முன்பதிவுகளை வாரி குவிக்கும் ஹூண்டாய் கிரெட்டா... எவ்வளவு என தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

புதிய ஹூண்டாய் கிரெட்டா கார் முன்பதிவுகளை வாரி குவித்து வருகிறது.

முன்பதிவுகளை வாரி குவிக்கும் ஹூண்டாய் கிரெட்டா... எவ்வளவு என தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

இந்திய எஸ்யூவி சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ஹூண்டாய் நிறுவனம் மீதான நம்பகத்தன்மை கிரெட்டாவின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. இந்த சூழலில் கிரெட்டா குறித்த புதிய தகவல் ஒன்றை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது.

முன்பதிவுகளை வாரி குவிக்கும் ஹூண்டாய் கிரெட்டா... எவ்வளவு என தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

புதிய கிரெட்டா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை வாரி குவித்துள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. அதே சமயம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.

முன்பதிவுகளை வாரி குவிக்கும் ஹூண்டாய் கிரெட்டா... எவ்வளவு என தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில் ஹூண்டாய் நிறுவனம் புத்தம் புதிய கிரெட்டா காரை வெளியிட்டது. அதன்பின் கடந்த மார்ச் மாதம் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வந்தது. ஹூண்டாய் நிறுவனத்திற்கு அதிக விற்பனை எண்ணிக்கைகளை ஈட்டி தரும் கார்களில் ஒன்றாக கிரெட்டா தொடர்கிறது.

முன்பதிவுகளை வாரி குவிக்கும் ஹூண்டாய் கிரெட்டா... எவ்வளவு என தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை, சந்தைப்படுத்துதல் மற்றும் சேவைகள் பிரிவின் இயக்குனர் தருண் கார்க் கூறுகையில், ''கடந்த மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளையும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களையும் புத்தம் புதிய ஹூண்டாய் கிரெட்டா பெற்றுள்ளது.

முன்பதிவுகளை வாரி குவிக்கும் ஹூண்டாய் கிரெட்டா... எவ்வளவு என தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

இவை அனைத்தும் வெறும் நான்கே மாதங்களில் நடந்துள்ளது. புத்தம் புதிய ஹூண்டாய் கிரெட்டா காரின் மேம்பட்ட தோற்றம், அட்டகாசமான வசதிகள் மற்றும் சிறப்பான செயல்திறன் ஆகியவை இந்த கடினமான நேரத்திலும் கூட இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்களின் மனதை வென்றுள்ளன'' என்றார்.

முன்பதிவுகளை வாரி குவிக்கும் ஹூண்டாய் கிரெட்டா... எவ்வளவு என தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

ஹூண்டாய் கிரெட்டா காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த இன்ஜின்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமானது ஆகும். 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் இந்த இன்ஜின்கள் கிடைக்கின்றன.

முன்பதிவுகளை வாரி குவிக்கும் ஹூண்டாய் கிரெட்டா... எவ்வளவு என தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

இதுதவிர 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 7 ஸ்பீடு ட்யூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (Dual Clutch Transmission - DCT) தேர்வுடன் இந்த இன்ஜின் கிடைக்கிறது. Eco, Comfort மற்றும் Sport ஆகிய டிரைவிங் மோட்கள் உடனும், Snow, Sand மற்றும் Mud ஆகிய டிராக்ஸன் கண்ட்ரோல் மோட்களுடனும் ஹூண்டாய் கிரெட்டா கார் வருகிறது.

முன்பதிவுகளை வாரி குவிக்கும் ஹூண்டாய் கிரெட்டா... எவ்வளவு என தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

ஹூண்டாய் நிறுவனம் மார்ச் மாதம் கிரெட்டா காரை விற்பனைக்கு அறிமுகம் செய்த பின்னர் ஏப்ரல் மாதத்தில் ஊரடங்கு தீவிரமாக இருந்தது. அதன்பின் மே மாதம்தான் ஓரளவிற்கு தளர்வுகள் வழங்கப்பட்டன. அப்படிப்பட்ட சூழலிலும் ஹூண்டாய் கிரெட்டா காரின் விற்பனை மற்றும் முன்பதிவுகள் இவ்வளவு சிறப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
New Hyundai Creta SUV Gets 55,000 Bookings. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X