முகேஷ் அம்பானியின் புதிய கார் இதுதானாம்! இதோட விலை மற்றும் சிறப்பு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க...

முகேஷ் அம்பானி மிக சமீபத்தில் வாங்கிய புதிய கார் பற்றிய சுவாரஷ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

முகேஷ் அம்பானியின் புதிய கார் இதுதானாம்! இதோட விலை மற்றும் சிறப்பு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க... பாதுகாப்பின் உச்சம்!

பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர், உலக பணக்காரர்கள் பட்டியலில் ஏழாம் இடத்தைப் பிடித்திருப்பவர் என பல்வேறு புகழ்களைக் கிரீடமாகச் சூடிக்கொண்டிருப்பவர் முகேஷ் அம்பானி. இந்தியாவின் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவராக வளம் வந்துக் கொண்டிருக்கும் இவர், மிகப்பெரிய வாகன ஆர்வலரும் கூட. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போது ஓர் தகவல் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானியின் புதிய கார் இதுதானாம்! இதோட விலை மற்றும் சிறப்பு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க... பாதுகாப்பின் உச்சம்!

முகேஷ் அம்பானியிடத்தில் ஏற்கனவே பல விலையுயர்ந்த சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அவை, சொகுசு அம்சங்களை மட்டுமின்றி அதிக பாதுகாப்பு வசதிகளையும் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிக பாதுகாப்பு வசதிக் கொண்ட காரான எஸ்600 குவார்ட் மாடலை அவர் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானியின் புதிய கார் இதுதானாம்! இதோட விலை மற்றும் சிறப்பு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க... பாதுகாப்பின் உச்சம்!

இது எஸ்600 குவார்ட் மாடலின் டபிள்யூ222 எனும் புதிய வெர்ஷனாகும். இதனை டபிள்யூ221 வெர்ஷனின் புதுப்பிக்கப்பட்ட மாடலாக பென்ஸ் விற்பனைச் செய்து வருகின்றது. ஏற்கனவே, டபிள்யூ221 எஸ் குவார்ட் மாடலையும் முகேஷ் அம்பானி பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தகுந்து. இந்த நிலையிலேயே முகேஷ் அம்பானி இக்காரை புதிதாக வாங்கியிருக்கின்றார்.

முகேஷ் அம்பானியின் புதிய கார் இதுதானாம்! இதோட விலை மற்றும் சிறப்பு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க... பாதுகாப்பின் உச்சம்!

இதனை உறுதிப்படுத்தும் வகையில், அம்பானியின் வீட்டுக்குள் அக்கார் நுழைவதைப் போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை, ஆட்டோமொபிலி ஆர்டென்ட் எனும் தளம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களே தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

முகேஷ் அம்பானியின் புதிய கார் இதுதானாம்! இதோட விலை மற்றும் சிறப்பு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க... பாதுகாப்பின் உச்சம்!

பெதுவாக, புதிய தொழிலை ஆரம்பிப்பது மற்றும் அரசு துறைகளை ரிலையன்ஸ் மயமாக்குவதன் மூலமே அம்பானி அதிகளவில் செய்திகளில் இடம்பிடிப்பார். இதுமட்டுமின்றி, சில நேரங்களில் புதிய காரை வாங்குவதன் மூலமும் அவர் செய்திகளில் இடம்பிடித்துவிடுகின்றார். ஏனெனில் அவர் வாங்கும் கார் ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவையாக இருக்கின்றது.

முகேஷ் அம்பானியின் புதிய கார் இதுதானாம்! இதோட விலை மற்றும் சிறப்பு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க... பாதுகாப்பின் உச்சம்!

அவை, நம் நாட்டு பிரதமர் மோடி பயன்படுத்தும் கார்களுக்கு இணையான பாதுகாப்பு வசதியைக் கொண்டவையாக இருக்கின்றன. ஏன், அம்பானி பயன்படுத்தும் ஒரு சில கார்கள், பிரதமர் மற்றும் நாட்டு குடியரசு தலைவர் பயன்படுத்தும் கார்களைக் காட்டிலும் அதிக பாதுகாப்பு வசதிகளைக் கொண்டதாகக்கூட இருக்கின்றன. அந்த வகையிலான ஓர் காரே தற்போது வாங்கப்பட்டிருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 குவார்ட்.

முகேஷ் அம்பானியின் புதிய கார் இதுதானாம்! இதோட விலை மற்றும் சிறப்பு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க... பாதுகாப்பின் உச்சம்!

முகேஷ் அம்பானி நாட்டின் மிக முக்கியமான தொழிலதிபர் என்பதால் அரசு தரப்பிலும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு இணையான பாதுகாப்பு வசதி இதுவாகும். இந்த பாதுகாப்பு அவருக்கு மட்டுமின்றி அம்பானியின் ஒட்டுமொத்த குடும்பத்தினருக்குமே வழங்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது.

முகேஷ் அம்பானியின் புதிய கார் இதுதானாம்! இதோட விலை மற்றும் சிறப்பு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க... பாதுகாப்பின் உச்சம்!

இதுபோதாதென்று கூடுதல் பாதுகாப்பு வசதிக்கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 குவார்ட் புதிதாக வாங்கப்பட்டிருக்கின்றது. இதில், வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி தாக்குதல் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கக் கூடிய அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

முகேஷ் அம்பானியின் புதிய கார் இதுதானாம்! இதோட விலை மற்றும் சிறப்பு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க... பாதுகாப்பின் உச்சம்!

குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் துப்பாக்கி தோட்டா மழை பொழிந்தால் கூட வெள்ளி நிறத்தில் காணப்படும் காரின் கூறை அதீத பாதுகாப்பை வழங்கும். இதேபோன்று பாலிகார்பனேட் பூச்சுக் கொண்ட காரின் ஜன்னல்கள்கூட சிறு கீறல்களைக்கூட சந்திக்காமல் அதிக பாதுகாப்பை வழங்கும். எனவேதான், தற்போது பயன்பாட்டில் இருக்கும் பிற புல்லட் ப்ரூஃப் கார்களைக் காட்டிலும் இது அதிக திறன் வாய்ந்ததாக காணப்படுகின்றது.

முகேஷ் அம்பானியின் புதிய கார் இதுதானாம்! இதோட விலை மற்றும் சிறப்பு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க... பாதுகாப்பின் உச்சம்!

அம்பானியின் இந்த புதிய கார் 15 கிலோ வெடிமருந்து தாக்குதலைக்கூட தாங்கக்கூடிய திறனைக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவேதான், அதிக பாதுகாப்பான பயணத்தை விரும்பும் முகேஷ் அம்பானி இக்காரை உடனடியாக களமிறக்கியிருக்கின்றார்.

முகேஷ் அம்பானியின் புதிய கார் இதுதானாம்! இதோட விலை மற்றும் சிறப்பு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க... பாதுகாப்பின் உச்சம்!

இந்த புதிய காரின் துள்ளியமான விலை பற்றிய தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், இது ரூ. 10 கோடிக்கும் அதிகமான விலையைக் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. அம்பானி, மிகப்பெரிய சொகுசு விரும்பி என்பதால் கூடுதல் லக்சூரி அம்சங்கள் அக்காரில் இடம்பெற்றிருக்கும் என யூகிக்கப்படுகின்றது. ஆகையால், அக்காரின் விலை மேலும் பல கோடிகள் உயர்ந்திருக்க அதிக வாய்ப்புள்ளது.

முகேஷ் அம்பானியின் புதிய கார் இதுதானாம்! இதோட விலை மற்றும் சிறப்பு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க... பாதுகாப்பின் உச்சம்!

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 குவார்ட் காரின் எஞ்ஜின் திறனும் எந்த குறைச்சலுமின்றிக் காணப்படுகின்றது. இக்காரில் 6.0 லிட்டர் வி12 பிஐ டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றது. இது, அதிகபட்சமாக 523 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இது, 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் இயங்கும் எஞ்ஜின் ஆகும்.

முகேஷ் அம்பானியின் புதிய கார் இதுதானாம்! இதோட விலை மற்றும் சிறப்பு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க... பாதுகாப்பின் உச்சம்!

முகேஷ் அம்பானி இடத்தில் ஏற்கனவே உயர் பாதுகாப்பு வசதிகள் கொண்ட பிஎம்டபிள்யூ 7 செரீஸ், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் குவார்ட் உள்ளிட்ட பல கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதுமட்டுமின்றி, அண்மையில் அதிக சொகுசு வசதிகள் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் VIII கார் ரூ. 13 கோடி செலவில் வாங்கப்பட்டது. இந்த நிலையிலேயே மீண்டும் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய பென்ஸ் எஸ்600 குவார்ட் வாங்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mukesh Ambani Buys New Mercedes S600 Guard. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X