புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கு முன்பதிவு துவங்கியது... விபரம்

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கு இந்தியாவில் முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கு முன்பதிவு துவங்கியது... விபரம்

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் முக்கிய தேர்வாக ஹோண்டா சிட்டி கார் இருந்து வருகிறது. சந்தைப் போட்டி அதிகரித்துள்ளதால், போட்டியாளர்களை துவம்சம் செய்யும் வகையில் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக ஹோண்டா சிட்டி கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கு முன்பதிவு துவங்கியது... விபரம்

இந்தநிலையில், இந்த புதிய தலைமுறை மாடலுக்கான முன்பதிவு இன்று அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டு இருப்பதாக ஹோண்டா அறிவித்துள்ளது. ஆன்லைனில் ரூ,5,000 முன்பணத்துடனும், டீலரில் நேரடியாக முன்பதிவு செய்வோர் ரூ.21,000 முன்பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கு முன்பதிவு துவங்கியது... விபரம்

ஐந்தாம் தலைமுறை மாடலாக உருவாகி இருக்கும் புதிய ஹோண்டா சிட்டி கார் வடிவமைப்பிலும், வசதிகளில் முற்றிலுமாக புதிய மாடலாகவே மாறி இருக்கிறது. மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் நீளத்திலும், அகலத்திலும் மிகப்பெரிய கார் மாடலாக வருகிறது. இதனால், உட்புறத்தில் மிகச் சிறப்பான இடவசதியை அளிக்கும்.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கு முன்பதிவு துவங்கியது... விபரம்

இந்த காரில் பிஎஸ்6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்ட எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. பெட்ரோல் மாடலில் இடம்பெறும் 1.5 லிட்டர் பிஎஸ்6 எஞ்சின் அதிகபட்சமாக 119 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கு முன்பதிவு துவங்கியது... விபரம்

டீசல் மாடலில் பொருத்தப்பட்டு இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 98 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும்.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கு முன்பதிவு துவங்கியது... விபரம்

புதிய ஹோண்டா சிட்டி காரில் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், முழுமையான டிஎஃப்டி திரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் ஆகியவை இந்த மாடலில் இடம்பெற்றிருக்கும்.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கு முன்பதிவு துவங்கியது... விபரம்

இந்த காரில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட உள்ளது. ஹோண்டா கனெக்டெட் கார் தொழில்நுட்பத்துடன் இந்த சாதனம் வர இருக்கிறது. அலெக்ஸா ரிமோட் வாய்ஸ் கமாண்ட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கும்.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கு முன்பதிவு துவங்கியது... விபரம்

டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் உள்ள புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் உற்பத்தி சில தினங்களுக்கு முன் துவங்கப்பட்டது. அங்கு உற்பத்தி செய்யப்படும் புதிய ஹோண்டா சிட்டி கார்கள் நேற்று முன்தினம் முதல் டீலர்களுக்கு அனுப்பும் பணிகளும் நடந்து வருகின்றன.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கு முன்பதிவு துவங்கியது... விபரம்

தற்போது விற்பனையில் உள்ள நான்காம் தலைமுறை மாடலைவி புதிய மாடல் முற்றிலும் வேற லெவலுக்கு மாறி இருக்கிறது. இதனால், விலையும் கணிசமாக அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. ரூ.11 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் துவக்கத்தில் விற்பனைக்கு வந்துவிடும் வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 25, 2020, 17:30 [IST]
English summary
Honda has started pre-bookings for the new generation City car in India ahead of its launch next month.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+