புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் எப்போது அறிமுகம்?

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் எப்போது அறிமுகம்?

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் எலைட் ஐ20 கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. டிசைன், எஞ்சின் தேர்வுகள், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இதனால், இந்த சந்தையில் மாருதி பலேனோ காருக்கு அடுத்து இரண்டாவது அதிகம் விற்பனையாகும் கார் மாடலாகவும் பெருமை பெற்றிருக்கிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் எப்போது அறிமுகம்?

இந்த நிலையில், வடிவமைப்பு, வசதிகளில் மாற்றங்களுடன் புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. வாடிக்கையாளர் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி உள்ள இந்த கார் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் எப்போது அறிமுகம்?

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் முகப்பு க்ரில் அமைப்பு, ஹெட்லைட், பம்பர் அமைப்பு ஆகியவை முற்றிலும் மாற்றம் கண்டுள்ளதுடன் மிரட்டலான தோரணையை பெற்றிருக்கும். எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், இரட்டை வண்ணக் கலவை தேர்வு ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் எப்போது அறிமுகம்?

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி வசதி, போஸ் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் எப்போது அறிமுகம்?

இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளி்ல் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்கம். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் எப்போது அறிமுகம்?

மேலும், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 82 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 99 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனுடன் அறிமுகம் செய்யப்படும். மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் எப்போது அறிமுகம்?

ஹூண்டாய் எலைட் ஐ20 கார் ரூ.5.60 லட்சம் முதல் ரூ.9.41 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. புதிய தலைமுறை மாடலானது ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கலாம்.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் எப்போது அறிமுகம்?

மாருதி பலேனோ, டாடா அல்ட்ராஸ், டொயோட்டா க்ளான்ஸா, ஃபோக்ஸ்வேகன் போலோ ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும். பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் நிச்சயம் மிகச் சிறந்த தேர்வாக தொடர்ந்து தக்க வைக்கும்.

Via- AutoX

Most Read Articles
English summary
Hyundai has revealed that the new generation i20 will be launched in India by September, 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X