போதையில் இருந்தாகூட இப்படியா செய்வது... தரமான பாடம் புகட்டிய காவல்துறை... இந்த நாளை அவங்க மறக்கவே மாட்டாங்க!!

போதையில் அட்டகாசம் செய்த இளைஞர்களுக்கு போலீஸார் தக்க பாடம் புகட்டியிருக்கின்றனர். இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

போதையில் இருந்தாகூட இப்படியா செய்வது... தரமான பாடம் புகட்டிய காவல்துறை... இந்த நாளை அவங்க மறக்கவே மாட்டாங்க!!

புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிசம்பர் 31ம் தேதி இரவு, அதாவது, ஜனவரி 1ம் தேதி பிறக்கும் அந்த நாளைக் கொண்டாடும் விதமாக மக்கள் பலர் மகிழ்ச்சியுடன் சாலையில் சுற்றித் திரிவது வழக்கம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காரின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டோ அல்லது சன் ரூஃப் வாயிலாக நின்றவாறோ கோஷம் எழுப்பிய வண்ணம் பயணிப்பதை நாம் பார்த்திருப்போம்.

போதையில் இருந்தாகூட இப்படியா செய்வது... தரமான பாடம் புகட்டிய காவல்துறை... இந்த நாளை அவங்க மறக்கவே மாட்டாங்க!!

ஆனாம், நாம் பார்க்கவிருக்கும் இந்த சம்பவத்தில் இளைஞர்கள் சிலர் அட்வான்ஸ்டாக டிசம்பர் 1ம் தேதியையே மிக சந்தோஷமாகக் கொண்டாடியிருக்கின்றனர். ஆமாங்க, இந்த இளைஞர்கள் காரின் ஜன்னலில் அமர்ந்தபடி அலப்பறையில் ஈடுபட்டவாறு மும்பை நகரத்தின் சாலைகளில் சுற்றித் திரிந்திருக்கின்றனர்.

போதையில் இருந்தாகூட இப்படியா செய்வது... தரமான பாடம் புகட்டிய காவல்துறை... இந்த நாளை அவங்க மறக்கவே மாட்டாங்க!!

இதைக் கண்டு அதிர்ந்துபோன சக வாகன ஓட்டி ஒருவர் தன்னுடைய செல்போனில் சம்பவம் முழுவதையும் படமாக்கி அதனை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார். இந்த வீடியோவே இளைஞர்கள் தற்போது போலீஸாரிடத்தில் சிக்க காரணமாகியிருக்கின்றது. டிசம்பர் 2ம் தேதி அதிகாலை சுமார் 1.25 மணியளவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

போதையில் இருந்தாகூட இப்படியா செய்வது... தரமான பாடம் புகட்டிய காவல்துறை... இந்த நாளை அவங்க மறக்கவே மாட்டாங்க!!

வீடியோ எடுக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே அதனை அந்நபர் டுவிட்டரில் பதிவிட்டிருக்கின்றார். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம். இந்த சம்பவம் மும்பை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சஹாரா யுரான் மேம்பாலம் பகுதியில் அரங்கேயிருக்கின்றது. வீடியோவை ஒவ்வொரு நெட்டிசன்களும் மற்றவர்களும் காணும்படி ஷேர் செய்தனர்.

இவ்வாறு தொடர்ச்சியாக வீடியோ வைரலானதை அடுத்து 2 தேதி அன்றிலிருந்தே மும்பை போலீஸார் இளைஞர்களை தேட ஆரம்பித்திருக்கின்றனர். தீவிர தேடுதலைத் தொடர்ந்து நேற்றைய தினம் (4 டிசம்பர்) சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி மூவரை போலீஸார் கைது செய்தனர். ஜன்னலில் அமர்ந்து பயணித்தது மட்டுமின்றி இளைஞர்கள் சம்பவத்தின்போது மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

போதையில் இருந்தாகூட இப்படியா செய்வது... தரமான பாடம் புகட்டிய காவல்துறை... இந்த நாளை அவங்க மறக்கவே மாட்டாங்க!!

மேலும், கார் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோதே ஜன்னலில் அமர்ந்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் மதுவை அருந்தியிருக்கின்றனர். இதுபோன்ற விதிமீறல் செயல்களே இளைஞர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க காரணமாக அமைந்திருக்கின்றது. இளைஞர்கள் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பது மும்பை மிர்ரர் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் பற்றிய வேறெந்த தகவலும் கிடைக்கவில்லை.

போதையில் இருந்தாகூட இப்படியா செய்வது... தரமான பாடம் புகட்டிய காவல்துறை... இந்த நாளை அவங்க மறக்கவே மாட்டாங்க!!

மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவது பெரும் விபத்துகளுக்கு வழி வகுக்கும் எனவேதான் போலீஸார் குடிபோதையில் வாகனங்களை இயக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கின்றனர். உலகின் பல்வேறு மூலைகளில் நடைபெறும் பெரும்பாலான விபத்துகளுக்கு வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவதே முக்கிய காரணமாக இருக்கின்றது. எனவேதான் இவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க முயற்சிக்கின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mumbai Police Arrested 3 Youths: Here Is Why?. Read In Tamil.
Story first published: Saturday, December 5, 2020, 10:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X