முற்றிலும் வேறுபட்ட டிசைனில் புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி வெளியீடு!

முற்றிலும் வேறுபட்ட டிசைன் அம்சங்களுடன் புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய தலைமுறை டூஸான் எஸ்யூவியின் படங்கள், தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

முற்றிலும் வேறுபட்ட டிசைனில் புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி வெளியீடு!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் பிரிமீயம் வகை மாடலாக ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. போட்டி அதிகம் இல்லாமல் இருந்த இந்த ரகத்தில் தற்போது பல புதிய மாடல்களின் வரவால் கடும் சந்தைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், டூஸான் எஸ்யூவியை புதிய தலைமுறை மாடலாக உருவாக்கி இருக்கிறது ஹூண்டாய்.

முற்றிலும் வேறுபட்ட டிசைனில் புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி வெளியீடு!

நான்காம் தலைமுறை மாடலாக வர இருக்கும் புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் டிசைன் முற்றிலும் மாறி இருக்கிறது. ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தனது தாயகமான தென்கொரியாவில் இரண்டு வீல் பேஸ் கொண்ட மாடல்களில் புதிய டூஸான் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

முற்றிலும் வேறுபட்ட டிசைனில் புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி வெளியீடு!

பழைய மாடல்களை ஒப்பிடும்போது டிசைன் முற்றிலும் வேறுபட்ட தளத்திற்கு மாறி இருக்கிறது. குறிப்பாக, க்ரில் அமைப்பு வித்தியாசமாகவும், பக்கவாட்டில் ஒளிரும் அமைப்புடன் வர இருக்கிறது. வலிமையான பம்பர் அமைப்பு, கூர்மையான தோற்றத்தில் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், அதற்கு ஈடாக பாடி லைன் மற்றும் வீல் ஆர்ச்சுகள், டெயில் லைட்டுகள் என டிசைன் வெகுவாக கவரும் வகையிலும், புதுமையாகவும் இருக்கிறது.

முற்றிலும் வேறுபட்ட டிசைனில் புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி வெளியீடு!

புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியில் இன்டீரியர் அமைப்பும் முற்றிலும் புதிதாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. நேர்த்தியான டேஷ்போர்டு, சென்ட்ரல் கன்சோல் அமைப்பு வெகு அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது.

முற்றிலும் வேறுபட்ட டிசைனில் புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி வெளியீடு!

இந்த புதிய எஸ்யூவியில் 2.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டர்போ ஹைப்ரிட் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

முற்றிலும் வேறுபட்ட டிசைனில் புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி வெளியீடு!

இதன் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 246 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஹைப்ரிட் எஞ்சின் 226 பிஎச்பி பவரையும், 264 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆல் வீல் டிரைவ் சிஸ்டம், ஈக்கோ, கம்ஃபோர்ட், ஸ்மார்ட் மற்றும் ஸ்போர்ட் என நான்கு விதமான டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

முற்றிலும் வேறுபட்ட டிசைனில் புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி வெளியீடு!

கூடுதலாக சேறு, சகதியான நிலப்பரப்புகளில் செல்வதற்கான மட் மோடு, மணற்பாங்கான சாலைகள் மற்றும் பனித்தரைகளில் செல்வதற்கான டிரைவிங் மோடுகளும் உள்ளன. ஆனால், குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே இந்த டிரைவிங் மோடு வசதி வழங்கப்படும். அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவிலும் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Hyundai has revealed new generation Tucson SUV with significant changes to the exterior and interior design language.
Story first published: Tuesday, September 15, 2020, 10:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X