வேற லெவல் தொழில்நுட்பங்களுடன் வருகிறது புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்களுடன் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. என்னென்ன தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற உள்ளன என்பதை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

வேற லெவல் தொழில்நுட்பங்களுடன் வருகிறது புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் அதிக மதிப்புவாய்ந்த தேர்வாக மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி இருந்து வருகிறது. டிசைன், தொழில்நுட்ப வசதிகள், விலை என அனைத்திலும் நிறைவை தருவதோடு, இதன் ரகத்தில் 7 சீட்டர் மாடலாக இருப்பதும் இதன் மிகப்பெரிய பலம்.

வேற லெவல் தொழில்நுட்பங்களுடன் வருகிறது புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500!

இந்த சூழலில், சந்தைப் போட்டி மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மனதில் வைத்து புதிய தலைமுறை அம்சங்களுடன் முற்றிலும் வேறுபட்ட மாடலாக மஹிந்திரா எக்ஸ்யூவி500 உருவாக்கப்பட்டுள்ளது.

வேற லெவல் தொழில்நுட்பங்களுடன் வருகிறது புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500!

கடந்த பல மாதங்களாக இறுதிக் கட்ட சாலை சோதனைகளுக்கு இந்த கார் உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில், புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் இதன் ரக கார்களில் இல்லாத பல நவீன தொழில்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

வேற லெவல் தொழில்நுட்பங்களுடன் வருகிறது புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் ரேடார் கருவி மூலமாக சாலையின் முன்னால் இருக்கும் பள்ளம், குண்டு குழியுமான இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் வசதி கொடுக்கப்பட்டு இருப்பதாக டீம் பிஎச்பி தள உறுப்பினர் மூலமாக தகவல்கள் கசிந்துள்ளன.

வேற லெவல் தொழில்நுட்பங்களுடன் வருகிறது புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500!

இதேபோன்று, பிற வாகனங்கள் அல்லது பாதசாரிகள் மீது மோதும் நிலை ஏற்பட்டால், தானியங்கி முறையில் பிரேக் பிடிக்கும் தொழில்நுட்பமும் இடம்பெற இருக்கிறது. இந்தியாவின் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் இந்த தொழில்நுட்பம் முதல்முறையாக இந்த காரில் இடம்பெற உள்ளது தெரிய வந்துள்ளது.

வேற லெவல் தொழில்நுட்பங்களுடன் வருகிறது புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500!

ஓட்டுனர் அயர்ந்து போவதை எச்சரிக்கும் வசதியும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் கொடுக்கப்பட உள்ளது. இதுதவிர்த்து, ரிவர்ஸ் எடுக்கும்போது பின்புறத்தை முப்பரிமாண முறையில் பார்ப்பதற்கு வகை செய்யும் திரையும் இந்த காரில் கொடுக்கப்பட உள்ளது.

வேற லெவல் தொழில்நுட்பங்களுடன் வருகிறது புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500!

அத்துடன், காரில் பயணிப்பவர்களுக்கு ஏதுவான குளிர்ச்சியை வழங்கும் விதத்தில் மாற்றியமைக்கும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்படும் என்று அந்த தகவல் தெரிவிக்கிறது.

வேற லெவல் தொழில்நுட்பங்களுடன் வருகிறது புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500!

புதிய மஹந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருக்கின்றது. மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
According to the report, New Gen Mahindra XUV500 will get some advanced electronic features.
Story first published: Saturday, December 12, 2020, 13:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X