புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுகம் எப்போது? புதிய தகவல்கள்!

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்பது பற்றிய புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுகம் எப்போது? புதிய தகவல்கள்!

இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டின் சிறந்த தேர்வாக ஹூண்டாய் எலைட் ஐ20 கார் இருந்து வருகிறது. இதன் ரகத்தில் நம்பர்-1 ஆக இருக்கும் மாருதி பலேனோ காருக்கு சிறந்த மாற்றாகவும், விற்பனையில் இரண்டாவது இடத்தையும் தக்க வைத்து வருகிறது.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுகம் எப்போது? புதிய தகவல்கள்!

இந்த நிலையில், சந்தைப் போட்டியை எதிர்கொள்ளவும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் அதிக சிறப்பம்சங்களுடன் புதிய தலைமுறை மாடலாக ஹூண்டாய் எலைட் ஐ20 கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கடந்த சில மாதங்களாக இந்த புதிய தலைமுறை எலைட் ஐ20 கார் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுகம் எப்போது? புதிய தகவல்கள்!

ஹூண்டாய் எலைட் ஐ20 கார் வரும் பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை ஹூண்டாய் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த சூழலில், அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஓவர்ட்ரைவ் தளத்தின் செய்தி தெரிவிக்கிறது. கொரோனாவால் விற்பனையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருவதால், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் புதிய மாடல்களை களமிறக்கும் திட்டத்தில் உள்ளது ஹூண்டாய்.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுகம் எப்போது? புதிய தகவல்கள்!

அதன்படி, புதிய தலைமுறை மாடலாக வந்த க்ரெட்டா எஸ்யூவி சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும், புதிய வெர்னா வருகையும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்திற்கு கைகொடுக்கும் என தெரிகிறது. இந்த நிலையில், புதிய எலைட் ஐ20 காரையும் அறிமுகப்படுத்துவது அவசியம் என்று ஹூண்டாய் கருதுகிறது.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுகம் எப்போது? புதிய தகவல்கள்!

வரும் செப்டம்பர் மாதத்தில் புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா பிரச்னை, ஊரடங்கு உள்ளிட்டவற்றால் தற்போது சற்றே தாமதப்படுத்தி இந்த காரை களமிறக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுகம் எப்போது? புதிய தகவல்கள்!

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் வடிவமைப்பில் அதிக மாற்றங்களை சந்தித்துள்ளது. மேலும், இந்த காரில் புளூலிங்க் செயலி கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பத்துடன் 10.25 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 அங்குல திரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 8 ஸ்பீக்கர்களுடன் போஸ் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுகம் எப்போது? புதிய தகவல்கள்!

புதிய எலைட் ஐ20 காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுகம் எப்போது? புதிய தகவல்கள்!

ரூ.6 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். மாருதி பலேனோ, டாடா அல்ட்ராஸ், டொயோட்டா க்ளான்ஸா, ஹோண்டா ஜாஸ் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
According to reports, Hyundai is planning to launch new gen Elite i20 car in India by October this year.
Story first published: Friday, June 26, 2020, 16:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X