புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் இந்திய வருகை விபரம்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் வெளியானதை தொடர்ந்து எஸ்-க்ளாஸ் செடான் மாடலின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

முன்னதாக மெர்சிடிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்டு இருந்த இந்த செடான் காரின்
அதிகாரப்பூர்வ படங்களுடன் இந்த கார் ஏற்கனவே திட்டமிடப்பட்டப்படி இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் தான் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் இந்த செடான் கார் அறிமுகமாகவுள்ளது.

அதேபோல் அடுத்த வருடத்தின் இறுதியில் இந்திய சந்தைக்கு வரவுள்ளதாகவும் நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. டபிள்யூ223 என்ற குறியீட்டு பெயருடன் அழைக்கப்படுகின்ற இந்த கார் வழக்கமான வடிவத்தில் எல்இடி ஹெட்லைட்களுடன், மூன்று கிடைமட்ட ப்ளேட்களை கொண்ட பெரிய, க்ரோம்-ஹெவி க்ரில் அமைப்பை கொண்டுள்ளது.

மற்றப்படி இந்த காரை பற்றிய பெரிய அளவில் எந்த தகவலையும் மெர்சிடிஸ் நிறுவனம் தற்போதைக்கு வெளியிடவில்லை. ஆனால் செயற்கை நுண்ணறிவு மற்றும் தேவைகள் அடிப்படையிலான மின்மயமாக்கல் உள்ளிட்டவற்றில் புதிய நிலையை புதிய எஸ்-க்ளாஸ் மாடல் அடைந்திருக்கும் என்பது உறுதி.
MOST READ: மழைகாலங்களில் நீரினால் வாகனங்கள் பாதிப்படையாமல் தடுப்பது எப்படி..? எளிய முறைகள் இதோ...

இதற்கு முன்னர் வெளியாகி இருந்த இதன் ஸ்பை படங்களில் மெர்சிடிஸ் இ-க்ளாஸ் மாடலின் எதிரொலிப்பாக புதிய மடக்கு எல்இடி டெயில்-லைட்களை பெற்றிருப்பதை பார்க்க முடிந்தது. வெளிப்புறத்தில் கூர்மையான முனைகளுடன் நேர்த்தியான தோற்றத்தை பெற்றுள்ள இந்த செடான் காரின் உட்புற ஸ்பை படங்களும் அப்போது வெளியாகி இருந்தன.

இதன் மூலம் பார்க்கும் போது இதன் உட்புற கேபின் முழுவதும் தற்போதைய தலைமுறை காரில் இருந்து அப்படியே வழங்கப்பட்டிருப்பதை அறிய முடிந்தது. அகலமான திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் பெரிய, நீளமான இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் உட்புற டேஸ்போர்டு மிகவும் சிறியதாக வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு கீழே உள்ள மைய கன்சோல், மெர்சிடிஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் எம்பியுஎக்ஸ் சிஸ்டத்துடன் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பெட்ரோல், டீசல் மற்றும் மில்ட்-ஹைப்ரீட் மற்றும் ப்ளக்-இன் ஹைப்ரீட் என வெவ்வேறு விதமான என்ஜின் தேர்வுகளையும் மெர்சிடிஸ் நிறுவனம் இந்த செடான் காருக்கு வழங்கும் என கூறப்படுகிறது.

இந்த செடான் கார் ஜெர்மனி, சிண்டெல்ஃபிங்கன் நகரில் உள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலை 56-ல் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதே தொழிற்சாலையில் தான் எஸ்-க்ளாஸ் மாடலின் எலக்ட்ரிக் வெர்சனும் மெர்சிடிஸ் இக்யூஎஸ் என்ற பெயரில் அடுத்த ஆண்டில் இருந்து தயாரிக்கப்படவுள்ளதாக மெர்சிடிஸ் நிறுவனம் கூறியுள்ளது.

முன்னதாக இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் துணை இயக்குனர், புதிய எஸ்-க்ளாஸ் மாடல் கொரோனாவின் தாக்கத்தினால் அடுத்த ஆண்டில் வெளியாகவுள்ளதாக கூறியிருந்தார். ஆனால் இந்த கார் இந்த வருடத்திற்கு உள்ளாகவே சர்வதேச சந்தையில் அறிமுகமாகுவதற்கு வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








