2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500-ன் டெயில்லேம்ப்களின் தோற்றம் வெளிவந்தது...

இரண்டாம் தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றின் மூலம் தெரியவந்துள்ள விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500-ன் டெயில்லேம்ப்களின் தோற்றம் வெளிவந்தது...

மஹிந்திரா நிறுவனம் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ துவங்குவதற்கு முன்பாக இருந்தே எக்ஸ்யூவி500 மாடலின் அடுத்த தலைமுறை காரின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. இதனால் இந்த புதிய தலைமுறை கார் பலமுறை சோதனை ஓட்டங்களின்போது அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது.

2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500-ன் டெயில்லேம்ப்களின் தோற்றம் வெளிவந்தது...

இந்த வகையில் தற்போது மீண்டும் கண்டறியப்பட்டுள்ள இதன் சோதனை ஓட்டத்தின் ஸ்பை படங்களை டீம்பிஎச்பி செய்திதளம் வெளியிட்டுள்ளது. இவற்றில் கார் முழுவதும் மறைப்பால் மறைக்கப்பட்டிருப்பினும் சில பாகங்கள் நமக்கு புலப்படுகின்றன.

2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500-ன் டெயில்லேம்ப்களின் தோற்றம் வெளிவந்தது...

இதில் முக்கியமானது பின்பக்க டெயில்லேம்ப். இதுவரை இதன் சோதனை ஓட்டங்களில் தற்காலிக டெயில்லேம்ப்களே பொருத்தப்பட்டு வந்தன. ஆனால் இதில் விற்பனை வரவுள்ள 2021 எக்ஸ்யூவி500-ல் வழங்கப்படும் டெயில்லேம்ப் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த சோதனை கார் கிட்டத்தட்ட தயாரிப்புகள் அனைத்தையும் நிறைவு செய்திருக்கலாம்.

2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500-ன் டெயில்லேம்ப்களின் தோற்றம் வெளிவந்தது...

இதுமட்டுமின்றி செங்குத்தான அல்லது L-வடிவில் டெயில்லேம்ப்பிற்கான க்ளஸ்ட்டர்கள் மற்றும் பின்பக்க பம்பரில் ஒளி பிரதிபலிப்பான் உள்ளிட்டவற்றையும் புதிய எக்ஸ்யூவி500 பெற்றுவரலாம் என இந்த ஸ்பை படங்கள் நமக்கு மறைமுகமாக தெரிவிக்கின்றன.

2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500-ன் டெயில்லேம்ப்களின் தோற்றம் வெளிவந்தது...

அடுத்த தலைமுறை எக்ஸ்யூவி500-ன் சிறப்பம்சங்களில் ஒன்று கதவு ஹேண்டிகள் ஆகும். ஏனெனில் இந்த 2021 எஸ்யூவி கார் இழுத்து கதவை திறக்கும் விதத்திலான கதவு ஹேண்டில்களை பெற்றுவரவுள்ளது. அவற்றை இந்த ஸ்பை படங்களில் சோதனை காரில் பார்க்கலாம்.

2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500-ன் டெயில்லேம்ப்களின் தோற்றம் வெளிவந்தது...

முன்னதாக கடந்த வாரத்திலும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500-ன் சோதனை ஸ்பை படங்கள் வெளியாகி இருந்தன. அவற்றின் மூலம் முன்பக்கத்தில் இந்த கார் பெற்றுவரவுள்ள க்ரில் அமைப்பை பார்த்திருந்தோம். தற்போது வெளிவந்துள்ள படங்களின் மூலம் டெயில்லேம்ப்களின் வடிவம் எப்படியிருக்கும் என்பது நமக்கு தெளிவானது.

தற்போதைய தலைமுறை எக்ஸ்யூவி500 கார் உடன் தான் இதன் 2021 வெர்சனும் விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 2021 எக்ஸ்யூவி500-ல் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டி-ஜிடிஐ டர்போசார்ஜ்டு, 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500-ன் டெயில்லேம்ப்களின் தோற்றம் வெளிவந்தது...

அதிகப்பட்சமாக 5000 ஆர்பிஎம்-ல் 187 பிஎச்பி மற்றும் 1,750 - 4,000 ஆர்பிஎம்-ல் 380 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 2.0 லிட்டர் டீசல் என்ஜினும் இந்த காருக்கு கூடுதல் தேர்வாக கொடுக்கப்படலாம். இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படவுள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 6, 2020, 8:30 [IST]
English summary
Scoop! Mahindra XUV500 with production-spec tail lamps spied
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+