பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு அறிமுகம்... விபரம்!

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட பல முக்கிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு அறிமுகம்... விபரம்!

தலைமுறை மாற்றம்

புதிய ஹோண்டா சிட்டி கார் வடிவமைப்பில் முற்றிலும் வேறுபட்ட மாடலாகவும், பெரிய காராகவும் மாறி இருக்கிறது. ஐந்தாம் தலைமுறை மாடலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய ஹோண்டா சிட்டி கார் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். இந்த கார் வசதிகளை பொறுத்து V, VX மற்றும் ZX ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் வந்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு அறிமுகம்... விபரம்!

பெரிய கார்

புதிய ஹோண்டா சிட்டி கார் 4,549 மிமீ நீளத்துடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இதன் ரக மாடல்களில் மிகவும் பெரிய கார் மாடலாக கூறலாம். மேலும், உட்புற இடவசதியும் சிறப்பாக மேம்பட்டுள்ளது. புதிய ஹோண்டா சிவிக் உள்ளிட்ட டிசைன் அம்சங்களுடன் மிகவும் வசீகரமாக உள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு அறிமுகம்... விபரம்!

சிறப்பம்சங்கள்

முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், 8.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7.0 அங்குல திரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 8 ஸ்பீக்கர்களுடன் சவுண்ட் சிஸ்டம், அலெக்ஸா வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு அறிமுகம்... விபரம்!

வசதிகள்

தவிரவும், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், பேடில் ஷிஃப்ட் வசதி, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதி, புஷ் பட்டன் ஸ்டார்ட், ஒன் டச் சென்சார் மூலமாக கதவுகளை திறக்கும் வசதிகள் என வசதிகளில் அசத்துகிறது புதிய ஹோண்டா சிட்டி கார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு அறிமுகம்... விபரம்!

எஞ்சின் தேர்வுகள்

புதிய ஹோண்டா சிட்டி காரில் உள்ள 1.5 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 119 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 99 பிஎச்பி பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இரண்டு எஞ்சின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. பெட்ரோல் மாடலில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் உள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு அறிமுகம்... விபரம்!

மைலேஜ்

புதிய ஹோண்டா சிட்டி காரின் பெட்ரோல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 18.4 கிமீ மைலேஜையும், சிவிடி மாடல் லிட்டருக்கு 17.8 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டீசல் மாடல் சோதனை கள தரவுகளின்படி, லிட்டருக்கு 24.1 கிமீ மைலேஜை தரும் என்றும் ஹோண்டா கூறுகிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு அறிமுகம்... விபரம்!

பாதுகாப்பு அம்சங்கள்

புதிய ஹோண்டா சிட்டி காரில் லேன் வாட்ச் கேமரா, 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், அதிக உறுதிமிக்க ஸ்டீல் ஃப்ரேம் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பான அம்சங்களை பெற்றுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு அறிமுகம்... விபரம்!

விலை விபரம்

புதிய ஹோண்டா சிட்டி காருக்கு ரூ.10.89 லட்சம் முதல் ரூ.14.64 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ரேபிட் கார்களுக்கு போட்டியாக இருக்கும். ஆனால், இதன் ரகத்தில் மிகவும் பிரிமீயமான மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு அறிமுகம்... விபரம்!

வாரண்டி

புதிய ஹோண்டா சிட்டி காருக்கு 3 ஆண்டுகளுக்கு வரம்பில்லா கிலோமீட்டர்களுக்கான வாரண்டி வழங்கப்படுகிறது. மேலும், 12 மாதங்கள் அல்லது 10,000 கிமீ தூரத்திற்கு ஒருமுறை வழக்கமான பராமரிப்பு செய்தால் போதுமானது என்று ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், பராமரிப்பு குறைவான கார் மாடலாக முன்னிறுத்த முடியும் என்று ஹோண்டா கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 15, 2020, 13:44 [IST]
English summary
Japanese car maker, Honda has launched new generation City sedan car in India and prices starting at ₹10.89 lakh (Ex-showroom).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+