திருடர்களை தேடி பிடித்த வேன்கள் இனி வைரசை அழிக்க உதவும்... தரமான நடவடிக்கை எடுத்த மும்பை போலீஸ்..

கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துக் கொண்டிருக்கும் வேலையில் போலீஸார் தரமான நடவடிக்கையை மக்களின் பாதுகாப்பிற்காக எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

திருடர்களை தேடி பிடித்த வேன்கள் இனி வைரசை அழிக்க உதவும்... தரமான நடவடிக்கை எடுத்த மும்பை போலீஸ்..

கண்களுக்கு புலப்படாத ஒற்றை வைரஸ் (கொரோனா) உலக நாடுகள் அனைத்திற்கும் பெரும் சவாலை ஏற்படுத்தி வருகின்றது. நாளுக்கு நாள் புதிய எண்ணிக்கையில் பரவி வரும் இந்த வைரசைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக சுகாதாரத்துறையே திக்கி திணறி வருகின்றன.

இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை பல்லாயிரக் கணக்கானோர் இறந்திருக்கின்றனர். மேலும், பாதிப்புற்றும் வருகின்றனர்.

ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

திருடர்களை தேடி பிடித்த வேன்கள் இனி வைரசை அழிக்க உதவும்... தரமான நடவடிக்கை எடுத்த மும்பை போலீஸ்..

இந்தியாவை பொறுத்தவரை இந்த வைரஸ் இப்போதே அதன் உக்கிர தன்மையைக் காட்ட தொடங்கியிருக்கின்றது. அதிலும், கடந்த சில வாரங்களாக இதன் பரவும் விகிதம் புதிய இலக்கை எட்டி வருகின்றது. எனவே, ஏப்ரல் 14ம் தேதி வரை மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு, தற்போது அடுத்த மாதம் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருடர்களை தேடி பிடித்த வேன்கள் இனி வைரசை அழிக்க உதவும்... தரமான நடவடிக்கை எடுத்த மும்பை போலீஸ்..

இந்த 2.0 ஊரடங்கு உத்தரவினால் மக்கள் பெருத்த கலக்கத்தில் உறைந்திருக்கின்றனர். முதல்நிலை ஊரடங்கு உத்தரவின் தாக்கத்தில் இருந்தே அவர்கள் இன்னும் மீளாதநிலையில், 2.0 ஊரடங்கு உத்தரவு என்னவென்னெல்லாம் செய்யவிருக்கின்றதோ? என்ற அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.

இருப்பினும், கொரோனா பிடியில் இருந்து தப்பிக்க இம்மாதிரியான கசப்பான நடவடிக்கைகளே இப்போதைக்கு நம் கை வசம் இருக்கும் தீர்வாக உள்ளது.

திருடர்களை தேடி பிடித்த வேன்கள் இனி வைரசை அழிக்க உதவும்... தரமான நடவடிக்கை எடுத்த மும்பை போலீஸ்..

இதைத்தொடர்ந்து, வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியிலும் அந்தந்த மாநிலங்கள் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்தவகையில், சிறப்பு நடவடிக்கையாக மும்பை நகர போலீஸார் அவர்களின் வேன்களை கிருமி நாசினி எந்திரங்களாக பயன்படுத்த முடிவு செய்திருகின்றனர்.

திருடர்களை தேடி பிடித்த வேன்கள் இனி வைரசை அழிக்க உதவும்... தரமான நடவடிக்கை எடுத்த மும்பை போலீஸ்..

நாட்டில் அதிகம் கொரோனா வைரஸ் தொற்றுடைய மாநிலமாக மஹாராஷ்டிரா இருக்கின்றது. 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதனாலயே இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் இது முதல் இடத்தில் இருக்கின்றது.

திருடர்களை தேடி பிடித்த வேன்கள் இனி வைரசை அழிக்க உதவும்... தரமான நடவடிக்கை எடுத்த மும்பை போலீஸ்..

அதிலும் மாநிலத்தின் முக்கிய நகரங்களான மும்பை மற்றும் புனேவில் அதிக தொற்றுடையவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

எனவே, பல அதிரடி திட்டங்களுடன் அம்மாநில அரசு கொரோனாவிற்கு எதிரான போரில் களமிறங்கியிருக்கின்றன. அந்தவகையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் ஓர் நடவடிக்கைதான் இந்த கிருமி நாசினி தெளிப்பு திட்டம்.

திருடர்களை தேடி பிடித்த வேன்கள் இனி வைரசை அழிக்க உதவும்... தரமான நடவடிக்கை எடுத்த மும்பை போலீஸ்..

இதற்காக அந்நகர காவல்துறையின் வாகனங்களை சிறப்பு தொழில்நுட்ப கருவிகளின் உதவியால் கிருமி நாசினி தெளிப்பு வாகனமாக மாற்றப்பட்டிருக்கின்றது. இந்த வாகனங்கள் நகரத்தின் சந்து, பொந்துகள் என அனைத்து பகுதிகளிலும் சென்று கிருமி நாசினிகளை தெளிக்கும்.

திருடர்களை தேடி பிடித்த வேன்கள் இனி வைரசை அழிக்க உதவும்... தரமான நடவடிக்கை எடுத்த மும்பை போலீஸ்..

இந்த புதிய முயற்சியை உறுதி செய்யும் வகையில் மும்பை நகர போலீஸார் அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கொரோனாவிற்கு எதிரான போரில் பங்களிக்கும் விதமாக வேன்கள் கிருமிநாசினி எந்திரமாக மாற்றப்பட்டிருப்பதையும், அந்த வேனின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

திருடர்களை தேடி பிடித்த வேன்கள் இனி வைரசை அழிக்க உதவும்... தரமான நடவடிக்கை எடுத்த மும்பை போலீஸ்..

ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஓர் வேன் என்றதன் அடிப்படையில் காவலர்கள் வேன்கள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் பல ஏற்கனவே களத்தில் பணியைத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

கொரோனா வைரசிடம் இருந்து மக்களைக் காக்கும் பணியில் போலீஸாரின் பங்கு இன்றியமையாததாக உள்ளது.

திருடர்களை தேடி பிடித்த வேன்கள் இனி வைரசை அழிக்க உதவும்... தரமான நடவடிக்கை எடுத்த மும்பை போலீஸ்..

நாட்டின் ஒரு சில இடங்களில் போலீஸார்களால் கசப்பான சம்பவங்கள் அரங்கேறினாலும், அவர்கள் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை தனித்துவிட்டு பணிக்கு வந்துள்ளனர் என்பதை நாம் உணர வேண்டும்.

மேலும், வைரசிடம் இருந்தும் நம்மை காத்துக்கொள்ள போலீஸாரின் பணி மட்டுமின்றி, சில பாதுகாப்பு அம்சங்களைக் கையாள வேண்டும் என்பது அவசியமானதாக மாறியிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mumbai Police Turn Their Vans Into Mobile Sanitisation Units
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X