அடுத்த 3 வாரங்களில் அறிமுகமாகும் அட்டகாசமான 5 புதிய கார் மாடல்கள்!

பண்டிகை கால ரிலீசாக அடுத்த 3 வாரங்களில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள அட்டகாசமான 5 புதிய கார் மாடல்களின் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

அடுத்த 3 வாரங்களில் அறிமுகமாகும் அட்டகாசமான 5 புதிய கார் மாடல்கள்!

01. கியா சொனெட்

வாடிக்கையாளர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கியா சொனெட் எஸ்யூவி வரும் 18ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த எஸ்யூவிக்கு ஏற்கனவே முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது. ஹூண்டாய் வெனியூ உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் இந்த காரும் உருவாக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 வாரங்களில் அறிமுகமாகும் அட்டகாசமான 5 புதிய கார் மாடல்கள்!

புதிய கியா சொனெட் எஸ்யூவியில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளுடன் வருகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம், வயர்லெஸ் சார்ஜர் என ஏராளமான வசதிகள் இடம்பெறும். ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. 4 மீட்டர் நீளத்திற்குள் உருவாக்கப்படும் சப் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக கருதப்படுவதால், வாடிக்கையாளர்கள் மத்தியிலும் அதிக ஆவல் இருந்து வருகிறது.

அடுத்த 3 வாரங்களில் அறிமுகமாகும் அட்டகாசமான 5 புதிய கார் மாடல்கள்!

02. ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேட்டிக்

புதிய ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 மாடலானது ரூ.7.49 லட்சம் என்ற மிக சவாலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், அதிக மதிப்புவாய்ந்த மாடலாக வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டும் கிடைத்து வரும் இந்த கார் விரைவில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் வர இருக்கிறது.

அடுத்த 3 வாரங்களில் அறிமுகமாகும் அட்டகாசமான 5 புதிய கார் மாடல்கள்!

வரும் 18ந் தேதி ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 மாடலின் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த மாடலுக்கு ரூ.25,000 முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. இந்த காரில் இருக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 109 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் வர இருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 16.24 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த 3 வாரங்களில் அறிமுகமாகும் அட்டகாசமான 5 புதிய கார் மாடல்கள்!

03. டொயோட்டா அர்பன் க்ரூஸர்

மாருதி பிரெஸ்ஸா அடிப்படையில் ரீபேட்ஜ் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளு. இந்த மாடலுக்கு ஏற்கனவே முன்பதிவு நடந்து வருகிறது. மாருதி பிரெஸ்ஸாவிற்கு இருக்கும் வரவேற்பும், நம்பிக்கையும் டொயோட்டா பிராண்டிலும் குறிப்பிடத்தக்க அளவு எதிரொலிக்கும். சிறிய வடிவமைப்பு மாற்றங்களுடன் டொயோட்டா பேட்ஜில் வர இருக்கிறது.

அடுத்த 3 வாரங்களில் அறிமுகமாகும் அட்டகாசமான 5 புதிய கார் மாடல்கள்!

புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெறுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும். மாருதி பிரெஸ்ஸாவில் கொடுக்கப்படும் அதே வேரியண்ட்டுகள் வேறு பெயரில் அதே வசதிகளுடன் வர இருக்கிறது. ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 3 வாரங்களில் அறிமுகமாகும் அட்டகாசமான 5 புதிய கார் மாடல்கள்!

04. ஆடி க்யூ2

இந்திய சொகுசு கார் சந்தையில் முதலிடத்தை திரும்ப பிடித்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் ஆடி கார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதற்காக, பல புதிய மாடல்களை தொடர்ந்து களமிறக்கி வருகிறது. இந்த வரிசையில், வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மாடல்தான் க்யூ2 எஸ்யூவி. காரணம், இதுதான் ஆடி கார் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எஸ்யூவி மாடலாக இருக்கும்.

அடுத்த 3 வாரங்களில் அறிமுகமாகும் அட்டகாசமான 5 புதிய கார் மாடல்கள்!

இந்த காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்பட்டு இருக்கும். ஆடி க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் இதன் முக்கிய அம்சமாக இுக்கும். இந்த கார் 4,191 மிமீ நீளமும், 1,794 மிமீ அகலமும், 1,508 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது.

அடுத்த 3 வாரங்களில் அறிமுகமாகும் அட்டகாசமான 5 புதிய கார் மாடல்கள்!

05. மெர்சிடிஸ் பென்ஸ் EQC எலெக்ட்ரிக் கார்

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் EQC கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனால், இந்த கார் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே உள்ளது. வழக்கமான பென்ஸ் கார்களிலிருந்து வேறுபடுத்தும் பல தனித்துமான டிசைன் அம்சங்களுடன் இந்த கார் வர இருக்கிறது.

அடுத்த 3 வாரங்களில் அறிமுகமாகும் அட்டகாசமான 5 புதிய கார் மாடல்கள்!

இந்த கார் மாடலானது 400 4மேட்டிக் என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த வேரியண்ட்டில் 85kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. 0 - 100 கிமீ வேகத்தை 5.1 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமையை பெற்றிருக்கிறது. சாதாரண சார்ஜர் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜர் வசதிகளுடன் வர இருக்கிறது.

Most Read Articles

English summary
Here’s the list of new car and SUV launches in September 2020 in India.
Story first published: Wednesday, September 9, 2020, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X