அடுத்த லெவல் டிசைனுக்கு மாறிய புதிய தலைமுறை ஹூண்டாய் டூஸான்!

புதிய தலைமுறை ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் டீசர் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், இந்த புதிய தலைமுறை மாடலின் டிசைன் முற்றிலும் வேறுபட்ட நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது.

அடுத்த லெவல் டிசைனுக்கு மாறிய புதிய தலைமுறை ஹூண்டாய் டூஸான்!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி பிரிமீயம் தேர்வாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவிக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் நான்காம் தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்த லெவல் டிசைனுக்கு மாறிய புதிய தலைமுறை ஹூண்டாய் டூஸான்!

வரும் 15ந் தேதி உலக அளவில் வெளியிடப்பட உள்ள இந்த புதிய தலைமுறை ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக கவரும் டிசைன் அம்சங்களுடன் வர இருக்கிறது.

அடுத்த லெவல் டிசைனுக்கு மாறிய புதிய தலைமுறை ஹூண்டாய் டூஸான்!

ஆம். ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் டீசர் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த படங்கள் ஹூண்டாய் பிரியர்களின் ஆவலைத் தூண்டும் அத்துனை அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

அடுத்த லெவல் டிசைனுக்கு மாறிய புதிய தலைமுறை ஹூண்டாய் டூஸான்!

முன்புறத்தில் க்ரில் அமைப்பு விளக்குகள் பின்னணியுடன் அழகாக காட்சித் தருகிறது. கார் வடிவமைப்புக் கலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் உள்ளது.

அடுத்த லெவல் டிசைனுக்கு மாறிய புதிய தலைமுறை ஹூண்டாய் டூஸான்!

அதேபோன்று, பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் எல்இடி லைட் பார் அமைப்பும் அட்டகாசமாக உள்ளது.

அடுத்த லெவல் டிசைனுக்கு மாறிய புதிய தலைமுறை ஹூண்டாய் டூஸான்!

அதேபோன்று, இன்டீரியர் அமைப்பும் முற்றிலும் புதிதாக வர இருக்கிறது. இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்டீயரிங் வீல் மற்றும் டேஷ்போர்டு ஆகியவற்றின் வடிவமைப்பு மிக மிக நவீனமாகவும், பிரிமீயமாகவும் இருக்கிறது.

அடுத்த லெவல் டிசைனுக்கு மாறிய புதிய தலைமுறை ஹூண்டாய் டூஸான்!

புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியில் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் எஞ்சின் அதிகபட்சமாக 153 பிஎச்பி பவரையும், 192 என்எம் டார்க் திறனையும் வழங்குகும்.

அடுத்த லெவல் டிசைனுக்கு மாறிய புதிய தலைமுறை ஹூண்டாய் டூஸான்!

அதேபோன்று, இதன் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 182 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. புதிய மாடலில் இதே எஞ்சின் தேர்வுகள் தக்கவைக்கப்படுமா என்பது குறித்த தகவல் இதுவரை இல்லை.

அடுத்த லெவல் டிசைனுக்கு மாறிய புதிய தலைமுறை ஹூண்டாய் டூஸான்!

புதிய தலைமுறை ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியானது 5 சீட்டர் மாடல் மட்டுமின்றி, 7 சீட்டர் தேர்விலும் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது நிச்சயம் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் மாடலாக இருக்கும்.

Most Read Articles

English summary
Hyundai has released the first set of teaser images of the new generation Tucson SUV and it is scheduled to be unveiled on September 15, 2020.
Story first published: Friday, September 4, 2020, 11:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X