போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வரும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500!

சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வுகள், போதும், போதும் என்ற அளவுக்கு தொழில்நுட்ப வசதிகளுடன் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வருகிறது புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி.

 போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வரும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 மிக மதிப்புவாய்ந்த தேர்வாக இருந்து வருகிறது. மிரட்டலான தோற்றம், அதிக தொழில்நுட்ப அம்சங்கள், நம்பகமான எஞ்சின் சரியான விலை என்பதுடன், இதன் ரகத்தில் கிடைக்கும் சிறந்த 7 சீட்டர் மாடல் என்பதும் இதன் மதிப்புக்கு மதிப்பு சேர்க்கிறது.

 போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வரும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500!

இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு கடும் சந்தைப் போட்டி உருவாகி வருகிறது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், டாடா க்ராவிட்டாஸ், ஜீப் காம்பஸ் 7 சீட்டர் என பல புதிய மாடல்கள் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு நேர் எதிராக விற்பனைக்கு வர இருக்கின்றன.

 போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வரும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500!

இதனால், எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் மதிப்பை வெகுவாக உயர்த்தும் வகையில் புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியானது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வரும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500!

இந்த நிலையில், இந்த எஸ்யூவியில் இடம்பெற முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் மிகவும் சக்திவாய்ந்த பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் இடம்பெற உள்ளன.

 போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வரும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500!

மஹிந்திரா நிறுவனத்தின் எம்-ஸ்டாலியன் என்ற புதிய பெட்ரோல் எஞ்சின் குடும்பத்தை சேர்ந்த 2.0 லிட்டர் பெட்ரோ்ல எஞ்சின் புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 எச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

 போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வரும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500!

அதேபோன்று, டீசல் மாடலில் இடம்பெறும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 180 எச்பி பவரை வெளிப்படுத்தும் விதத்தில் மேம்படுத்தப்படுகிறது. புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட உள்ளது.

 போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வரும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500!

எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய க்ரில் அமைப்பு, வலிமையான பானட் மற்றும் பெரிய பம்பர்களுடன் மாற்றங்கள் செய்யப்பட்டு வர இருக்கிறது. மேலும், டிசைனிலும் முற்றிலும் புதிய மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வரும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500!

புதிய மாடலில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

 போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வரும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500!

இரண்டாம் தலைமுறை மாடலாக வர இருக்கும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியானது அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம்போல் போட்டியாளர்களைவிட மதிப்புவாய்ந்த தேர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 18, 2020, 6:30 [IST]
English summary
According to reports, New Gen Mahindra XUV500 to get connected car tech and more powerful engine options.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+