முன்பதிவில் புதிய மைல்கல்லை தொட்ட 2020 க்ரெட்டா... ஹூண்டாயின் ஒரே நம்பிக்கை இது மட்டும் தான்..

கடந்த மார்ச் மாத அறிமுகத்தில் இருந்து முன்பதிவில் 30,000 என்ற மைல்க்கல்லை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் க்ரெட்டா மாடல் கடந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

முன்பதிவில் புதிய மைல்கல்லை தொட்ட 2020 க்ரெட்டா... ஹூண்டாயின் ஒரே நம்பிக்கை இது மட்டும் தான்..

இந்திய சந்தையில் கொரியன் ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாயின் சிறப்பான விற்பனை மாடல்களுள் க்ரெட்டாவும் ஒன்றாக உள்ளது. இந்த நிலையை இன்னும் சில வருடங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் அப்டேட் செய்யப்பட்ட வெர்சனில் இந்த மாடலை ஹூண்டாய் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது.

முன்பதிவில் புதிய மைல்கல்லை தொட்ட 2020 க்ரெட்டா... ஹூண்டாயின் ஒரே நம்பிக்கை இது மட்டும் தான்..

அதன்பின் கொரோனா வைரஸினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தாலும், தயாரிப்பு நிறுவனம் துரிதமாக செயல்பட்டு தேவையான அளவு க்ரெட்டா மாடல்களை பெரும்பான்மையான அனைத்து டீலர்ஷிப்களில் நிரப்பிவிட்டது. இதனால் க்ரெட்டா மாடலை இணையத்தளம் மூலமாக முன்பதிவு செய்தவர்களுக்கு திட்டமிட்டு தேதியில் டெலிவிரி செய்ய முடிந்தது.

முன்பதிவில் புதிய மைல்கல்லை தொட்ட 2020 க்ரெட்டா... ஹூண்டாயின் ஒரே நம்பிக்கை இது மட்டும் தான்..

இதன் காரணமாக கடந்த மே மாதத்தில் மட்டும் 3212 யூனிட்கள் விற்பனையை சந்தையில் இந்த கார் பதிவு செய்தது. இது ஹூண்டாய் நிறுவனம் ஷோரூம்களில் நிரப்பிய க்ரெட்டா மாடல்களின் எண்ணிக்கையில் (6,883 யூனிட்கள்) பாதியாகும்.

முன்பதிவில் புதிய மைல்கல்லை தொட்ட 2020 க்ரெட்டா... ஹூண்டாயின் ஒரே நம்பிக்கை இது மட்டும் தான்..

எனவே ஊரடங்கினால் மற்ற தயாரிப்பு நிறுவனங்களை போல நஷ்டத்தை சந்தித்த ஹூண்டாய் நிறுவனத்திற்கு க்ரெட்டா மாடல் மிக பெரிய அளவில் உதவியுள்ளது என்பதில் மாற்று கருத்து இல்லை. அதேபோல் க்ரெட்டா காரை டீசல் என்ஜின் உடன் வாங்கவே அதிக பேர் விரும்பியுள்ளனர் என்பது இதன் கடந்த மாத விற்பனை நிலவரத்தை பார்க்கும்போது தெரிய வருகிறது.

முன்பதிவில் புதிய மைல்கல்லை தொட்ட 2020 க்ரெட்டா... ஹூண்டாயின் ஒரே நம்பிக்கை இது மட்டும் தான்..

ஏனெனில் மொத்தம் விற்பனையான க்ரெட்டா மாடல்களில் 55% டீசல் வேரியண்ட்களும், 45% பெட்ரோல் வேரியண்ட்களும் அடங்கும். அதேநேரம் புதிய தலைமுறை க்ரெட்டா மாடலில் முதன்முறையாக வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

முன்பதிவில் புதிய மைல்கல்லை தொட்ட 2020 க்ரெட்டா... ஹூண்டாயின் ஒரே நம்பிக்கை இது மட்டும் தான்..

இந்த அம்சங்களில் பனாராமிக் சன்ரூஃப், பெடல் ஷிஃப்டர்கள், ஆட்டோ ஹோல்ட் உடன் எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக், பின் இருக்கை ஹெட்ரெஸ்ட் குஷின், பின் டிஸ்க் ப்ரேக் மற்றும் ட்யூல் எக்ஸாஸ்ட் குழாய்கள் உள்ளிட்டவை அடங்கும். புதிய க்ரெட்டா மாடலுக்கு மூன்று என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

முன்பதிவில் புதிய மைல்கல்லை தொட்ட 2020 க்ரெட்டா... ஹூண்டாயின் ஒரே நம்பிக்கை இது மட்டும் தான்..

இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் விஜிடி டீசல் என்ஜின்கள் ஒரே 113 பிஎச்பி பவரையும், முறையே 144 என்எம் மற்றும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகின்றன. மூன்றாவது என்ஜின் தேர்வான 1.4 லிட்டர் டர்போ ஜிடிஐ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 138 பிஎச்பி மற்றும் 242 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கவல்லது.

முன்பதிவில் புதிய மைல்கல்லை தொட்ட 2020 க்ரெட்டா... ஹூண்டாயின் ஒரே நம்பிக்கை இது மட்டும் தான்..

இந்த அனைத்து என்ஜின் தேர்வுகளுக்கும் நிலையான 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், 1.5 லி டீசல் என்ஜினிற்கு கூடுதல் தேர்வாக டார்க் கன்வெர்டரும், 1.4 லி டர்போ பெட்ரோலுக்கு 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸும், 1.5 லி பெட்ரோலுக்கு ஐவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் வழங்கப்படுகின்றன.

Most Read Articles

English summary
2020 Hyundai Creta Bookings Crosses 30,000 Milestone Within Three Months Of Launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X