பண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் இடம்பெற முண்டியடிக்கும் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி!

ஆஃப்ரோடு பிரியர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி உள்ள புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி, இந்த ஆண்டு பண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் இடம்பெறுவதற்குமுண்டியடித்து வருகிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

பண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி!

ஆஃப்ரோடு பயன்பாட்டு எஸ்யூவி வாகனங்களில் மஹிந்திரா தார் எஸ்யூவி முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் எல்லா தரப்பு ஆஃப்ரோடு பிரியர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாகவும், சரியான பட்ஜெட்டிலும் மஹிந்திரா தார் எஸ்யூவி பூர்த்தி செய்து வருகிறது.

பண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி!

இந்த நிலையில், நவீன காலக்கட்டத்திற்கு ஏற்ப அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களின் கவரும் வகையில், தொழில்நுட்பம், கட்டமைப்பு, வடிவமைப்பு என அனைத்திலும் சிறந்த தார் எஸ்யூவியானது உருவாக்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய தார் எஸ்யூவி இந்த ஆண்டு மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது.

பண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி!

ஆனால், கொரோனா பிரச்னை காரணமாக, புதிய தலைமுறை தார் எஸ்யூவியின் அறிமுகம் தொடர்ந்து தள்ளிப் போய் வருகிறது. ஜூலையில் எதிர்பார்க்கப்பட்ட இந்த எஸ்யூவி, அக்டோபரில் வரும் என அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்திருந்தார். தற்போது அதிலும் மாற்றமாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

பண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி!

அதாவது, அக்டோபருக்கு பின்னர் புதிய தார் எஸ்யூவியை கொண்டு வர இருப்பதாக மஹிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரி கார் அண்ட் பைக் தளத்திடம் உறுதிப்படுத்தி இருக்கிறார். எனினும், பண்டிகை காலத்தில் இந்த புதிய மாடலை கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் மஹிந்திரா உறுதியாக இருக்கிறது. எனவே, பண்டிகை காலம் முடிவடையும் நவம்பர் மாதத்தில் புதிய தார் எஸ்யூவி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி!

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி இந்த அளவுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதற்கு பல காரணங்கள் உள்ளன. தோற்றத்தில் பழைய சாயல்கள் இருந்தாலும், உருவத்தில் பெரிய மாடலாக மாற்றப்பட்டுள்ளது. அத்துடன், எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், அலாய் வீல்களுடன் வாடிக்கையாளர்களை உடனே ஈர்க்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

பண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி!

உட்புறத்திலும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் மிகவும் தரமான பாகங்களுடன் மாற்றப்பட்டு இருக்கும். தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் இருக்கும். ஆட்டோமேட்டிக் கன்ட்ரோல் ஏசி முக்கிய அம்சமாக இருக்கும்.

பண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி!

இந்த புதிய மாடலில் பின் இருக்கைகள் முன்னோக்கியதாக அமைக்கப்பட்டு இருப்பது முக்கிய மாற்றமாக இருக்கும். புதிய ஸ்டீயரிங் வீல் சிஸ்டமும் இதன் ஓட்டுதல் அனுபவத்தை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும்.

பண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி!

ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்பீடு அலர்ட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் புதிய தலைமுறை தார் எஸ்யூவி மேம்படுத்தப்பட்டு வருகிறது. இது நிச்சயம் நவீன யுக காலத்திற்கு ஏற்ப வாடிக்கையாளர்களை கவரும்.

பண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி!

புதிய தார் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பெட்ரோல் எஞ்சின் 180 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
According to a recent report by CarandBike, the company has confirmed that it will be launching the new-gen BS6-compliant post October. Rajesh Jejurikar, Executive Director, Automotive & Farm Division- Mahindra & Mahindra also mentioned that the delay happened because of the six to eight weeks of lockdown in April and most parts of May, which delayed the last steps of the production-ready version.
Story first published: Saturday, July 18, 2020, 14:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X