புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

கடந்த ஆண்டு நடந்த நியூயார்க் ஆட்டோ ஷோவில், மூன்றாம் தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்யூவி பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் இருந்து பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

இந்த நிலையில், இந்த புதிய மாடலானது மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா இணையதளத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதனால், ஓரிரு மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வருவது உறுதியாகி இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்யூவி 5,207 மிமீ நீளமும், 1,956 மிமீ அகலமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. முந்தைய மாடலைவிட 77 மிமீ கூடுதல் நீளமும், 22 மிமீ கூடுதல் அகலமும் கொண்டதாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் வீல் பேஸ் 60 மிமீ ஆக அதிகரிக்கப்பட்டு 3,135 மிமீ என்ற அளவுக்கு மாறி இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவியின் டிசைன் அம்சங்கள் இந்த எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அட்டைப் பெட்டி போன்ற முந்தைய மாடலில் இருந்து சற்றே உரு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், பெரிய ஏர் டேம் அமைப்பு ஆகியவை முகப்புக்கு கம்பீரம் வழங்குகிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

பக்கவாட்டில் பெரிய வீல் ஆர்ச்சுகள், 19 மற்றும் 21 அங்குல அலாய் வீல் தேர்வுகள், எல்இடி டெயில் லைட்டுகள், பிரம்மாண்டமான தோற்றத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பம்பர் அமைப்பு ஆகியவை சிறப்பு சேர்க்கின்றன.

இந்த எஸ்யூவியில் 7 பேர் செல்வதற்கான மூன்று வரிசை இருக்கை அமைப்பு உள்ளது. இரண்டாவது வரிசையில் பென்ச் இருக்கை அமைப்பும், கடைசி வரிசையில் தனித்தனி இருக்கை அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

இந்த எஸ்யூவியில் 5 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் உள்ளது. இந்த எஸ்யூவியில் பனோரமிக் சன்ரூஃப், 11.6 அங்குல டிவி திரைகள், பர்ம்ஸ்டெர் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட்டிங் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

வெளிநாடுகளில் புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவியில் 3.0 லிட்டர் எஞ்சின் மற்றும் 4.0 லிட்டர் எஞ்சின் என இரண்டு பெட்ரோல் தேர்வுகளிலும், இதன் 2.9 டீசல் எஞ்சின் இரண்டு விதமான ட்யூனிங்கில் கிடைக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

பெட்ரோல் மாடலில் இருக்கும் 3.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 367 பிஎஸ் பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மற்றொரு 4.0 லிட்டர் வி8 எஞ்சின் அதிகபட்சமாக 489 பிஎஸ் பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும். இரண்டு பெட்ரோல் எஞ்சின்களிலுமே 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

டீசல் மாடல் 350டீ 4 மேட்டிக் மற்றும் 400 டீ 4மேட்டிக் என இரண்டு வேரியண்ட்டுகளில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 2.9 லிட்டர் டீசல் எஞ்சின் 286 பிஎஸ் பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 350 டீ என்ற வேரியண்ட்டிலும், 330 பிஎஸ் பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வழங்கும் மற்றொரு வேரியண்ட்டிலும் விற்பனை செய்யப்படுகிறது. 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

ஆனால், இந்தியாவில் இரண்டு வேரியண்ட்டுகளில் மட்டுமே விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.9 லிட்டர் டீசல் எஞ்சினின் 350 டீ 4 மேட்டிக் வேரியண்ட்டுகள் இந்தியர்களின் தேர்வுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவிக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
The new gen Mercedes-Benz GLS SUV has been listed on the Mercedes Benz India website and it is expected to launch very soon.
Story first published: Saturday, April 4, 2020, 17:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X