புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் டீசல் மாடலுக்கு பெரும் வரவேற்பு!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் டீசல் மாடலுக்கு பெரும் வரவேற்பு!

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா காரின் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இன்னும் ஒரு மணிநேரத்தில் துவங்க இருக்கிறது. இந்த நிலையில், இந்த காருக்கு கிடைத்துள்ள முன்பதிவு விபரம் வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் டீசல் மாடலுக்கு பெரும் வரவேற்பு!

கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி நடிகர் ஷாரூக்கான் முன்னிலையில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2ந் தேதி முதல் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு முன்பதிவும் துவங்கப்பட்டது. முன்பதிவு துவங்கப்பட்டதில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் டீசல் மாடலுக்கு பெரும் வரவேற்பு!

இந்த நிலையில், புதிய ஹூண்டாய் க்ரெட்டா அறிமுக நிகழ்வு இன்று முற்பகல் துவங்கியது. இந்த நிகழ்வின்போது, ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு கிடைத்துள்ள முன்பதிவு விபரம் வெளியடப்பட்டது. இதன்படி, முன்பதிவு துவங்கப்பட்டு 15 நாட்களில் 14,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் டீசல் மாடலுக்கு பெரும் வரவேற்பு!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு கிடைத்துள்ள முன்பதிவில் 50 சதவீதம் அளவுக்கு டீசல் மாடலுக்கே கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இன்று பிற்பகல் 3.15 மணிக்கு துவங்க இருக்கும் நிகழ்ச்சியில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் டீசல் மாடலுக்கு பெரும் வரவேற்பு!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் 5 விதமான வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலானது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே வருகிறது.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் டீசல் மாடலுக்கு பெரும் வரவேற்பு!

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் போன்ற பல முக்கிய அம்சங்களை பெற்றிருக்கும். இந்த காரில் 17 அங்குல டைமணட் கட் அலாய் வீல்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் வசதி கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் டீசல் மாடலுக்கு பெரும் வரவேற்பு!

இந்த எஸ்யூவியில் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 50 விதமான வசதிகளை தரும் புளூலிங்க் செயலி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், வாய்ஸ் கமாண்ட் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை இடம்பெறுகிறது.

பாதுகாப்பு அம்சங்களிலும் குறைவிருக்காது. ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், லேன் சேஞ்ச் இண்டிகேட்டர், எலெக்ட்ரோ க்ரோமிக் மிரர், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் டீசல் மாடலுக்கு பெரும் வரவேற்பு!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ரூ.10 லட்சம் முதல் ரூ.16.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களை அடுத்த ஒரு சில மணிநேரத்தில் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் உடனடியாக வழங்க இருக்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, March 16, 2020, 14:02 [IST]
English summary
Hyundai Motors has received 14,000 bookings for the all new Creta in India since its bookings started earlier this month.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+