2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை

புதிய தலைமுறை மாருதி செலிரியோ காரின் வெளிப்புறம் எவ்வாறு இருக்கும் என்பது புதிய ஸ்பை படங்களின் மூலமாக நமக்கு தெரியவந்துள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி, செலிரியோ கார் மாடலை கடந்த 2014ல் முதன்முதலாக இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதன்பின் காரில் முக்கிய அப்கிரேட்கள் 2017ல் கொண்டுவரப்பட்டன.

2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை

அறிமுகம் செய்யப்பட்டு 6 வருடங்கள் ஆன நிலையில் அடுத்த வருடத்தில் செலிரியோவின் புதிய தலைமுறை காரை விற்பனைக்கு கொண்டுவர மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளிவரவில்லை.

2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை

தற்போது போல் கடந்த சில முறை நடத்தப்பட்ட சோதனை ஓட்டங்களை வைத்துதான் இதை நாங்கள் கூறுகின்றோம். புதிய தலைமுறை செலிரியோ கார் குறித்து வெளியாகிவரும் தகவல்களில் இந்த கார் ஒய்என்சி என்ற குறியீட்டு பெயருடனும் நிறுவனத்தின் எடைகுறைவான ஹெர்டெக் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை

தற்போது காடிவாடி செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள ஸ்பை படங்களில் புதிய தலைமுறை செலிரியோ தற்போதைய மாடலை காட்டிலும் அளவில் பெரியதாகவும், நீண்ட வீல்பேஸ் மற்றும் அதிக க்ரவுண்ட் க்ளியரென்ஸை கொண்டதாகவும் காட்சியளிக்கிறது.

2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை

இந்த ஸ்பை படங்களில் காரின் முன்புறம் நேர்த்தியான வடிவத்தில் ரேடியேட்டர் க்ரில், நம்பர் ப்ளேட்டிற்கு அடியில் ஏர் டேம், ஸ்போர்டியான ஹலோஜன் ஹெட்லேம்ப் மற்றும் ஃபெண்டர்களில் முன்பக்க டர்ன் இண்டிகேட்டர்கள் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை

இந்த சோதனை செலிரியோ காரில் மூடிகள் இல்லாத இரும்பு சக்கரங்களை பார்க்க முடிகிறது. இதனால் இது 2021 செலிரியோவின் ஆரம்ப நிலை, விலை குறைவான வேரியண்ட்டாக இருக்கலாம். புதிய தலைமுறை செலிரியோவில் 1.0 லிட்டர் கே10பி 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை

இந்த பெட்ரோல் என்ஜினின் மூலம் அதிகப்பட்சமாக 67 பிஎஸ் மற்றும் 90 என்எம் டார்க் திறனை பெற முடியும். இந்த 2021 ஹேட்ச்பேக் காரில் பெட்ரோல்-சிஎன்ஜி என்ஜின் தேர்வும் எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

Most Read Articles
English summary
New-Gen (2021) Maruti Celerio Exteriors Revealed Completely In New Spy Pics
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X