2020 ஹூண்டாய் க்ரெட்டாவின் விலை அதிகப்பட்சமாக ரூ.61 ஆயிரம் வரையில் அதிகரிப்பு... முழு விபரம் இதோ...

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகமான 2020 ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு புதிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் சேர்க்கப்பட்டுள்ளது. அதேநேரம் மற்ற ட்ரிம் நிலைகளின் விலைகளும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இவை குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 ஹூண்டாய் க்ரெட்டாவின் விலை அதிகப்பட்சமாக ரூ.61 ஆயிரம் வரையில் அதிகரிப்பு... முழு விபரம் இதோ...

ஹூண்டாய் மோட்டார்ஸின் சமீபத்திய அறிமுகமான க்ரெட்டா, கியா செல்டோஸ் உள்பட பிரிவில் உள்ள எஸ்யூவி கார்கள் அனைத்தை காட்டிலும் விற்பனையில் கடந்த சில மாதங்களாக ஆதிக்கம் செலுத்தி வருவதை அறிவீர்கள்.

2020 ஹூண்டாய் க்ரெட்டாவின் விலை அதிகப்பட்சமாக ரூ.61 ஆயிரம் வரையில் அதிகரிப்பு... முழு விபரம் இதோ...

ஏனெனில் மற்ற போட்டி கார்களுக்கு இணையான எக்ஸ்ஷோரூம் விலைகளில் இரண்டாம் தலைமுறை க்ரெட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவே இதற்கு அதிகளவில் வாடிக்கையாளர்களை குறைந்த காலத்தில் பெற்று தந்துள்ளது.

2020 ஹூண்டாய் க்ரெட்டாவின் விலை அதிகப்பட்சமாக ரூ.61 ஆயிரம் வரையில் அதிகரிப்பு... முழு விபரம் இதோ...

இதற்கிடையில்தான் தற்போது தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு புதிய எண்ட்ரீ-லெவல் பெட்ரோல் வேரியண்ட்டை சேர்த்துள்ளது. அதே நேரம் இந்த எஸ்யூவி காரின் மற்ற ட்ரிம் நிலைகளின் விலைகளும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

2020 ஹூண்டாய் க்ரெட்டாவின் விலை அதிகப்பட்சமாக ரூ.61 ஆயிரம் வரையில் அதிகரிப்பு... முழு விபரம் இதோ...

ஹூண்டாய் க்ரெட்டா, 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ-டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ற மூன்று விதமான என்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 1.5 லிட்டர், இன்லைன்-4 பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 115 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி (அல்லது ஐவிடி) கியர்பாக்ஸ் உடன் வெளிப்படுத்தும்.

2020 ஹூண்டாய் க்ரெட்டாவின் விலை அதிகப்பட்சமாக ரூ.61 ஆயிரம் வரையில் அதிகரிப்பு... முழு விபரம் இதோ...
1.5L Petrol
Variant New Price Old Price
E Rs9,81,890 -
EX Rs10,60,900 Rs9,99,000
S Rs11,83,900 Rs11,72,000
SX Rs13,57,900 Rs13,46,000
SX iVT Rs15,05,900 Rs14,94,000
SX (O) iVT Rs16,26,900 Rs16,15,000

இந்த பெட்ரோல் என்ஜின் தற்போது புதியதாக சேர்க்கப்பட்டுள்ள ஆரம்ப நிலை இ ட்ரிம்மில் கிடைக்கும். இதன் விலை ரூ.9,81,890 ஆகும். இதுதான் இனி ஹூண்டாய் க்ரெட்டாவின் ஆரம்ப விலையாகும். இதற்கு முன் ஆரம்ப விலை ரூ.9.99 லட்சமாக (இஎக்ஸ்) இருந்தது. இந்த என்ஜின் உடன் வழங்கப்படும் ட்ரிம்களின் விலைகள் அதிகப்பட்சமாக ரூ.61 ஆயிரம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளன.

2020 ஹூண்டாய் க்ரெட்டாவின் விலை அதிகப்பட்சமாக ரூ.61 ஆயிரம் வரையில் அதிகரிப்பு... முழு விபரம் இதோ...

1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு, இன்லைன்-4 டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 115 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இந்த டர்போ டீசல் என்ஜின் உடன் ஆரம்ப நிலை இ வேரியண்ட்டின் விலையில் மாற்றமில்லை. ரூ.9.99 லட்சமாக தான் தொடருகிறது. ஆனால் மற்ற ட்ரிம்களின் விலைகள் கிட்டத்தட்ட ரூ.12,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன.

1.5L Turbo-Diesel Price List
E Rs9,99,000 Rs9,99,000
EX Rs11,60,900 Rs11,49,000
S Rs12,88,900 Rs12,77,000
SX Rs14,62,900 Rs14,51,000
SX (O) Rs15,90,900 Rs15,79,000
SX AT Rs16,10,900 Rs15,99,000
SX (O) AT Rs17,31,900 Rs17,20,000
2020 ஹூண்டாய் க்ரெட்டாவின் விலை அதிகப்பட்சமாக ரூ.61 ஆயிரம் வரையில் அதிகரிப்பு... முழு விபரம் இதோ...

கடைசி என்ஜின் தேர்வான 1.4 லிட்டர், டர்போசர்ஜ்டு, இன்லைன்-4 என்ஜின் அதிகப்பட்சமாக 140 பிஎச்பி மற்றும் 242 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கக்கூடியது. இதற்கு ஒரே ஒரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வாக பெடல் ஷிஃப்டருடன் 7-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது.

2020 ஹூண்டாய் க்ரெட்டாவின் விலை அதிகப்பட்சமாக ரூ.61 ஆயிரம் வரையில் அதிகரிப்பு... முழு விபரம் இதோ...

இந்த டர்போ-பெட்ரோல் வேரியண்ட்களுக்கு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படவில்லை. ஆனால் கியா செல்டோஸின் டர்போ-பெட்ரோல் வேரியண்ட்களுக்கு வழங்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த என்ஜின் தேர்வு டாப் எஸ்எக்ஸ் ட்ரிம் நிலைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

1.4L Turbo-Petrol
SX DCT Rs16,27,900 Rs16,16,000
SX (O) DCT Rs17,31,900 Rs17,20,000

இந்த வகையில் இந்த என்ஜினை பெறும் எஸ்எக்ஸ் டிசிடி மற்றும் எஸ்எக்ஸ் (ஒ) டிசிடி ட்ரிம் நிலைகளின் விலைகள் தலா ரூ.11,000 அதிகரிக்கப்பட்டுள்ளன. விற்பனையில் ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு மாருதி எஸ்-க்ராஸ், ரெனால்ட் டஸ்டர், நிஸான் கிக்ஸ் மற்றும் கூட்டணி நிறுவனத்தின் கியா செல்டோஸ் உள்ளிட்டவை போட்டியாக உள்ளன.

Most Read Articles
English summary
2020 Hyundai Creta Gets A Price Hike And New Entry-Level Variant
Story first published: Tuesday, October 6, 2020, 1:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X