புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் விரைவில் அறிமுகம்... ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் வருகிறது?

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியை தொடர்ந்து புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 காரிலும் ஐஎம்டி வகை கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுக விபரம்

இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக ஹூண்டாய் எலைட் ஐ20 கார் இருந்து வருகிறது. டிசைன், வசதிகள், எஞ்சின், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை அளித்து வருகிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுக விபரம்

இந்த நிலையில், ஹூண்டாய் எலைட் ஐ20 கார் மூன்றாம் தலைமுறை மாடலாக வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு கொண்டு வரப்பட இருந்தது. ஆனால், கொரோனாவால் இந்த புதிய மாடலின் அறிமுகம் தள்ளிப் போய் வருகிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுக விபரம்

இந்த நிலையில், புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுக விபரம்

இந்த சூழலில், ஹூண்டாய் வெனியூ மற்றும் விரைவில் வரும் கியா சொனெட் கார்களில் வழங்கப்படும் iMT எனப்படும் புதிய வகை கியர்பாக்ஸ் தேர்வு, இந்த புதிய தலைமுறை எலைட் ஐ20 காரிலும் கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுக விபரம்

ஐஎம்டி கியர்பாக்ஸ் என்பது ஆட்டோடமேட்டிக் மற்றும் மேனுவல் கார் ஆகிய இரண்டு கார்களின் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விதத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஐஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் க்ளட்ச் பெடல் இருக்காது.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுக விபரம்

ஆனால், மேனுவல் கார்களை போன்றே, கியர் லிவர் மூலமாக கியர்களை மாற்றுவதற்கான வசதியை அளிக்கும். சிறிய கட்டுப்பாட்டு சாதனம் மூலமாக கியர்களுக்கு தக்கவாறு க்ளட்ச் இயக்கம் நடைபெறும். இதனால், மேனுவல் கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும்போது த்ரில் அனுபவத்தையும், க்ளட்ச் பெடலால் ஏற்படும் அசகவுரியங்களை தவிர்க்கவும் உதவும்.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுக விபரம்

ஹூண்டாய் வெனியூ காரில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின் தேர்வுகள்தான் புதிய தலைமுறை எலைட் ஐ20 காரிலும் வழங்கப்படும் என தெரிகிறது. அதாவது, 1. 2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் இந்த கார் வர இருக்கிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுக விபரம்

இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. டர்போ பெட்ரோல் மாடலில் 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வும் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
According to reports, Hyundai is planning to launch the new gen Elite i20 in India this festival season.
Story first published: Thursday, September 10, 2020, 10:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X