அடுத்த புதிய சொகுசு எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த நாள் குறித்தது மெர்சிடிஸ் பென்ஸ்!

கொரோனா பிரச்னை ஒரு பக்கம் இருந்தாலும், சந்தைப்போட்டியை மனதில் வைத்து தொடர்ந்து புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் குறியாக செயல்பட்டு வருகிறது மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம். அண்மையில் ஏஎம்ஜி பிராண்டில் இரண்டு சூப்பர் மாடல்களை கொண்டு வந்த அந்நிறுவனம், தொடர்ந்து அடுத்து ஒரு புதிய சொகுசு எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு நாள் குறித்துவிட்டது.

அடுத்த புதிய சொகுசு எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த நாள் குறித்தது மெர்சிடிஸ் பென்ஸ்!

கொரோனா பாதிப்பால் கார் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அளவிலான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பல நிறுவனங்கள் புதிய கார் அறிமுகங்களை ஒத்திப் போட்டு வருகின்றன. ஆனால், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வைத்த அடியிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

அடுத்த புதிய சொகுசு எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த நாள் குறித்தது மெர்சிடிஸ் பென்ஸ்!

திட்டமிட்டபடி இந்தியாவில் புதிய கார்களை தொடர்ந்து அறிமுகம் செய்ய இருப்பதாக அண்மையில் தெரிவித்தது. அதன்படி, அடுத்த புதிய காருக்கான தேதியையும் குறித்துவிட்டது.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

அடுத்த புதிய சொகுசு எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த நாள் குறித்தது மெர்சிடிஸ் பென்ஸ்!

ஆம், அடுத்த புதிய மாடலாக இந்தியாவில் ஜிஎல்எஸ் சொகுசு எஸ்யூவி காரை வரும் ஜூன் 17ந் தேதி விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது. சொகுசு கார் மார்க்கெட்டில் விலை உயர்ந்த எஸ்யூவி மாடல்களில் ஒன்றாக வர இருக்கிறது.

அடுத்த புதிய சொகுசு எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த நாள் குறித்தது மெர்சிடிஸ் பென்ஸ்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி கார் இதுவரை இருந்த மாடலைவிட அதிக இடவசதியுடன் வர இருக்கிறது. புதிய மாடலானது நீளத்தில் 77 மிமீ வரையிலும், அகலத்தில் 22 மிமீ வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆக்சில்களுக்கு இடையிலான வீல்பேஸ் நீளமும் 60 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த புதிய சொகுசு எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த நாள் குறித்தது மெர்சிடிஸ் பென்ஸ்!

இதனால், இரண்டாவது வரிசை மற்றும் மூன்றாவது வரிசை இருக்கை பயணிகளுக்கு சிறப்பான லெக்ரூம் வசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உட்புறமும் அதிக விசாலமான உணர்வை தரும் வாய்ப்புள்ளது.

அடுத்த புதிய சொகுசு எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த நாள் குறித்தது மெர்சிடிஸ் பென்ஸ்!

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய மாடலானது ஓர் ஆண்டுக்கு பின்னர் இந்தியா வர இருப்பது உறுதியாகி இருக்கிறது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் சொகுசு எஸ்யூவியின் முகப்பு மாற்றங்களை சந்தித்துள்ளது.

அடுத்த புதிய சொகுசு எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த நாள் குறித்தது மெர்சிடிஸ் பென்ஸ்!

எலஇடி ஹெட்லைட்டுகள், புதிய க்ரில் அமைப்பு, புதிய பம்பர்கள், எல்இடி டெயில் லைட்டுகள், இரட்டை குழல் அமைப்புடைய புகைப்போக்கி குழல்கள் ஆகியவற்றுடன் மாற்றங்களை சந்தித்துள்ளது.

அடுத்த புதிய சொகுசு எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த நாள் குறித்தது மெர்சிடிஸ் பென்ஸ்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவியின் டேஷ்போர்டில் இரண்டு 12.3 அங்குல திரைகள் உள்ளன. ஒன்று தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பாகவும் இருக்கும் எம்பியூஎக்ஸ் செயலியுடன் கூடிய கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பத்தையும் இந்த கார் பெற்றிருக்கிறது.

அடுத்த புதிய சொகுசு எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த நாள் குறித்தது மெர்சிடிஸ் பென்ஸ்!

பின் இருக்கை பயணிகளுக்காக 11.6 அங்குல டிவி திரைகள் கொண்ட பொழுது போக்குவசதி இடம்பெற்றுள்ளது. 5 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், லம்பார் சப்போர்ட், இரண்டாவது வரிசையில் இருக்கைகளில் மஸாஜ் வசதி, பின்புற சென்ட்ரல் கன்சோல் அமைப்பில் கழற்றி எடுத்துச் செல்லும் வசதியுடன் 7 அங்குல டேப்லெட் கம்ப்யூட்டர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

அடுத்த புதிய சொகுசு எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த நாள் குறித்தது மெர்சிடிஸ் பென்ஸ்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவியில் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, ஏர்பேக்குகள், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்டு, ஹில் டிசென்ட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமில்லை.

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவியில் 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 366 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 285 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 30, 2020, 11:22 [IST]
English summary
Mercedes-Benz is all set to launch their updated flagship SUV, the 2020 GLS in the Indian market. Martin Schwenk, CEO and MD of Mercedes-Benz India, has confirmed the launch of new GLS on his social media channel.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+