புதிய தலைமுறை மஹிந்திரா தார் ஆஃப்ரோடு எஸ்யூவி அறிமுக விபரம்!

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் ஆஃப்ரோடு எஸ்யூவி அறிமுக விபரம்!

இந்தியாவின் ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் முதன்மையான தேர்வாக மஹிந்திரா தார் எஸ்யூவி உள்ளது. இந்தநிலையில், சிறந்த ஆஃப்ரோடு எஸ்யூவி கார்களுக்கு அதிகரித்து வரும் வரவேற்பு மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், தார் எஸ்யூவி புதிய தலைமுறை அம்சங்களுடன் முற்றிலும் புதிய மாடலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் ஆஃப்ரோடு எஸ்யூவி அறிமுக விபரம்!

தற்போது புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த எஸ்யூவி ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது இந்த எஸ்யூவி எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் ஆஃப்ரோடு எஸ்யூவி அறிமுக விபரம்!

இதன்படி, வரும் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதத்தில் புதிய தலைமுறை தார் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் ஆஃப்ரோடு எஸ்யூவி அறிமுக விபரம்!

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி தற்போதைய மாடலைவிட பரிமாணத்தில் பெரிய மாடலாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. பாரம்பரிய டிசைன் அம்சங்கள் தக்க வைக்கப்பட்டு இருந்தாலும், பல்வேறு நவீன டிசைன் அம்சங்கள் மற்றும் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் ஆஃப்ரோடு எஸ்யூவி அறிமுக விபரம்!

மஹிந்திரா பாரம்பரியத்தை பரைசாற்றும் டிசைனில் பெரிய அளவிலான முகப்பு க்ரில் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள், வலிமையான பம்பர் அமைப்புடன் வர இருக்கிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் ஆஃப்ரோடு எஸ்யூவி அறிமுக விபரம்!

இந்த எஸ்யூவியில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். மல்டி இன்ஃபர்மேஷன் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்ட்டர், மேனுவல் ஏசி சிஸ்டம், யுஎஸ்பி போர்ட்டுகள் என நவீன யுக கார் மாடலுக்குரிய அம்சங்களை இந்த ஆஃப்ரோடு எஸ்யூவி பெற்றிருக்கும்.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் ஆஃப்ரோடு எஸ்யூவி அறிமுக விபரம்!

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், முன்னோக்கிய இரண்டாவது வரிசை இருக்கைகள், ரியர் பார்க்கிங் கேமரா போன்ற பல அம்சங்களுடன் வருகிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் ஆஃப்ரோடு எஸ்யூவி அறிமுக விபரம்!

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் முக்கிய மாற்றமாக 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரம் கொண்ட எஞ்சின் அதிகபட்சமாக 140 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இறுக்கும்.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் ஆஃப்ரோடு எஸ்யூவி அறிமுக விபரம்!

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் ஆஃப்ரோடு எஸ்யூவி அறிமுக விபரம்!

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி இந்தியாவில் ஃபோர்ஸ் குர்கா மற்றும் விரைவில் வர இருக்கும் மாருதி சுஸுகி ஜிம்னி எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். தற்போதைய மாடலைவிட அதிக சிறப்பம்சங்களுடன் வாடிக்கையாளர்களை வசீகரிக்க தயாராகி வருகிறது புதிய மஹிந்திரா கார் எஸ்யூவி. இதற்கு தக்கவாறு விலையும் கணிசமாக உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Source: Autocarindia

More from DriveSpark

Article Published On: Saturday, March 7, 2020, 10:47 [IST]
English summary
According to report, Mahindra is planning to launch all new Thar SUV in India by first quarter of the next financial year (mid-2020).
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+