புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

பல்வேறு சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய மாடல் குறித்த அனைத்து விபரங்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

இந்திய ஆஃப்ரோடு எஸ்யூவி கார் சந்தையில் மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு மிக நேரடி போட்டியாளராக ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி இருந்து வருகிறது. இந்த நிலையில், புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி விற்பனைக்கு வர இருப்பதால், ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவிக்கு கடும் நெருக்கடி காத்திருக்கிறது.

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

இந்த நெருக்கடியை போக்கிக் கொள்வதற்கான முயற்சிகளை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் மேற்கொண்டுள்ளது. அதன்படி, குர்கா எஸ்யூவியில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் சிறப்பு அம்சங்களை சேர்த்து ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியில் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்ப்டடுள்ளன. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய க்ரில் அமைப்பு, பம்பர் ஆகியவற்றுடன் மாற்றங்கள் கண்டுள்ளது. இந்த காரில் 16 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியில் ரூஃப் கேரியர், நீர் நிலைகளில் செல்லும்போது எஞ்சினுக்கு காற்றை வழங்கும் ஸ்நோர்க்கெல் அமைப்பு உள்ளிட்டவற்றுடன் காட்சியளிக்கிறது. இது கூடுதல் ஆக்சஸெரீயாக வழங்கப்படலாம்.

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

அடுத்து இன்டீரியரிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிதாக தொடுதிரை அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டிஜிட்டல் டிஸ்ப்ளே ஆகியவற்றுடன் நவீன யுக மாடலாக மாறி இருக்கிறது.

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் சென்சார்கள், ஸ்பீடு வார்னிங் அலர்ட், பவர் விண்டோஸ் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 2.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 90 எச்பி பவரை வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

இந்த ஆஃப்ரோடு பயன்பாட்டு எஸ்யூவியில் முன்புறத்தில் இன்டிபென்டென்ட் சஸ்பென்ஷன் அமைப்பு உள்ளது. மேனுவல் லாக்கிங் டிஃபரன்ஷியல், 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவையும் இதனை ஆஃப்ரோடு மாடலாக மதிப்பை கூட்டுகிறது.

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

இந்த எஸ்யூவி வழக்கம்போல் மூன்று விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஓரிரு வாரங்களில் விலை அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 5, 2020, 22:55 [IST]
English summary
Force motors has unveiled Gurkha BS6 SUV At Auto Expo. It will be launched in India very soon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+