இது நிச்சயம் உங்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தலாம்... இருட்டுலக தலைவனிடம் இத்தனை ஆடம்பர கார்களா?

இருட்டுலக தலைவனாக வலம் வந்த முத்தப்பா ராய், பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள லக்சூரி கார்களைப் பயன்படுத்தி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இது நிச்சயம் உங்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தலாம்... இருட்டுலக தலைவனிடம் இத்தனை ஆடம்பர கார்களா?

உலக பணக்காரர்களுக்கு இணையான சொகுசு வாழ்க்கையை ஒரு சில அண்டர் கிரவுண்ட் மாஃபியாக்களும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இதை நீங்கள் நம்பிதான் ஆக வேண்டும். ஏனென்றால், இவர்கள் அரசாங்கத்திற்கு தெரியமால் சட்டத்திற்கு புறம்பாக செய்யும் தொழிலின் மூலம் உலகறிந்த தொழிலதிபர்களைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் லாபத்தை ஈட்டி வருகின்றனர்.

இது நிச்சயம் உங்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தலாம்... இருட்டுலக தலைவனிடம் இத்தனை ஆடம்பர கார்களா?

எனவே, அவர்களும் உலக கோடீசுவரர்களுக்கு இணையான லக்சூரி வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதுபற்றிய தகவல் வெளியுலகிற்கு கிடைப்பதில்தான் சிக்கல் இருக்கின்றது. அந்தவகையில் பல ஆண்டுகளாக கருப்பு உலகின் தாதாவாக (மாஃபியா தலைவன்) இருந்து வந்த முத்தப்பா ராய் பற்றிய தகவலைதான் இங்கு நாம் பார்க்க இருக்கின்றோம்.

இது நிச்சயம் உங்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தலாம்... இருட்டுலக தலைவனிடம் இத்தனை ஆடம்பர கார்களா?

கர்நாடகா மாநலத்தின் கடைசி மாஃபியா தலைவனாக இருந்தவரே இந்த முத்தப்பா ராய். இவர், அவரது 68-வது வயதில் காலமானார். இறப்பதற்கு முன்பு வரை பல சட்டத்திற்கு புறம்பான தொழில்களில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த தொழில்களின்மூலம் பல நூறு கோடிகளை அவர் ஈட்டியதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பெங்களூருவை மையமாகக் கொண்டு 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக அவர் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது.

இது நிச்சயம் உங்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தலாம்... இருட்டுலக தலைவனிடம் இத்தனை ஆடம்பர கார்களா?

ஆனால், இவர் ஆரம்பத்தில் மிகவும் சாதாரணமான வாழ்க்கையையே வாழ்ந்து வந்துள்ளார். அந்தவகையில், இவரது முதல் பணி வாழ்க்கை விஜயா வங்கியில் இருந்து தொடங்கியிருக்கின்றது. இதன் பின்னரே முதன் முதலில் 1980ம் ஆண்டு, முத்தப்பாவிற்கு மாஃபியா குழுக்களில் இருந்தவர்களுடன் தொடர்பு கிடைத்துள்ளது.

இது நிச்சயம் உங்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தலாம்... இருட்டுலக தலைவனிடம் இத்தனை ஆடம்பர கார்களா?

இந்த அறிமுகத்தைத் தொடர்ந்தே, எம்பி ஜெய்ராஜை பட்டபகலில் வைத்து முத்தப்பா தீர்த்து கட்டியதாகக் கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தை அடுத்தே முத்தப்பாவின் பெயர் நாடு முழுவதும் ஒலிக்கத் தொடங்கியது. மேலும், இருட்டுலகத்திலும் அவரின் கையோங்க ஆரம்பித்துள்ளது.

இது நிச்சயம் உங்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தலாம்... இருட்டுலக தலைவனிடம் இத்தனை ஆடம்பர கார்களா?

மாஃபியா தொழிலில் கொடிக்கட்டி பறக்கத் தொடங்கிய முத்தப்பா, சொகுசு கார்கள்மீது அலாதியான பிரியம் கொண்டவர் என கூறப்படுகின்றது. இதன்காரணத்தினாலயே அவரது கார் நிறுத்துமிடத்தில் பல லக்சூரி கார்கள் இடம்பெற்றிருந்தன. அந்தவகையில், என்னென்ன விதமான லக்சூரி கார்களை அவர் பயன்படுத்தினார் என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

இது நிச்சயம் உங்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தலாம்... இருட்டுலக தலைவனிடம் இத்தனை ஆடம்பர கார்களா?

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் (Toyota Land Cruiser)

சொகுசு பயணத்தை விரும்பும் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான காராக இருந்து வருகின்றது டொயோட்டா லேண்ட் க்ரூஸர். அந்தவகையில், இருட்டுலக தலைவன் முத்தப்பாவையும் இந்த கார் ஈர்த்துள்ளது. இவர், கருப்பு நிற லேண்ட் க்ரூஸர் காரை பயன்படுத்தியுள்ளார்.

இது நிச்சயம் உங்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தலாம்... இருட்டுலக தலைவனிடம் இத்தனை ஆடம்பர கார்களா?

இந்த காரில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து அக்ஸசெரீஸ்களும் ஆஃப்டர் மார்க்கெட் பொருட்களாகும். குறிப்பாக, காரின் ஜன்னல் கண்ணாடிகள் முதல் அலாய் வீல் வரை சந்தைக்கு பிறகானவை ஆகும். இந்த காரைதான் அவர் பொதுவான பயணங்களுக்கு பயன்படுத்தி வந்துள்ளார். இதன்காரணத்தினாலயே இந்த காரை தனிக் கவனம் கொண்டு பராமரித்து வந்திருக்கின்றார்.

இது நிச்சயம் உங்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தலாம்... இருட்டுலக தலைவனிடம் இத்தனை ஆடம்பர கார்களா?

லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் (Land Rover Range Rover)

முத்தப்பாவின் கராஜில் காணப்படும் மற்றுமொரு எஸ்யூவி ரக காராக லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் கார் இருக்கின்றது. இது பழைய தலைமுறை மாடல் ஆகும். டொயோட்டா லேண்ட் க்ரூஸரை அடுத்து அவர் அதிகம் பயன்படுத்திய கார்களில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்களின் விருப்பமான கார்களில் ஒன்றாக ரேஞ்ஜ் ரோவர் கார் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இது நிச்சயம் உங்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தலாம்... இருட்டுலக தலைவனிடம் இத்தனை ஆடம்பர கார்களா?

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ்

முத்தப்பாவின் பயன்பாட்டில் இருந்த அதிக வசதி கொண்ட செடான் ரக கார்களில் பென்ஸ் எஸ் கிளாஸ் காரே முதல் இடத்தில் இருக்கின்றது. இந்த காரிலும் அடர்ந்த கருப்பு நிற ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் ஐந்து ஸ்போக்ஸ்கள் கொண்ட வீல் உள்ளிட்ட ஆஃப்டர் மார்க்கெட் பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

இது நிச்சயம் உங்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தலாம்... இருட்டுலக தலைவனிடம் இத்தனை ஆடம்பர கார்களா?

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்கே கூப் (Mercedes-Benz SLK Coupe)

இது 2005ம் ஆண்டு மாடல் ஆகும். இந்த காரில் பறவை இறக்கைபோல் விரியும் டூர்கள் காணப்படுகின்றது. இந்த ரக கார்கள் ஒரு சில மட்டுமே நாட்டில் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. எஸ்எல்கே கூப் ஓர் சிறந்த ஸ்போர்ட்ஸ் காராகும். எனவேதான் உலகம் முழுவதிலும் இந்த கார் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. முத்தப்பா இந்த காரை அதிகளவில் பயன்படுத்த மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அரிதினும் அரிதாகவே இதனை அவர் பயன்படுத்தி வந்துள்ளார்.

இது நிச்சயம் உங்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தலாம்... இருட்டுலக தலைவனிடம் இத்தனை ஆடம்பர கார்களா?

போலாரிஸ் ஸ்போர்ட்ஸ்மேன் (Polaris Sportsman)

போலாரிஸ் நிறுவனத்தின் இந்த ஏடிவி ரக வாகனம் உலகளவி ஓர் தலைவனாக காட்சியளித்து வருகின்றுத. இந்த வாகனத்தை உற்பத்தி செய்யும் போலாரிஸ் நிறுவனம் சில தசாப்தங்களுக்கு முன்பே இந்தியாவில் நுழைந்தது. இந்த நிறுவனத்திடம் இருந்துதான் முத்தப்பா ஸ்போர்ட்ஸ்மேன் ஏடிவி வாகனத்தை பயன்பாட்டிற்கு வாங்கினார். இந்த ரக வாகனத்தை சாலையில் இயக்குவது சட்டபூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவேதான் இந்த வாகனத்தை வீடு மற்றும் தனியார் பகுதிகளில் இயக்கி வந்துள்ளார்.

இது நிச்சயம் உங்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தலாம்... இருட்டுலக தலைவனிடம் இத்தனை ஆடம்பர கார்களா?

ஆடி க்யூ5 (Audi Q5)

ஆடி க்யூ 5 இந்தியாவின் பெரும்பாலான தொழிலதிபர்கள் பயன்படுத்தும் கார்களில் ஒன்றாக இருக்கின்றது. இந்த கார் அதிக சொகுசு வசதிகளைக் கொண்ட விலையுயர்ந்த மாடல் ஆகும். இது ஓர் மிட் சைஸ் எஸ்யூவி ரக காராகும். எனவே, இதில் ஏராளமான சொகுசு வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner)

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ரக காரில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரும் ஒன்று. இந்த கார் தொழிலதிபர்கள் மத்தியில் மட்டுமின்றி தொழிலதிபர்கள் மத்தியிலும் அதிகம் வரவேற்பைப் பெற்ற காராக இருக்கின்றது. இந்த காரும் முத்தப்பா அதிகம் பயன்படுத்தும் கார்களில் ஒன்றாக இருக்கின்றது. பெரும்பாலும் முத்தப்பாவின் கான்வாயில் இந்த கார் அவரது பாதுகாப்பிற்காக பயன்படுத்தியிருப்பதை நம்மால் காண முடியும்.

இவ்வாறு தனது வாழ்க்கையை எந்தவொரு குறையுமின்றி சொகுசாக அனுபவித்து வந்த முத்தப்பாவை துபாயில் இருந்து நாடு கடத்தியது இந்திய அரசு. ஆனால், அவருக்கு இருந்த செல்வாக்கு மற்றும் போதிய ஆதாரம் இல்லாத காரணங்களால் குறிப்பிட்ட தண்டனைகளுடன் அவர் விடுதலை பெற்றார்.

அதுமட்டுமின்றி, அவர் நாடு கடத்தப்பட்டபோது இரு ஆண்டுகளாக, தனக்கும், இருட்டுலகிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என தெரிவித்திருந்தார். முத்தப்பாவின் இந்த வாழ்க்கைப் பயணத்தை தொடர்பு வைத்து பிரபல திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைப்படம் ஒன்றை உருவாக்கியிருந்தார். இந்த படம் அவருக்கு நல்ல ஹிட்டைக் கொடுத்தது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 16, 2020, 13:28 [IST]
English summary
Muthappa Rai And His Exotic Cars. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+