மாருதி சுஸுகி நிறுவனம் 4,328 எக்ஸ்எல்6 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை 2,439 ஆக சுருங்கியுள்ளது. இது 44 சதவீத வீழ்ச்சியாகும்.

எர்டிகா, இன்னோவா க்ரிஸ்ட்டா, எக்ஸ்எல்6, மராஸ்ஸோ... அதிகம் விற்பனையாகும் எம்பிவி எதுன்னு தெரியுமா?

6வது இடத்தை மஹிந்திரா மராஸ்ஸோ பிடித்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் நடப்பாண்டு அக்டோபரில் 737 மராஸ்ஸோ கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை 1,044 ஆக இருந்தது. இதன் மூலம் மஹிந்திரா மராஸ்ஸோ 29 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

எர்டிகா, இன்னோவா க்ரிஸ்ட்டா, எக்ஸ்எல்6, மராஸ்ஸோ... அதிகம் விற்பனையாகும் எம்பிவி எதுன்னு தெரியுமா?

7வது இடத்தை கியா கார்னிவல் பிடித்துள்ளது. கியா நிறுவனம் நடப்பாண்டு அக்டோபரில் 400 கார்னிவல் கார்களை விற்பனை செய்துள்ளது. கியா கார்னிவல் நடப்பாண்டு தொடக்கத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே அதனை கடந்த ஆண்டுடன் ஒப்பிட முடியாது. அதே சமயம் 8வது இடத்தை டட்சன் கோ ப்ளஸ் பிடித்துள்ளது.

எர்டிகா, இன்னோவா க்ரிஸ்ட்டா, எக்ஸ்எல்6, மராஸ்ஸோ... அதிகம் விற்பனையாகும் எம்பிவி எதுன்னு தெரியுமா?

ஆனால் 84 சதவீத வீழ்ச்சியை டட்சன் கோ ப்ளஸ் பதிவு செய்துள்ளது. கடந்தாண்டு அக்டோபரில் 189 டட்சன் கோ ப்ளஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பாண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை வெறும் 30 ஆக சுருங்கியுள்ளது. 9வது மற்றும் கடைசி இடத்தை டொயோட்டா வெல்ஃபயர் பெற்றுள்ளது. நடப்பாண்டு அக்டோபரில் டொயோட்டா நிறுவனம் 29 வெல்ஃபயர் கார்களை விற்பனை செய்துள்ளது.

எர்டிகா, இன்னோவா க்ரிஸ்ட்டா, எக்ஸ்எல்6, மராஸ்ஸோ... அதிகம் விற்பனையாகும் எம்பிவி எதுன்னு தெரியுமா?

ஆனால் கடந்தாண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை வெறும் 20 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் 45 சதவீத வளர்ச்சியை டொயோட்டா வெல்ஃபயர் பதிவு செய்துள்ளது. டொயோட்டா வெல்ஃபயர் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார் என்னும் நிலையில் 29 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
MPV, MUV Sales In October 2020. Read in Tamil
Story first published: Tuesday, November 10, 2020, 19:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X