புதிய ஹோண்டா சிட்டி கார் குறித்து வெளியான தகவல்... உள்ளூர உதறலில் போட்டியாளர்கள்
அண்மையில் இந்தியாவில் புதிய ஹோண்டா சிட்டி கார் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த நிலையில், அந்த கார் குறித்த இன்று வெளியானத் தகவல்கள் போட்டியாளர்களுக்கு பெரும் உதறலை ஏற்படுத்தி உள்ளது.

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் கனவு மாடலாக ஹோண்டா சிட்டி கார் உள்ளது. டிசைன், எஞ்சின், வசதிகள், நம்பகமான எஞ்சின் என அனைத்திலும் சிறந்த தேர்வாக இருப்பதுடன் அந்தஸ்தை உயர்த்தும் அடையாளச் சின்னமாகவும் வாடிக்கையாளர்களால் போற்றப்படுகிறது.

இந்த நிலையில், சிட்டி காரின் மதிப்பை மேலும் உயர்த்தும் விதத்தில் புதிய தலைமுறை அம்சங்களுடன் முற்றிலும் புதிய கார் மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில வெளிநாடுகளில் விற்பனைக்கு வந்துவிட்ட இந்த ஐந்தாம் தலைமுறை சிட்டி கார் வருகையை இந்தியர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அந்த ஆவலை போக்கும் விதமாக, சில நாட்களுக்கு முன் புதிய சிட்டி கார் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது புதிய தலைமுறை சிட்டி கார் உற்பத்தி இந்தியாவில் துவங்கப்பட்டு இருப்பதை ஹோண்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஹோண்டா கார் ஆலையில்தான் இந்த புதிய தலைமுறை சிட்டி கார் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களை பின்பற்றி உற்பத்திப் பணிகள் நடக்கின்றன.

புதிய ஹோண்டா சிட்டி கார் மிகவும் பிரிமீயமான மிட்சைஸ் செடான் கார் மாடலாக நிலைநிறுத்தப்படும். முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள், எல்இடி டெயில் லைட்டுகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், இரட்டை வண்ணக் கலவை என அசத்தும் அம்சங்களுடன் வருகிறது.

மிக தரமான இன்டீரியர் அம்சங்களையும் பெற்றிருக்கும். இந்த காரில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அலெக்ஸா ரிமோட் வாய்ஸ் அசிஸ்ட் வசதி, கனெக்டெட் கார் தொழில்நுட்பத்துடன் வேற லெவலுக்கு மாறி இருக்கிறது.

இந்த காரில் டிஎஃப்டி திரை மற்றும் அனலாக் டயல்களுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. புஷ் பட்டன் ஸ்டார்ட், எலெக்ட்ரிக் சன்ரூஃப், க்ளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஹோண்டா சிட்டி காரில் ஏர்பேக்குகள், லேன் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், வெஹிக்கிள் ஸ்டெபளிட்டி அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் எஞ்சின் 100 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். டீசல் மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு அளிக்கப்படும்.

அதிக இடவசதி, எக்கச்சக்கமான வசதிகள், அசத்தும் டிசைன், மேம்படுத்தப்பட்ட எஞ்சின்கள் என அனைத்திலும் சிறந்த தேர்வாக வர இருக்கிறது புதிய ஹோண்டா சிட்டி கார். அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா கார்களுக்கு கடும் போட்டியை வழங்கும்.


Click it and Unblock the Notifications








