நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் மிகப்பெரிய சூப்பர் ஹிட் அடித்த மாடல் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி. இந்த நிலையில், கடந்த ஆண்டு கியா செல்டோஸ் கார் அறிமுகமானதை தொடர்ந்து, ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் விற்பனையில் தாக்கம் ஏற்பட்டது. அத்துடன், புதிய தலைமுறை மாடல் வர இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வந்ததால், க்ரெட்டா விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

இந்த நிலையில், கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி பெரும் ஆரவாரத்திற்கும், எதிர்பார்ப்புக்கும் மத்தியில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. ஹூண்டாய் விளம்பர தூதராக செயல்பட்டு வரும் நடிகர் ஷாரூக்கான் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா காரை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இந்தியாவில் பெது பார்வைக்கு அறிமுகம் செய்தார்.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

அதேநேரத்தில், புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் விலை விபரம் வெளியிடப்படவில்லை. மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக மட்டும் ஹூண்டாய் மோட்டார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் மார்ச் 17ந் தேதி புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

அதாவது, வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வர இருக்கும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு தக்கவாறு, டெலிவிரி பணிகளை துவங்குவதற்கு ஏற்ப இந்த நாளை ஹூண்டாய் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் வடிவமைப்பிலும், வசதிகள், எஞ்சின் தேர்வுகள் என அனைத்திலும் முற்றிலும் புதிய மாடலாக வர இருக்கிறது. இந்தியாவின் சூப்பர் ஹிட் மாடலாக கொட்டி கட்டி பறந்து வரும் கியா செல்டோஸ் கார் உருவாக்கப்பட்ட அதே கட்டமைப்பு கொள்கையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்ட ஹூண்டாய் கே2 என்ற பிளாட்ஃபார்மில்தான் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா மற்றும் எலான்ட்ரா கார்களும் இதே பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட்டன.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் முன்புறத்தில் பிரம்மாண்ட க்ரில் அமைப்பு, ஸ்கிட் பிளேட் இணைந்த வலிமையான பம்பர், புதிய டிசைனிலான எல்இடி விளக்குகளுடன் ஹெட்லைட் க்ளஸ்ட்டர், புதிய 17 அங்குல அலாய் வீல்கள், ஹெட்லைட் க்ளஸ்ட்டரை பிரதிபலிக்கும் டெயில் லைட் க்ளஸ்ட்டர், ஸ்கிட் பிளேட் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

உட்புறத்திலும் முற்றிலும் புதிய மாடலாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இரட்டை வண்ண இன்டீரியர் தீம், பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட பல நவீன கால அம்சங்கள் விஷயங்கள் உள்ளன.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

புதிய க்ரெட்டா எஸ்யூவியில் பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் வசதியுடன் முன் இருக்கைகள், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை, ஹூண்டாய் புளூலிங்க் கனெக்ட்விட்டி செயலி, டயர் பிரஷர் மானிட்டர் உள்ளிட்ட வசதிகள் கூடுதலாக இருக்கும்.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

கியா செல்டோஸ் காரில் இடம்பெற்றிருக்கும் அதே பிஎஸ்-6 எஞ்சின் தேர்வுகள் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியிலும் இடம்பெறும். புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் 115 பிஎச்பி பவரை அளிக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 115 பிஎச்பி பவரை வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 138 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

இந்த காரில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் வர இருக்கிறது. கியா செல்டோஸ் காரின் இந்த எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அதே வழியில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியையும் சிறந்த தேர்வாக மாற்றும்.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ரூ.11 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. தனது பங்காளியான கியா செல்டோஸ், எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் ஆகிய மாடல்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 12, 2020, 12:59 [IST]
English summary
Hyundai Motors is all set to launch the New Gen Creta SUV in India on March, 17.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+