புதிய மஹிந்திரா தாருக்குள் இத்தனை திறமைகளா? வீடியோவ பாத்தீங்கனா மெர்சலாயிடுவீங்க!!

புதிய மஹிந்திரா தாருக்குள் இருக்கும் திறனை வெளிப்படுத்துகின்ற வகையிலான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய மஹிந்திரா தாருக்குள் இத்தனை திறமைகளா? வீடியோவ பாத்தீங்கனா மெர்சலாயிடுவீங்க!!

மஹிந்திரா நிறுவனத்தின் புதுமுக கார்களில் ஒன்றாக தார் எஸ்யூவி இருக்கின்றது. இந்த புதிய தலைமுறை எஸ்யூவி யாரும் எதிர்பார்த்திராத ஓர் ஸ்டைலிலும், விலையிலும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. குறிப்பாக, முன்னதாக ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மட்டுமே பயன்படும் வகையில் காணப்பட்ட தார் இம்முறை தினசரி பயணங்களுக்கும் ஏற்ற திறனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய மஹிந்திரா தாருக்குள் இத்தனை திறமைகளா? வீடியோவ பாத்தீங்கனா மெர்சலாயிடுவீங்க!!

இதுபோன்ற எக்கசக்க காரணங்களால் தார் காருக்கான புக்கிங் தடாளடியாக உயர்ந்து வருகின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் காரைப் புக் செய்தவர்கள் டெலிவரியைப் பெற சுமார் 9 முதல் 10 மாதங்கள் வரை காத்திருக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்தளவிற்கு தார் காருக்கு அமோக வரவேற்பு இந்தியாவில் கிடைத்து வருகின்றது.

புதிய மஹிந்திரா தாருக்குள் இத்தனை திறமைகளா? வீடியோவ பாத்தீங்கனா மெர்சலாயிடுவீங்க!!

இந்த நிலையில், புதிய தலைமுறை மஹிந்திரா தார் காரின் திறனை வெளிப்படுத்துகின்ற வகையில் ஓர் சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த கார் தன்னை விட திறனிலும், உருவத்திலும் பன்முடங்கு உயர்ந்த கார் ஒன்றை சகதியில் இருந்து மீட்பதைப் போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

புதிய மஹிந்திரா தாருக்குள் இத்தனை திறமைகளா? வீடியோவ பாத்தீங்கனா மெர்சலாயிடுவீங்க!!

மஹிந்திரா தார் மீட்டது அதன் சகோதர மாடலான மஹிந்திரா எக்ஸ்யூவி காரைதான். இக்காரும் சற்று கூடுதல் திறன் கொண்ட வாகனமாகவே இருக்கின்றது. ஆனால், இக்காரில் ஆஃப்-ரோடுகளைச் சமாளிக்கக்கூடிய திறன் அதிகளவில் இல்லை. அதேசமயம், கைதேர்ந்த ஓட்டுநர்கள் இக்காரை இயக்கியிருந்தால் எம்மாதிரியான சாலையாக இருந்தாலும் இது அசால்டாக கடந்திருக்கும்.

புதிய மஹிந்திரா தாருக்குள் இத்தனை திறமைகளா? வீடியோவ பாத்தீங்கனா மெர்சலாயிடுவீங்க!!

ஏனெனில் பள்ளத்தில் சிக்கியிருப்பது அனைத்து வீல்களும் இயங்கும் திறன் கொண்ட எக்ஸ்யூவி500 மாடல் காராகும். இந்த பதிப்பின் விற்பனையை மஹிந்திரா கடந்த சில மாதங்களுக்கு முன்பே நிறுத்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரையே புதிய தலைமுறை தார் மீட்டெடுத்திருக்கின்றது. புதிய தலைமுறை தார் இதுபோன்று மீட்பு சம்பவத்தில் இதுவே முதல் முறை என யூகிக்கப்பட்டுள்ளது.

புதிய மஹிந்திரா தாருக்குள் இத்தனை திறமைகளா? வீடியோவ பாத்தீங்கனா மெர்சலாயிடுவீங்க!!

தார் காருக்கு முன்னதாக கிரேன் வாகனம் ஒன்று எக்ஸ்யூவி500 காரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதைத்தொடர்ந்தே தார், எக்ஸ்யூவி500-ஐ மீட்டது. இதுகுறித்து ஜெர்யீன்11 யுட்யூப் சேனல் வெளியிட்ட வீடியோவைக் கீழே காணலாம். வீடியோ, எக்ஸ்யூவி 500 கார் காலியான மைதானம் போன்ற இடத்தில் முன்னேற முடியாமல் சிக்கியிருப்பதைக் காட்டுகின்றது.

புதிய மஹிந்திரா தாருக்குள் இத்தனை திறமைகளா? வீடியோவ பாத்தீங்கனா மெர்சலாயிடுவீங்க!!

மழை அதிகம் பொழிந்த காரணத்தினால் மண் அதிக ஈரப்பதத்துடன் இருந்திருக்கின்றது. இதன் விளைவாக அனைத்து வீல்களும் இயங்க முடியாமல் சேற்றில் சிக்கின. இந்த நிலையிலேயே மஹிந்திரா தார் காரில் கயிறு கட்டி எக்ஸ்யூவி 500 கார் மீட்டெடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கயிறு சற்று மெல்லியதாக இருந்த காரணத்தால் அது விரைவில் இறந்துவிட்டது.

புதிய மஹிந்திரா தாருக்குள் இத்தனை திறமைகளா? வீடியோவ பாத்தீங்கனா மெர்சலாயிடுவீங்க!!

பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் வேறொரு தடினமான கயிறின் மூலம் முயற்சி செய்தபோது கார் சுலபமாக வெளியேறியது. இதுபோன்ற அபரீதமான திறன்களை தார் பெற்றிருக்கின்றன காரணத்தினாலயே அக்காருக்கு எக்கசக்கமான வரவேற்பு கிடைத்து வருகின்றது. மேலும், தற்போது அதிகரித்து வரும் காத்திருப்பு காலத்தைக் குறைக்கும் முயற்சியில் மஹிந்திரா தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது.

அந்தவகையில், 2021 ஜனவரி மாதத்தில் இருந்து மாதத்திற்கு 2000 யூனிட்களில் இருந்து 3,000 யூனிட்களாக உற்பத்தி எண்ணிக்கை அதிகரிப்பட இருக்கின்றது. புதிய தலைமுறை மஹிந்திரா தாரின் ஆரம்ப விலை அறிமுகத்தின்போது ரூ.9.8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் விரைவிலேயே தயாரிப்பு நிறுவனம் இதன் விலையை ரூ.40,000 அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
New Gen Mahindra Thar SUV Rescued XUV500 From Wet Mud. Read In Tamil.
Story first published: Friday, December 11, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X