ஆகஸ்ட் முதல் கார், பைக் விலை சற்றே குறைய வாய்ப்பு!

வாகன காப்பீட்டு திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம் காரணமாக, வரும் 1ந் தேதி முதல் கார், பைக்குகளின் விலை சற்றே குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்ட் முதல் கார், பைக் ஆன்ரோடு விலை சற்றே குறைய வாய்ப்பு!

புதிய கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை வாங்கும்போது நீண்ட கால ஒருங்கிணைந்த வாகன காப்பீட்டு திட்டத்தையும் சேர்த்து வாங்குவது கட்டாயமாக இருக்கிறது. கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கும், இருசக்கர வாகனங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கும் நீண்ட கால வாகன காப்பீட்டை வாங்குவது அவசியம்.

ஆகஸ்ட் முதல் கார், பைக் ஆன்ரோடு விலை சற்றே குறைய வாய்ப்பு!

இந்த ஒருங்கிணைந்த வாகன காப்பீட்டு திட்டத்தில் மூன்றாம் நபர் காப்பீடு மற்றும் Own Damage Cover ஆகிய இரண்டு திட்டங்களை ஒருங்கிணைத்து தரப்படுகிறது.

ஆகஸ்ட் முதல் கார், பைக் ஆன்ரோடு விலை சற்றே குறைய வாய்ப்பு!

அதாவது, வாகனம் மோதி மூன்றாம் நபருக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான மூன்றாம் நபர் காப்பீடு திட்டமும், விபத்தில் சிக்கும்போது வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களை சரிசெய்வதற்கான Own Damage Cover என்ற காப்பீடு திட்டமும் சேர்த்து ஒருங்கிணைந்த வாகன காப்பீட்டுத் திட்டம் வழங்கப்படுகிறது.

ஆகஸ்ட் முதல் கார், பைக் ஆன்ரோடு விலை சற்றே குறைய வாய்ப்பு!

இந்த திட்டத்தை நீண்ட காலத்திற்கு எடுக்கும் சூழல் இருப்பதால், புதிய வாகனம் வாங்குவோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. அடுத்த மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கான வாகன காப்பீட்டுக்கான பிரிமீயத் தொகையை புதிய வாகனம் வாங்கும்போதே செலுத்திவிடுவது கட்டாயமாக உள்ளது.

ஆகஸ்ட் முதல் கார், பைக் ஆன்ரோடு விலை சற்றே குறைய வாய்ப்பு!

இந்த நிலையில், வாகனங்களுக்கான ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டத்தில் சிறிய மாறுதலை தேசிய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (IRDAI) செய்துள்ளது. இதன்படி, கார், பைக்குளுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டத்தை முறையே மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு வாங்குவது தொடர்ந்து அவசியமாக உள்ளது.

ஆகஸ்ட் முதல் கார், பைக் ஆன்ரோடு விலை சற்றே குறைய வாய்ப்பு!

அதேநேரத்தில், வாகனங்களுக்கு ஏற்படும் சேதத்தை சரிசெய்வதற்காக கொடுக்கப்படும் Own Damage Cover திட்டத்தை மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு சேர்த்து எடுக்க தேவையில்லை. ஆனால், ஓர் ஆண்டுக்கு மட்டும் எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

ஆகஸ்ட் முதல் கார், பைக் ஆன்ரோடு விலை சற்றே குறைய வாய்ப்பு!

கடந்த ஜூன் மாதமே இதற்கான அறிவிப்பை தேசிய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுவிட்டது. மேலும், வரும் ஆகஸ்ட் 1 முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளது. வாடிக்கையாளர்களை பழையபடி நீண்ட காலத்திற்கான ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டத்தை எடுப்பதற்கு வலியுறுத்துவதும் தவிர்க்கப்படும்.

ஆகஸ்ட் முதல் கார், பைக் ஆன்ரோடு விலை சற்றே குறைய வாய்ப்பு!

இதன்மூலமாக, கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் ஆன்ரோடு விலையில் சற்றே குறைய வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில், ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து எடுப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்படும்.

ஆகஸ்ட் முதல் கார், பைக் ஆன்ரோடு விலை சற்றே குறைய வாய்ப்பு!

ஆகஸ்ட் 1ந் தேதிக்கு பிறகு புதிதாக வாகனம் வாங்குவோர், இதுபற்றி டீலர்கள் அல்லது காப்பீட்டு நிறுவனத்தின் ஆலோசகரிடம் சாதக, பாதகங்களை தெரிந்து கொண்டு வாகன காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

Most Read Articles
 

English summary
New cars and bikes To Get cheaper in India from August 1, 2020
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X