புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!
வாடிக்கையாளர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி உள்ள புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி வரும் 17ந் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காருக்கு முன்பதிவும் அமோகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த காரின் வேரியண்ட்டுகள் வாரியாக இடம்பெற்றிருக்கும் வசதிகள் விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியானது E, EX, S, SX, SX(O) ஆகிய வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது. இந்த எஸ்யூவியில் மூன்று எஞ்சின் தேர்வுகள் மற்றும் நான்கு கியர்பாக்ஸ் தேர்வுகளை பொறுத்து 14 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இந்த எஸ்யூவியின் வேரியண்ட்டுகளில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

க்ரெட்டா இ வேரியண்ட்
இதுதான் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் விலை குறைவான வேரியண்ட்டாக விற்பனை செய்யப்படும். இந்த வேரியண்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், 3.5 அங்குல மோனோக்ரோம் டிஎஃப்டி திரையுடன் பொழுதுபோக்கு சாதனம், டே-நைட் உட்புற ரியர் வியூ மிரர், டில்ட் ஸ்டீயரிங் வீல், கூல்டு க்ளவ் பாக்ஸ், ரியர் ஏசி வென்ட்டுகள் இடம்பெற்றிருக்கும்.

க்ரெட்டா இஎக்ஸ் வேரியண்ட்
பேஸ் வேரியண்ட்டில் உள்ள வசதிகளுடன் சேர்த்து கூடுதலாக 8.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஐ-புளூ மொபைல் செயலி, அர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், புளூடூத் கன்ட்ரோல் வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

க்ரெட்டா எஸ் வேரியண்ட்
இந்த நடுத்தர வகை வேரியணஅட்டில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா, ரியர் வியூ மானிட்டர், க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்மார்ட் கீ, ரியர் வாஷ் மற்றும் வைப்பர், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், மேனுவல் சன் ஷேடு திரை ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

க்ரெட்டா எஸ்எக்ஸ் வேரியண்ட்
புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்எக்ஸ் என்ற விலை உயர்ந்த வேரியண்ட்டில் 17 அங்குல சில்வர் வண்ண அலாய் வீல்கள், திருடுபோவதை தவிர்ப்பதற்கான அலாரம், ரியர் டிஸ்க் பிரேக்குகள், 10.25 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பின் இருக்கைகளில் சாய்மான வசதி மற்றும் மடக்கும் வைக்கும் வசதிகள் உள்ளன.

க்ரெட்டா எஸ்எக்ஸ் ஆப்ஷனல் வேரியண்ட்
மிகவும் விலை உயர்ந்த இந்த வேரியண்ட்டில் 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், சைடு மற்றும் கர்டெயின் ஏர்பேக்குகள், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் 7.0 அங்குல கலர் டிஎஃப்டி திரை, போஸ் சவுண்ட் சிஸ்டம், ரிமோட் எஞ்சின் ஸ்டார்ட் வசதி, வென்டிலேட்டட் வசதியுடன் முன் இருக்கைகள் உள்ளன.

பொதுவான பாதுகாப்பு அம்சங்கள்
அனைத்து வேரியண்ட்டுகளிலும் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், கார் குறிப்பிட்ட வேகத்தை தாண்டும்போது தானாக மூடிக்கொள்ளும் கதவுகளுக்கான பூட்டு வசதிகள் உள்ளன.

எஞ்சின் தேர்வுகள்
புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் 115 எச்பி பவரை அளிக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 140 எச்பி பவரை வழங்கும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 115 எச்பி பவரை அளிக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்கும். இதன் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலானது 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டும் கிடைக்கும்.

எதிர்பார்க்கும் விலை
புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ரூ.11 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. கியா செல்டோஸ், எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் இந்த கார் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications