நவீன சிறப்பம்சங்களுடன் சென்னையில் புதிய பிஎம்டபிள்யூ கார் ஷோரூம் திறப்பு!

நவீன சிறப்பம்சங்களுடன் கட்டமைக்கப்பட்ட புதிய பிஎம்டபிள்யூ கார் ஷோரூம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூம் குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நவீன சிறப்பம்சங்களுடன் சென்னையில் புதிய பிஎம்டபிள்யூ கார் ஷோரூம் திறப்பு!

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் பிஎம்டபிள்யூ நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. கடும் சந்தைப் போட்டி அதிகரித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கு அதிக முக்கியத்துவத்தை பிஎம்டபிள்யூ கொடுத்து வருகிறது.

நவீன சிறப்பம்சங்களுடன் சென்னையில் புதிய பிஎம்டபிள்யூ கார் ஷோரூம் திறப்பு!

கார் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் வகையில் நவீன கட்டமைப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ஷோரூம்களை திறந்து வருகிறது. அந்த வகையில், நவீன கட்டமைப்பு மற்றும் வசதிகள் கொண்ட புதிய ஷோரூம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.

நவீன சிறப்பம்சங்களுடன் சென்னையில் புதிய பிஎம்டபிள்யூ கார் ஷோரூம் திறப்பு!

சென்னை சோழிங்கநல்லூர், பழைய மகாபலிபுரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஷோரூமை பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட குன் நிறுவனம் திறந்துள்ளது. பிஎம்டபிள்யூ ஃபெஸிலிட்டி நெக்ஸ்ட் கான்செப்ட் என்ற பெயரில் இந்த ஷோரூம்கள் குறிப்பிடப்படுகின்றன.

நவீன சிறப்பம்சங்களுடன் சென்னையில் புதிய பிஎம்டபிள்யூ கார் ஷோரூம் திறப்பு!

இந்த புதிய பிஎம்டபிள்யூ ஷோரூம் 6,500 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூமில் ஒரே நேரத்தில் 6 சொகுசு கார்களை காட்சிப்படுத்தப்பட முடியும். அதேபோன்று, பிஎம்டபிள்யூ கார்களின் டிசைன், சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப அம்சங்களை தத்ரூபமாக டிவி திரை மூலமாக பார்க்கக்கூடிய வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

நவீன சிறப்பம்சங்களுடன் சென்னையில் புதிய பிஎம்டபிள்யூ கார் ஷோரூம் திறப்பு!

இந்த புதிய பிஎம்டபிள்யூ ஷோரூமில் கார்கள் மற்றும் கார்களுக்கான பிரத்கேய ஆக்சஸெரீகளை தேர்வு செய்யும் வகையில் மைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் சாவகசமாக தங்களது பிஎம்டபிள்யூ காரை தேர்வு செய்து டெலிவிரி பெறுவதற்கான அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மிகப்பெரிய அளவில் இந்த ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது.

நவீன சிறப்பம்சங்களுடன் சென்னையில் புதிய பிஎம்டபிள்யூ கார் ஷோரூம் திறப்பு!

இந்த ஷோரூமில் பிஎம்டபிள்யூ கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கடன் திட்ட உதவிகளையும் எளிதாக பெறும் வாய்ப்பு உள்ளது. இதற்காக பிரத்யேக கடன் திட்ட ஆலோசகர்கள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் உள்ளனர்.

நவீன சிறப்பம்சங்களுடன் சென்னையில் புதிய பிஎம்டபிள்யூ கார் ஷோரூம் திறப்பு!

இந்த புதிய ஷோரூம் திறப்பு குறித்து பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பவா கூறுகையில்,"இந்தியர்கள் அதிகம் விரும்பும் சொகுசு பிராண்டாக பிஎம்டபிள்யூ உள்ளது. எனவே, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை புதுமையான வகையில் பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்குகிறோம்.

நவீன சிறப்பம்சங்களுடன் சென்னையில் புதிய பிஎம்டபிள்யூ கார் ஷோரூம் திறப்பு!

எங்களது வர்த்தகத்தில் சென்னை மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. எனவே, சென்னையில் டீலர் கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக இந்த புதிய ஷோரூமை திறந்துள்ளோம். இந்த நவீன கட்டமைப்பு கொண்ட ஷோரூம் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த கார் வாங்கும் அனுபவத்தை வழங்க முடியும்," என்று தெரிவித்துள்ளார்.

Most Read Articles

English summary
BMW has opened a new KUN Exclusive showroom in Chennai. The new state-of-the-art dealership situated on the Old Mahabalipuram Road, Chennai is said to be based on the BMW Facility NEXT Concept.
Story first published: Thursday, December 17, 2020, 15:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X