விலை குறைவான புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு எஸ்யூவி அறிமுக விபரம்!

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

விலை குறைவான புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு எஸ்யூவி அறிமுக விபரம்!

சொகுசு எஸ்யூவி மார்க்கெட்டில் மிக குறைவான பட்ஜெட்டில் வாடிக்கையாளர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி உள்ளது. இந்த எஸ்யூவிக்கு இந்தியாவிலும் குறிப்பிடத்தக்க அளவு வரவேற்பு இருந்து வருகிறது.

விலை குறைவான புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு எஸ்யூவி அறிமுக விபரம்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்திலும், போட்டியாளர்களை சமாளிக்கவும் இரண்டாம் தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி கடந்த ஆண்டு இறுதியில் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, பிப்ரவரியில் நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவிலும் இந்த கார் இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.

விலை குறைவான புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு எஸ்யூவி அறிமுக விபரம்!

இந்த நிலையில், கொரோனா பிரச்னையால் பல கார்களின் அறிமுகம் தள்ளிப் போய் வரும் நிலையில், அண்மையில் இந்த கார் மெர்சிடிஸ் பென்ஸ் இந்திய இணையதளத்தில் சேர்க்கப்பட்டது.

விலை குறைவான புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு எஸ்யூவி அறிமுக விபரம்!

இதைத்தொடர்ந்து, தற்போது புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவியின் அறிமுக விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, வரும் அக்டோபரில் இந்த புதிய எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக டீம் பிஎச்பி தளத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது.

விலை குறைவான புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு எஸ்யூவி அறிமுக விபரம்!

வடிவமைப்பில் மாற்றங்களுடன் கூடிய புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ கார் நீளத்தில் 15 மிமீ குறைக்கப்பட்டுள்ளது. எனினும், உட்புறத்தில் இடவசதியில் எந்த சமரசமும் இல்லை என்றும், தற்போதைய மாடலைவிட கால்கள் வைப்பதற்கான இடவசதி சிறப்பாக இருக்கும் என்று மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவிக்கிறது.

விலை குறைவான புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு எஸ்யூவி அறிமுக விபரம்!

வைரக்கற்கள் பதிக்கப்பட்டது போன்ற அமைப்புடன், க்ரோம் பட்டைகளுடன் கூடிய புதிய க்ரில் முகப்பின் கம்பீரத்தை கூட்டி இருக்கிறது. இந்த காரில் சதுர வடிவிலான தோற்றத்தை கொண்ட வீல் ஆர்ச்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன. எல்இடி டெயில் லைட்டுகள், வலிமையான பம்பர் போன்றவையும் முக்கிய மாற்றங்களாக இருக்கின்றன.

விலை குறைவான புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு எஸ்யூவி அறிமுக விபரம்!

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ காரில் ரேடார்கள் மற்றும் சென்சார்களுடன் வழியில் குறுக்கே வரும் பாதசாரிகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் பாதுகாப்பு வசதி அளிக்கப்படுகிறது. வளைவுகளில் திரும்பும்போதும் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.

விலை குறைவான புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு எஸ்யூவி அறிமுக விபரம்!

இந்த காரில் முக்கிய அம்சமாக, புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் வழங்கப்படும் எம்பியூஎக்ஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதிகளையும், அதிக மதிப்பையும் வழங்கும். இந்த காரில் 64 வண்ணங்ளில் ஒளிரும் ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் உள்ளது.

விலை குறைவான புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு எஸ்யூவி அறிமுக விபரம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவியில் பிஎஸ்6 எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். இதன் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 190 எச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பெட்ரோல் மாடலில் இடம்பெறும் 1.3 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 163 எச்பி பவரை வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

விலை குறைவான புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு எஸ்யூவி அறிமுக விபரம்!

இந்த காரில் ஏஎம்ஜி வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. இந்த மாடலில் இடம்பெறும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 306 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

விலை குறைவான புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு எஸ்யூவி அறிமுக விபரம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி ரூ.43 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஆடி க்யூ3, வால்வோ எக்ஸ்சி40, பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஆகிய ஆரம்ப நிலை சொகுசு எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, May 18, 2020, 11:28 [IST]
English summary
According to report, new generation Mercedes-Benz GLA is likely to be launched in India by October this year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+