முற்றிலும் புதிய டிசைனில் புதிய தலைமுறை ஹூண்டாய் எலான்ட்ரா கார் வெளியீடு!

முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கும் ஹூண்டாய் எலான்ட்ரா கார் வெளியிடப்பட்டு இருக்கிறது. படங்கள், தகவல்களை விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

 வினோதமான டிசைனில் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் வெளியீடு!

எக்ஸ்கியூட்டிவ் செடான் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் எலான்ட்ரா கார் உலகின் பல்வேறு நாடுகளிலும் முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து வடிவமைப்பிலும், வசதிகளிலும் முற்றிலும் வேறுபட்ட ஹூண்டாய் எலான்ட்ரா கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

 வினோதமான டிசைனில் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் வெளியீடு!

ஏழாம் தலைமுறை மாடலாக வர இருக்கும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் அமெரிக்காவில் வைத்து வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த காரின் டிசைன் புதுமையாகவும், வினோதமாகவும் இருக்கிறது. ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் K3 என்ற புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பழைய மாடலைவிட 56 மிமீ கூடுதல் நீளமும், 26 மிமீ கூடுதல் அகலமும் கொண்டுள்ளது. உயரம் 51 மிமீ குறைந்துள்ளது. இலகு பாகங்கள் மூலமாக எடை குறைப்பும் சாத்தியமாகி இருக்கிறது.

 வினோதமான டிசைனில் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் வெளியீடு!

இந்த காரின் பானட், க்ரில் அமைப்பு, மிரட்டும் பம்பர் அமைப்பு, புதுமையான பின்புற டிசைன் ஆகியவை பழைய காரிலிருந்து முற்றிலும் புதிய மாடலாக உருவாகி இருப்பதை காட்டுகிறது. இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு, 17 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள், எல்இடி லைட் பார் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.

 வினோதமான டிசைனில் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் வெளியீடு!

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காரின் பரிமாணம் அதிகரித்துள்ளதால், உட்புறத்தில் இடவசதி வெகுவாக மேம்பட்டு இருக்கிறது. இந்த காரில் இரண்டு 10.25 அங்குல திரைகள் டேஷ்போர்டில் உள்ளன. ஒன்று தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனமாகவும் மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டராகவும் இருக்கும்.

 வினோதமான டிசைனில் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் வெளியீடு!

இந்த காரில் 4 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், நான்கு ஏசி வென்ட்டுகள், ஓட்டுனர் இருக்கைக்கும், முன் இருக்கை பயணிக்கும் இடையிலான தடுப்பு அமைப்பு ஆகியவை முக்கிய விஷயங்களாக இருக்கின்றன. இதன் உதிரிபாகங்கள் தரமும் மேம்பட்டு இருக்கும் என்று கருத முடியும்.

 வினோதமான டிசைனில் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் வெளியீடு!

புதிய ஹூண்டாய் கார்களில் வழங்கப்படும் புளூலிங்க் செயலியின் மூலமாக பல்வேறு வசதிகளை பெற முடியும். வாய்ஸ் கமாண்ட் வசதியுடன் இந்த சிஸ்டம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். வயர்லெஸ் போன் சார்ஜர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், டிஜிட்டல் கீ ஸ்மார்ட்போன் செயலி, 8 ஸ்பீக்கர்களுடன் போஸ் சவுண்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகியவையும் உள்ளன.

 வினோதமான டிசைனில் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் வெளியீடு!

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காரில் முதல்முறையாக ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் 1.6 லிட்டர் ஜிடிஐ பெட்ரோல் எஞ்சின் 32kW மின் மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மின் மோட்டார் 1.32kwh லித்தியம் அயான் பேட்டரி துணையில் இயங்கும்.

 வினோதமான டிசைனில் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் வெளியீடு!

இந்த ஹைப்ரிட் மாடலானது 139 எச்பி பவரையும், 264 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். மேலும், குறிப்பிட்ட தூரம் வரை மின் மோட்டாரில் மட்டுமே பயணிக்கும் வாய்ப்பையும் வழங்கும்.

 வினோதமான டிசைனில் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் வெளியீடு!

மேலும், தற்போதைய மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தக்க வைக்கப்பட்டு இருப்பதுடன், சிவிடி கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். இந்தியாவில் வரும்போது கியா செல்டோஸ், புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார்களில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்விலும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

 வினோதமான டிசைனில் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் வெளியீடு!

கடந்த ஆண்டுதான் இந்தியாவில் ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், இந்த புதிய தலைமுறை மாடல் அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ரூ.16 லட்சம் முதல் ரூ.23 லட்சம் விலையில் புதிய மாடலை எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
South Korean carmaker, Hyundai Motor has revealed the all-new, seventh-generation Elantra in the USA.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X