ரூ.9.99 லட்சத்தில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

சூப்பர் ஹிட் எஸ்யூவி

இந்திய எஸ்யூவி கார் மார்க்கெட்டின் சூப்பர் ஹிட் மாடல் என்ற பெருமைக்குரியது ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி. இந்த நிலையில், கடந்த மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று முறைப்படி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

வேரியண்ட்டுகள் விபரம்

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியானது E, EX, S, SX, SX(O) ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். மூன்று எஞ்சின் தேர்வுகள் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் வந்துள்ளது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

வெளிப்புற அம்சங்கள்

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், பூமராங் வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய பம்பர் அமைப்பு, 17 அங்கலு டைமணட் கட் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

உட்புற அம்சங்கள்

உட்புறத்திலும் பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த எஸ்யூவியில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. 7 அங்குல திரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

புளுலிங்க் செயலி

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் நேரடி இணைய வசதியின் துணையுடன் இயங்கும் புளூலிங்க் செயலி மூலமாக பல்வேறு வசதிகளை பெறும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இதற்கான பிரத்யேக புளுலிங்க் செயலியை வைத்து ஸ்மார்ட்வாட்ச் மூலமாக காரின் எஞ்சினை ஸ்டார்ட் செய்வது, ஏசியை ஆன் செய்வது உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற முடியும்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

ஜியோ ஃபென்சிங் வசதி

கார் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் செல்ல முடியாத வகையில் கட்டுப்படுத்தும் ஜியோ ஃபென்சிங் வசதியும் உள்ளது. இதே போன்று 50 விதமான வசதிகளை இந்த கார் வழங்குகிறது. பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் இருக்கைகள், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் இந்த கார் வழங்கும்.

 புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

எஞ்சின் தேர்வுகள்

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட இருக்கிறது. இந்த காரின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

 புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

டர்போ பெட்ரோல் எஞ்சின்

அடுத்து 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும்.

 புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

டீசல் எஞ்சின்

மூன்றவதாக, 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

பாதுகாப்பு அம்சங்கள்

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், ரியர் டிஸ்க் பிரேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய பல முக்கிய பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

வண்ணத் தேர்வுகள்

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியானது 10 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். லாவா ஆரஞ்ச், போலார் ஒயிட், தைபூன் சில்வர், ரெட் மல்பெரி, டைட்டான் க்ரெ, டீப் ஃபாரஸ்ட், கேலக்ஸி புளூ, ஃபான்டம் பிளாக் ஆகிய ஒற்றை வண்ணத் தேர்வுகளிலும், போலார் ஒயிட் மற்றும் கருப்பு, ஆரஞ்ச் மற்றும் ஃபான்டம் பிளாக் ஆகிய இரட்டை வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

விலை விபரம்

முந்தைய மாடலின் ஆரம்ப விலையிலேயே புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி வந்துள்ளது. அதாவது, ரூ.9.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கும். டாப் வேரியண்ட்டிற்கு ரூ.17.20 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். கியா செல்டோஸ், எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, March 16, 2020, 16:59 [IST]
English summary
South Korean carmaker, Hyundai Motors has launched new generation Creta SUV in India starting at Rs.11 lakhs (Ex-showroom, Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+